Author: Farook

Bukhari-6112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6112. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (சாலையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்! பிறகு, அதன் முடிச்சையும் அதன் பை(உறை)யையும் பாதுகாத்து வைத்திரு! பிறகு (யாரும் உரிமை கோராவிட்டால்) நீயே அதனைச் செலவழித்துக் கொள்! பின்னர் அதன் உரிமையாளர் உன்னிடம் (அதன் அடையாளத்தைக் கூறியபடி) வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்து விடு!’ என்றார்கள்.

அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதை நீ பிடித்துக் கொள். ஏனெனில், அது உனக்கு உரியது; அல்லது உன் சகோதரருக்கு உரியது; அல்லது ஓநாய்க்குரியது’ என்றார்கள். அந்த மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது? என்று கேட்டார். (இதை அவர் கேட்ட) உடன் கோபத்தால் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரண்டு கன்னங்களும் சிவந்துவிட்டன’ அல்லது ‘அவர்களின் முகம் சிவந்துவிட்டது’. பிறகு ‘உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ اللُّقَطَةِ، فَقَالَ: «عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا، ثُمَّ اسْتَنْفِقْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَضَالَّةُ الغَنَمِ؟ قَالَ: «خُذْهَا، فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَضَالَّةُ الإِبِلِ؟ قَالَ: فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ – أَوِ احْمَرَّ وَجْهُهُ – ثُمَّ قَالَ: «مَا لَكَ وَلَهَا، مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا، حَتَّى يَلْقَاهَا رَبُّهَا»


Bukhari-6111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6111. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுது கொண்டிருக்கையில் பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (சுவரில் உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். அதனால் கோபமடைந்த அவர்கள் அதை (மட்டை ஒன்றினால்) தம் கரத்தாலேயே சுரண்டிவிட்டார்கள். பிறகு, ‘நீங்கள் தொழுகையில் இருக்கும்போது இறைவன் உங்கள் எதிரே இருக்கிறான். எனவே, எவரும் தொழுகையில் இருக்கும்போது தம் முகத்துக்கு எதிரே உமிழ வேண்டாம்’ என்றார்கள்.

Book :78


بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، رَأَى فِي قِبْلَةِ المَسْجِدِ نُخَامَةً، فَحَكَّهَا بِيَدِهِ، فَتَغَيَّظَ، ثُمَّ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا كَانَ فِي الصَّلاَةِ، فَإِنَّ اللَّهَ حِيَالَ وَجْهِهِ، فَلاَ يَتَنَخَّمَنَّ حِيَالَ وَجْهِهِ فِي الصَّلاَةِ»


Bukhari-6110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6110. அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. ‘இறைத்தூதர் அவர்களே!) இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு (ஃபஜ்ருடைய ஜமாஅத்திற்கு)ச் செல்வதில்லை’ என்று கூறினார். இதைக் கேட்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடிமையாகக் கோபம் கொண்டதை கண்டேன். அப்போது அவர்கள், ‘மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துகிறவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் யாரேனும் மக்களுக்கு (தலைமையேற்றுத்) தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் நோயாளிகளும் முதியோரும் அலுவல் உடையோரும் இருக்கின்றனர்’ என்று கூறினார்கள்.

Book :78


أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ، مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا، قَالَ: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ، قَالَ: فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ المَرِيضَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ»


Bukhari-6109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75 இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமையாக நடந்து கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே. அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப் பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளுங்கள். (66:9)124

6109. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் உள்ள திரைச் சீலை ஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறமாறிவிட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். மேலும் அவர்கள், ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப் படங்களை வரைகிறவர்களும் அடங்குவர்’ என்றார்கள்.

Book : 78


دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي البَيْتِ قِرَامٌ فِيهِ صُوَرٌ، فَتَلَوَّنَ وَجْهُهُ ثُمَّ تَنَاوَلَ السِّتْرَ فَهَتَكَهُ، وَقَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ الَّذِينَ يُصَوِّرُونَ هَذِهِ الصُّوَرَ»


Bukhari-6108

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6108. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்’ என்று கூறினார்கள்.

Book :78


أَنَّهُ أَدْرَكَ عُمَرَ بْنَ الخَطَّابِ فِي رَكْبٍ وَهُوَ يَحْلِفُ بِأَبِيهِ، فَنَادَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ، إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ، وَإِلَّا فَلْيَصْمُتْ»


Bukhari-6107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6107. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்கு பரிகாரமாக) ‘லாயிலாஹ இல்லல்லாஹு’ (வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும். தம் நண்பரிடம், ‘வா! சூது விளையாடுவோம்’ என்று கூறுகிறவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :78


مَنْ حَلَفَ مِنْكُمْ، فَقَالَ فِي حَلِفِهِ: بِاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ


Bukhari-6106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74 தகுந்த காரணத்தினாலோ அறியாமையி னாலோ அவ்வாறு (முஸ்லிமை ‘இறை மறுப்பாளர்’என்று) கூறியவர் காஃபிராகி விடுவதில்லை எனக் கருதுவோரின் கூற்று. உமர் (ரலி) அவர்கள், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களைப் பார்த்து, (அவர் முஸ்லிம்களின் இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதிய போது) ‘இவர் நயவஞ்கர்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(ஹாத்திப் பத்ருப் போரில் கலந்துகொண்டவர். ஆகவே, உமரே!) உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர் களிடம், ‘உங்கள் பாவங்களை நான் மன்னித்துவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்க லாம்’ என்று கூறினார்கள்.120

6106. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு (நபி(ஸல்) அவர்களுடன் தொழுத) அதே தொழுகையைத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும்போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒருவர் (தனியாக

أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمُ الصَّلاَةَ، فَقَرَأَ بِهِمُ  البَقَرَةَ، قَالَ: فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلاَةً خَفِيفَةً، فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا، فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ، فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا، وَنَسْقِي بِنَوَاضِحِنَا، وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا البَارِحَةَ، فَقَرَأَ البَقَرَةَ، فَتَجَوَّزْتُ، فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ – ثَلاَثًا – اقْرَأْ: وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَنَحْوَهَا


Bukhari-6105

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6105. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார்.

இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.

அறிவிப்பவர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)

Book :78


«مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ»


Bukhari-6104

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6104. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 78


«أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا»


Bukhari-6103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 73 தகுந்த காரணமின்றி தம் சகோதரரை ‘இறைமறுப்பாளர்’ (காஃபிர்) என்று கூறுகின்றவர்,அவர்தாம் அப்படி ஆவார்.117

6103. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book : 78


«إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا»، وَقَالَ عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ: سَمِعَ أَبَا سَلَمَةَ: سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page