Author: Farook

Bukhari-6194

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம் : 109

இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது.

‘நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219

6194. இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘தாங்கள் நபி (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘(ஆம், பார்த்திருக்கிறேன். எனினும்,) அவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் (ரலி) உயிர் வாழ்ந்திருப்பார். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த இறைத்தூதரும் இல்லை (என்பதே இறைவனின் முடிவாகும்.)

Book : 78


قُلْتُ لِابْنِ أَبِي أَوْفَى: رَأَيْتَ إِبْرَاهِيمَ ابْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «مَاتَ صَغِيرًا، وَلَوْ قُضِيَ أَنْ يَكُونَ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيٌّ عَاشَ ابْنُهُ، وَلَكِنْ لاَ نَبِيَّ بَعْدَهُ»


Bukhari-6193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6193. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

என் பாட்டனார் (ஹஸ்ணன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் பெயரென்ன?’ என்று கேட்டார்கள். அவர் ஹஸ்ணன்(முரடு) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை; நீங்கள் (இனிமேல்) ‘ஸஹ்ல்’ (மென்மை)’ என்றார்கள். அவர், ‘என் தந்தை எனக்குச் சூட்டிய பெயரை நான் மாற்றமாட்டேன்’ என்றார்.

அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது. 218

Book :78


فَحَدَّثَنِي: أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ» قَالَ: اسْمِي حَزْنٌ، قَالَ: «بَلْ أَنْتَ سَهْلٌ» قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: «فَمَا زَالَتْ فِينَا الحُزُونَةُ بَعْدُ»


Bukhari-6192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6192. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸைனப்(ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது ‘அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்’ என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள்.217

Book :78


أَنَّ زَيْنَبَ كَانَ اسْمُهَا بَرَّةَ، فَقِيلَ: تُزَكِّي نَفْسَهَا، فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْنَبَ


Bukhari-6191

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 108 ஒரு பெயரை அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது.216

6191. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ(ரலி) அவர்களின் புதல்வர் ‘முன்திர்’ என்பவர் பிறந்தவுடன் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அக்குழந்தையைத் தம் மடியில் வைத்தார்கள். அப்போது (குழந்தையின் தந்தை) அபூ உசைத்(ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (திடீரென) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் நடந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. உடனே அபூ உசைத்(ரலி) அவர்கள் தம் புதல்வரை நபியவர்களின் மடியிலிருந்து எடுத்துவிடுமாறு கூற, அவ்வாறே (குழந்தை) தூக்கப்பட்டது. (சிறிது நேரத்தில்) தன்னிலைக்குத் திரும்பிய நபி(ஸல்) அவர்கள் ‘அந்த குழந்தை எங்கே?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ உசைத்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! குழந்தையை (வீட்டுக்கு) அனுப்பிவிட்டோம்’ என்று கூறினார். ‘அக்குழந்தையின் பெயரென்ன?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, ‘இன்னது’ என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூ உசைத் கூறினார்கள். (அப்பெயர் பிடிக்காததால்)

أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وُلِدَ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ، وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ، فَلَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ بَيْنَ يَدَيْهِ، فَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ، فَاحْتُمِلَ مِنْ فَخِذِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفَاقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ الصَّبِيُّ» فَقَالَ أَبُو أُسَيْدٍ: قَلَبْنَاهُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «مَا اسْمُهُ» قَالَ: فُلاَنٌ، قَالَ: «وَلَكِنْ أَسْمِهِ المُنْذِرَ» فَسَمَّاهُ يَوْمَئِذٍ المُنْذِرَ


Bukhari-6190

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 107 ‘அல்ஹஸ்க்ஷ்ன்’ (முரடு) எனும் பெயர்

6190. முஸய்யப் இப்னு ஹஸ்ணன்(ரலி) அறிவித்தார்.

என் தந்தை (ஹஸ்ணன் இப்னு அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் பெயரென்ன?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஹஸ்ணன்’ (முரடு) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(இல்லை) நீங்கள் (இனிமேல்) ‘ஸஹ்ல்’ (மென்மை)’ என்றார்கள். அவர், ‘என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்’ என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குண நலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.

இதை ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book : 78


أَنَّ أَبَاهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ» قَالَ: حَزْنٌ، قَالَ: «أَنْتَ سَهْلٌ» قَالَ: لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي قَالَ ابْنُ المُسَيِّبِ: «فَمَا زَالَتِ الحُزُونَةُ فِينَا بَعْدُ»

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، وَمَحْمُودٌ هُوَ ابْنُ غَيْلاَنَ، قَالاَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ ابْنِ المُسَيِّبِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، بِهَذَا


Bukhari-6189

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6189. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினர். அப்போது மக்கள், ‘உம்மை நாங்கள் ‘அபுல் காசிம்’ (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்து உமக்கு மகிழ்ச்சியூட்டமாட்டோம்’ என்று கூறினர். எனவே, அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயர் சூட்டுங்கள்’ என்றார்கள். 215

Book :78


وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ القَاسِمَ، فَقَالُوا: لاَ نَكْنِيكَ بِأَبِي القَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَسْمِ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ»


Bukhari-6188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6188. அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால் என்னுடைய (அபுல் காசிம் எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 214

Book :78


«سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي»


Bukhari-6186

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 105

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான பெயர்.211

6186. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), ‘உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு ‘அபுல் காசிம்’ எனும் பெயர் இருப்பதே காரணம்)’ என்று சொன்னோம். எனவே, அவர் நபி(ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!’ என்று கூறினார்கள்.212

Book : 78


وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ القَاسِمَ، فَقُلْنَا: لاَ نَكْنِيكَ أَبَا القَاسِمِ وَلاَ كَرَامَةَ، فَأَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «سَمِّ ابْنَكَ عَبْدَ الرَّحْمَنِ»


Bukhari-6185

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 104 ‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்’ என்று கூறுவது. அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘எங்கள் தந்தையரும் எங்கள் அன்னையரும் தங்களுக்கு அர்ப்பணமா கட்டும்’ என்று சொன்னார்கள்.209

6185. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்கள் தம்முடனிருந்த (தம் துணைவியாரான) ஸஃபிய்யா(ரலி) அவர்களைத் தம் வாகனத்தில் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது (நபியவர்களின்) அந்த ஒட்டகம் இடறி விழுந்தது. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே வீழ்த்தப்பட்டனர். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணைக் கவனி!’ என்று

أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفِيَّةُ، مُرْدِفُهَا عَلَى رَاحِلَتِهِ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ عَثَرَتِ النَّاقَةُ، فَصُرِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمَرْأَةُ، وَأَنَّ أَبَا طَلْحَةَ – قَالَ: أَحْسِبُ – اقْتَحَمَ عَنْ بَعِيرِهِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، هَلْ أَصَابَكَ مِنْ شَيْءٍ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ» فَأَلْقَى أَبُو طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ فَقَصَدَ قَصْدَهَا، فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا، فَقَامَتِ المَرْأَةُ، فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا، فَسَارُوا حَتَّى إِذَا كَانُوا بِظَهْرِ المَدِينَةِ – أَوْ قَالَ: أَشْرَفُوا عَلَى المَدِينَةِ – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ» فَلَمْ يَزَلْ يَقُولُهَا حَتَّى دَخَلَ المَدِينَةَ


Bukhari-6184

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103 ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று சொல்வது.206 இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.207

6184. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தவிர வேறெவருக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தாய் தந்தையரை அர்ப்பணிப்பதாகக் கூறியதை நான் கேட்டதில்லை. (ஸஅத் அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகாட்டும்’ என்று கூறியதைக் கேட்டேன். இது உஹுதுப் போர் நாளில் நடைபெற்றதாகவே எண்ணுகிறேன். 208

Book : 78


مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي أَحَدًا غَيْرَ سَعْدٍ، سَمِعْتُهُ يَقُولُ: «ارْمِ فَدَاكَ أَبِي وَأُمِّي» أَظُنُّهُ يَوْمَ أُحُدٍ


Next Page » « Previous Page