Author: Farook

Bukhari-6309

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6309. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.5

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book :80


«اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ، سَقَطَ عَلَى بَعِيرِهِ، وَقَدْ أَضَلَّهُ فِي أَرْضِ فَلاَةٍ»


Bukhari-6308

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவது (தவ்பா).4 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:(66:8ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) தவ்பத்தந் நஸூஹா’ எனும் சொற்றொடருக்கு உண்மையான முறையில் தூய்மையான எண்ணத்தோடு (மனப்பூர்வ மாகப் பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புதல்’ என்று பொருள்.

6308. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)

1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் – இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின்

«إِنَّ المُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قَاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ، وَإِنَّ الفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ» فَقَالَ بِهِ هَكَذَا، قَالَ أَبُو شِهَابٍ: بِيَدِهِ فَوْقَ أَنْفِهِ ثُمَّ قَالَ: ” لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ رَجُلٍ نَزَلَ مَنْزِلًا وَبِهِ مَهْلَكَةٌ، وَمَعَهُ رَاحِلَتُهُ، عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَوَضَعَ رَأْسَهُ فَنَامَ نَوْمَةً، فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ رَاحِلَتُهُ، حَتَّى إِذَا اشْتَدَّ عَلَيْهِ الحَرُّ وَالعَطَشُ أَوْ مَا شَاءَ اللَّهُ، قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِي، فَرَجَعَ فَنَامَ نَوْمَةً، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَهُ ” تَابَعَهُ أَبُو عَوَانَةَ، وَجَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، وَقَالَ أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عُمَارَةُ، سَمِعْتُ الحَارِثَ، وَقَالَ شُعْبَةُ، وَأَبُو مُسْلِمٍ اسْمُهُ عُبَيْدُ اللَّهِ كُوفِيٌّ، قَائِدُ الأَعْمَشِ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الحَارِثِ بْنِ سُوَيْدٍ، وَقَالَ أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عُمَارَةَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، وَعَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنِ الحَارِثِ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ


Bukhari-6307

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

பகலிலும் இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).

6307. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் ‘அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

அத்தியாயம்: 80


«وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً»


Bukhari-6306

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது.

அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து) ஓடுமாறு செய்வான்.

(அல்குர்ஆன்: 71:10-12)

அல்லாஹ் கூறுகின்றான்: (இறையச்சம் உடையோரான) அவர்கள் (பிறர் விஷயத்தில்) ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ,தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ (அந்த நிமிடமே மனம் வருந்தி) அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரு வார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்த(த)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 3:135)

6306. இறைத்தூதர்

سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ ” قَالَ: «وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ»


Bukhari-6305

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6305. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியேக) வேண்டுதல் செய்துவிட்டனர்’ அல்லது ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப் பிரார்த்தனை உண்டு; அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர்.’ அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :80


«كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤْلًا» أَوْ قَالَ: «لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فَاسْتُجِيبَ، فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ القِيَامَةِ»


Bukhari-6304

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا، وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الآخِرَةِ»


Bukhari-6303

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6303. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டது. முதல் ஒரு செங்கல்லின் மீது இன்னொரு செங்கல்லை நான் வைத்ததுமில்லை; எந்த பேரீச்ச மரத்தையும் நான் நட்டதுமில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இது குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களின் குடும்பத்தார் சிலரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் வீடு கட்டினார்’ என்று கூறினார்கள்.

நான், ‘தாம் வீடு கட்டுவதற்கு முன்னர் இவ்வாறு அவர்கள் சொல்லியிருக்கக்கூடும்’ என்றேன்.

Book :79


«وَاللَّهِ مَا وَضَعْتُ لَبِنَةً عَلَى لَبِنَةٍ، وَلاَ غَرَسْتُ نَخْلَةً، مُنْذُ قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ سُفْيَانُ: فَذَكَرْتُهُ لِبَعْضِ أَهْلِهِ، قَالَ: وَاللَّهِ لَقَدْ بَنَى. قَالَ سُفْيَانُ: قُلْتُ: فَلَعَلَّهُ قَالَ قَبْلَ أَنْ يَبْنِيَ


Bukhari-6302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 கட்டடங்கள் தொடர்பாக வந்துள்ளவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆடுகளை (அல்லது கறுப்பு நிற ஒட்டகங்களை) மேய்க்கும் இடையர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டி பெருமை யடித்துக்கொள்வது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.76

6302. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை. 77

Book : 79


«رَأَيْتُنِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنَيْتُ بِيَدِي بَيْتًا يُكِنُّنِي مِنَ المَطَرِ، وَيُظِلُّنِي مِنَ الشَّمْسِ، مَا أَعَانَنِي عَلَيْهِ أَحَدٌ مِنْ خَلْقِ اللَّهِ»


Bukhari-6301

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து திசைதிருப்பக்கூடிய ஒவ்வொரு விஷயமும் வீணானதே’ என்பது குறித்தும், ஒருவர் தம் நண்பரிடம் வா. சூதாடுவோம்’ என அழைப்பது குறித்தும். அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணாண பேச்சு களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து மாற்றி விடவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக்கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனை தான் உண்டு. (31:6)

6301. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொல்லட்டும். தம் நண்பனிடம், ‘வா சூதாடுவோம்’ என்று கூறியவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ: بِاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ


Next Page » « Previous Page