Author: Farook

Bukhari-5971

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?

5971. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 78


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ»

وَقَالَ ابْنُ شُبْرُمَةَ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ مِثْلَهُ


Bukhari-5970

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي


Bukhari-5969

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103

மல்லாந்து படுப்பதும், ஒரு காலை மற்றொரு கால் மீது வைத்துக்கொள்வதும்.

5969. அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல் அன்சாரி (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கால்களில் ஒன்றை மற்றொன்றின் மீது தூக்கி வைத்தவர்களாகப் பள்ளிவாசலில் (மல்லாந்து) படுத்திருப்பதை பார்த்தேன்.143

Book : 77


أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضْطَجِعُ فِي المَسْجِدِ، رَافِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى»


Bukhari-5968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 102

(வாகனத்தில்) நெருங்கிய உறவுக்கார ஆணுக்குப் பின்னால் பெண் அமர்ந்து கொள்வது.

5968. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூ தல்ஹா (ரலி) சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்துகொண்டிருந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களின் வாகனத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது (நபியவர்களின்) ஒட்டகம் இடறிவிழுந்தது. நான் ‘(அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே!’ என்று சொன்னேன். பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இவர் உங்கள் அன்னை’ என்று கூறினார்கள். பிறகு நான் சேணத்தைக் கட்டினேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.

மதீனாவை ‘நெருங்கியபோது’ அல்லது ‘பார்த்தபோது’ நபி (ஸல்) அவர்கள்

أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ، وَإِنِّي لَرَدِيفُ أَبِي طَلْحَةَ وَهُوَ يَسِيرُ، وَبَعْضُ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَدِيفُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ عَثَرَتِ النَّاقَةُ،

فَقُلْتُ: المَرْأَةَ، فَنَزَلْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا أُمُّكُمْ» فَشَدَدْتُ الرَّحْلَ وَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

فَلَمَّا دَنَا، أَوْ: رَأَى المَدِينَةَ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ»


Bukhari-5967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 101

(வாகனத்தில்) ஒருவருக்குப் பின்னால் ஒருவர் அமர்வது.

5967. முஆத் இப்னு ஜபல் (ரலி) அறிவித்தார்:

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்துகொண்டிருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றபின், ‘முஆதே’ என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியச் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். சிறிது தூரம் சென்றபின் (மீண்டும்) ‘முஆதே!’ என்றார்கள். (அப்போதும்) நான் ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும்

بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلَّا أَخِرَةُ الرَّحْلِ، فَقَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ،

قَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ، وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا» ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ،

فَقَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ»


Bukhari-5966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 100

வாகனப் பிராணியின் உரிமையாளர் பிறரைத் தமக்கு முன்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொள்வது.

(அறிஞர்களில்) சிலர் கூறினர்: வாகனத்தின் உரிமையாளரே அதன் முற்பகுதியில் அமர அதிக உரிமையுடையவர் ஆவார்; அவர் தம்முடன் அமர்பவருக்கு முற்பகுதியில் உட்கார அனுமதியளித்தால் அவர் உட்காரலாம்.

5966. அய்யூப் (ரஹ்) அறிவித்தார்:

இக்ரிமா (ரஹ்) முன்னிலையில், ‘(வாகனப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக்கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?’ என்பது குறித்துப் பேசப்பட்டது. அப்போது இக்ரிமா (ரஹ்), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது மக்காவுக்கு) வந்தார்கள்.

(அவர்களை வரவேற்ற சிறுவர்களில் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களான) ‘குஸம் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ அல்லது ‘ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ நபி (ஸல்)

«أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَمَلَ قُثَمَ بَيْنَ يَدَيْهِ، وَالفَضْلَ خَلْفَهُ، أَوْ قُثَمَ خَلْفَهُ، وَالفَضْلَ بَيْنَ يَدَيْهِ. فَأَيُّهُمْ شَرٌّ أَوْ أَيُّهُمْ خَيْرٌ؟»


Bukhari-5965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 99

ஒரே வாகனப் பிராணியின் மீது மூன்று பேர் பயணம் செய்வது.

5965. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம் அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தம் ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள்.

Book : 77


«لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، اسْتَقْبَلَهُ أُغَيْلِمَةُ بَنِي عَبْدِ المُطَّلِبِ، فَحَمَلَ وَاحِدًا بَيْنَ يَدَيْهِ، وَالآخَرَ خَلْفَهُ»


Bukhari-5964

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 98

வாகனத்தில் ஒருவர் தமக்குப் பின்னால் மற்றொருவரை அமர்த்திக்கொள்வது.

5964. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டார்கள்.140

Book : 77


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَكِبَ عَلَى حِمَارٍ، عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ»


Bukhari-5963

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97

உருவப் படம் வரைகின்றவன் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி கட்டளையிடப்படுவான். ஆனால், அவனால் அது முடியாது.

5963. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அறிவித்தார்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்க) கேட்கப்படாத வரை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (எதையும்) கூற மாட்டார்கள்.

அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ் (ரலி), ‘உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது’ என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.

அத்தியாயம்: 77


كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، وَهُمْ يَسْأَلُونَهُ، وَلاَ يَذْكُرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سُئِلَ، فَقَالَ: سَمِعْتُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا كُلِّفَ يَوْمَ القِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ»


Bukhari-5962

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96

உருவப் படம் வரைவோரைச் சபித்தல்.

5962. அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்:

நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள்.

மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகிறவனையும் சபித்தார்கள்.139

Book : 77


أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا، فَقَالَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الكَلْبِ، وَكَسْبِ البَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ وَالمُصَوِّرَ»


Next Page » « Previous Page