Author: Farook

Bukhari-6021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 எல்லா நற்கர்மமும் தர்மமே

6021. ‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 38 என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book : 78


«كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ»


Bukhari-6020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 வீட்டு வாசலின் நெருக்கத்தை வைத்து அண்டை வீட்டா(ரில் யாரு)க்கு முன்னுரிமை அளிப்பது (என்பதைத் தீர்மானிப்பது).

6020. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள்.37

Book : 78


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ، فَإِلَى أَيِّهِمَا أُهْدِي؟ قَالَ: «إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا»


Bukhari-6019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6019. அபூ ஷுரைஹ் அல்அதனீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்’ என்று கூறினார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று கூறினார்கள்.

Book :78


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ» قَالَ: وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 31

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

6018. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 78


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்குத் தான் அளிக்கும் சிறிய அன்பளிப்பைக் கூட அற்பமாகக் கருத வேண்டாம்.

6017. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

“முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்கள்.

அத்தியாயம்: 78


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «يَا نِسَاءَ المُسْلِمَاتِ، لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ»


Bukhari-6016

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனது பாவத்தின் நிலை. (‘நாசவேலைகள்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘பவாயிக்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததும், 42:34ஆவது இறைவசனத்தின் மூலத்தில் உள்ளதுமான) ‘யூபிக்ஹுன்ன’எனும் சொல்லுக்கு ‘அவற்றை அழித்துவிடுவான்’ என்று பொருள். (18:52 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்பிகன்’ எனும் சொல்லுக்கு ‘நாசம்’ என்று பொருள்.

6016. அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள்.

«وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ» قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ» تَابَعَهُ شَبَابَةُ، وَأَسَدُ بْنُ مُوسَى، وَقَالَ حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، وَعُثْمَانُ بْنُ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ


Bukhari-6015

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6015. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :78


«مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»


Bukhari-6014

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 அண்டைவீட்டார் குறித்த அறிவுரை அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணைவைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம்,தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போ ருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிட முள்ள அடிமைகளுக்கும் (அன்புடன்) நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமும் தற்பெருமையும் உடையோராக இருப்பவர் களை நேசிப்பதில்லை. (4:36)

6014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன். 35

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Book : 78


«مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»


Bukhari-6013

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6013. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book :78


«مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ»


Bukhari-6012

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6012. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :78


«مَا مِنْ مُسْلِمٍ غَرَسَ غَرْسًا، فَأَكَلَ مِنْهُ إِنْسَانٌ أَوْ دَابَّةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ»


Next Page » « Previous Page