Author: Farook

Bukhari-6204

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 113 ஒருவருக்கு வேறு குறிப்புப் பெயர் இருக்கவே ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயர் சூட்டுவது.

6204. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) அவர்களுக்கு ‘அபூ துராப்’ (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயரே மிகவும் பிரியமானதாக இருந்தது. மேலும், அப்பெயர் சொல்லி தாம் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்களுக்கு ‘அபூ துராப்’ என்று நபி(ஸல்) அவர்களே பெயர் சூட்டினார்கள். (அப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டதற்கான காரணம்:) ஒரு நாள் அலீ(ரலி) அவர்கள் (தம் துணைவியாரான) ஃபாத்திமா(ரலி) அவர்களின் மீது (ஏதோ காரணத்திற்காகக்) கோப்பட்டு வெளியேறிச் சென்று பள்ளிவாசலில் ஒரு சுவரில் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். அவர்களைத் (தேடியவாறு) பின்தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஒருவர், ‘அவர் இதோ பள்ளிவாசலில் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறார்’ என்று கூறினார். எனவே, அலீ(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். (படுத்திருந்தால்) அலீ(ரலி) அவர்களின் முதுகில் நிறைய மண் படிந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அலீயின் முதுகிலிருந்த

إِنْ كَانَتْ أَحَبَّ أَسْمَاءِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَيْهِ لَأَبُو تُرَابٍ، وَإِنْ كَانَ لَيَفْرَحُ أَنْ يُدْعَى بِهَا، وَمَا سَمَّاهُ أَبُو تُرَابٍ إِلَّا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، غَاضَبَ يَوْمًا فَاطِمَةَ فَخَرَجَ، فَاضْطَجَعَ إِلَى الجِدَارِ إِلَى المَسْجِدِ، فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتْبَعُهُ، فَقَالَ: هُوَ ذَا مُضْطَجِعٌ فِي الجِدَارِ، فَجَاءَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَأَ ظَهْرُهُ تُرَابًا، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ وَيَقُولُ: «اجْلِسْ يَا أَبَا تُرَابٍ»


Bukhari-6203

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 112 சிறுவனுக்குக் குறிப்புப் பெயர் சூட்டுவதும், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஒருவருக்குக் குறிப்புப் பெயர் சூட்டுவதும் (செல்லும்).232

6203. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ‘அபூ உமைர்’ என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள் (எம் விட்டிற்கு வந்தால்), ‘அபூ உமைரே! பகுதி உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?’ என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராம் விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். 223

Book : 78


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ خُلُقًا، وَكَانَ لِي أَخٌ يُقَالُ لَهُ أَبُو عُمَيْرٍ – قَالَ: أَحْسِبُهُ – فَطِيمًا، وَكَانَ إِذَا جَاءَ قَالَ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ» نُغَرٌ كَانَ يَلْعَبُ بِهِ، فَرُبَّمَا حَضَرَ الصَّلاَةَ وَهُوَ فِي بَيْتِنَا، فَيَأْمُرُ بِالْبِسَاطِ الَّذِي تَحْتَهُ فَيُكْنَسُ وَيُنْضَحُ، ثُمَّ يَقُومُ وَنَقُومُ خَلْفَهُ فَيُصَلِّي بِنَا


Bukhari-6202

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6202. அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான ‘அன்ஜஷா’ (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்றார்கள். 231

Book :78


كَانَتْ أُمُّ سُلَيْمٍ فِي الثَّقَلِ، وَأَنْجَشَةُ غُلاَمُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسُوقُ بِهِنَّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَنْجَشُ، رُوَيْدَكَ سَوْقَكَ بِالقَوَارِيرِ»


Bukhari-6201

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 111 நண்பரின் பெயரில் சில எழுத்துகளைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது.228 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னை ‘அபூஹிர்!’என அழைத்தார்கள்.229

6201. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்’ என்றார்கள். நான், (சலாமுக்க பதில் கூறும் முகமாக) ‘வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்’ (அவரின் மீதும் இறைசாந்தி பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் பொழியட்டும்) என்று கூறினேன். மேலும், ‘நாங்கள் பார்க்க முடியாதவற்றை (நபி) அவர்கள் பார்க்கிறார்கள்’ என்றும் ஆயிஷா(ரலி) கூறினார். 230

Book : 78


«يَا عَائِشَ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلاَمَ» قُلْتُ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ، قَالَتْ: وَهُوَ يَرَى مَا لاَ نَرَى


Bukhari-6200

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 110 ‘வலீத்’ எனப் பெயர் சூட்டுவது

6200. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை தொழுகையில்) நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி (‘குனூத்’ எனும் சிறப்புப் பிரார்த்தனையில் பின்வருமாறு) கூறினார்கள்:

இறைவா! வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரையும் மக்காவிலுள்ள ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை) கொண்ட முளர் குல்த்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக! 227

Book : 78


لَمَّا رَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: «اللَّهُمَّ أَنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، وَسَلَمَةَ بْنَ هِشَامٍ، وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، وَالمُسْتَضْعَفِينَ بِمَكَّةَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِي يُوسُفَ»


Bukhari-6199

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6199. முஃகீரா ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம்(ரலி) அவர்கள் இறந்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. 225

இதே ஹதீஸை அபூ பக்ரா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.226

Book :78


«انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ» رَوَاهُ أَبُو بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6198. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அக்குழந்தைக்கு நபி(ஸல்) அவர்கள் ‘இப்ராஹீம்’ என்று பெயர் சூட்டி பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயிலிட்டார்கள். அவனுக்காக சுபிட்சம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்துவிட்டு என்னிடம் அவனைத் தந்தார்கள்.

அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும். 224

Book :78


وُلِدَ لِي غُلاَمٌ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَسَمَّاهُ إِبْرَاهِيمَ، فَحَنَّكَهُ بِتَمْرَةٍ، وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ، وَدَفَعَهُ إِلَيَّ»، وَكَانَ أَكْبَرَ وَلَدِ أَبِي مُوسَى


Bukhari-6197

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6197. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய (‘அபுல் காசிம்’ எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். என்னைக் கனவில் கண்டவர் உண்மையில் என்னைத்தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.223

Book :78


«سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»


Bukhari-6196

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6196. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், (‘அபுல் காசிம்’ எனும்) என் குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன்’ என்று கூறினார்கள். 221

இதை அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.222

அத்தியாயம் : 78


«سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ أَقْسِمُ بَيْنَكُمْ»

وَرَوَاهُ أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6195. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

(தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இவருக்குப் பாலூட்டக் கூடிய செவிலித் தாய் சொர்க்கத்தில் இருக்கிறார்’ என்றார்கள்.220

Book :78


لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»


Next Page » « Previous Page