Author: Farook

Bukhari-5631

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 26

இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது.

5631. ஸுமாமா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள்.

அத்தியாயம்: 74


كَانَ أَنَسٌ، يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا»


Bukhari-5630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 25

(பருகும்) பாத்திரத்தில் மூச்சு விடலாகாது.

5630. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (ஏதேனும்) பருகும்போது பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது உங்கள் பிறவி உறுப்பை வலக்கையால் தொடவேண்டாம். நீங்கள் சுத்தம் செய்யும்போது வலக் கையால் சுத்தம் செய்ய வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

அத்தியாயம்: 74


«إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ، وَإِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحْ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَإِذَا تَمَسَّحَ أَحَدُكُمْ فَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ»


Bukhari-5629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5629. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து (தண்ணீர்) குடிக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம்: 74


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ»


Bukhari-5628

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5628. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.

Book :74


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُشْرَبَ مِنْ فِي السِّقَاءِ»


Bukhari-5627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து குடிப்பது.46

5627. அய்யூப்(ரஹ்) கூறினார்

இக்ரிமா(ரஹ்) எங்களிடம் ‘அபூ ஹுரைரா(ரலி) அறிவித்த சிறுசிறு விஷயங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ (என்று கேட்டுவிட்டு) ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தோலால் ஆன தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும், ஒருவர் தம் அண்டைவீட்டார் தம் வீட்டுச் சுவரில் (உத்திரம் முதலிய) மரக் கட்டையைப் பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்’ என்று கூறினார்கள்.

Book : 74


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الشُّرْبِ مِنْ فَمِ القِرْبَةِ أَوِ السِّقَاءِ، وَأَنْ يَمْنَعَ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي دَارِهِ»


Bukhari-5626

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5626. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) கூறினார்.

‘ ‘இக்தினாஸ்’ என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்’ என மஅமர்(ரஹ்) அவர்களோ, மற்றவர்களோ அறிவித்தார்கள்.

Book :74


«سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ» قَالَ عَبْدُ اللَّهِ: قَالَ مَعْمَرٌ، أَوْ غَيْرُهُ: «هُوَ الشُّرْبُ مِنْ أَفْوَاهِهَا»


Bukhari-5625

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 தண்ணீர் தோல் பைகளை வெளிப் பக்கமாகச் சுருட்டிவிட்டு அதில் வாய் வைத்து அருந்துவது.45

5625. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அதாவது அவற்றின் வாய்ப் பகுதியை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீர் பருகுவதைத் தடை செய்தார்கள்.

Book : 74


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ» يَعْنِي أَنْ تُكْسَرَ أَفْوَاهُهَا فَيُشْرَبَ مِنْهَا


Bukhari-5624

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5624. ஜாபிர்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.

Book :74


«أَطْفِئُوا المَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ – وَأَحْسِبُهُ قَالَ – وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْهِ»


Bukhari-5623

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

பாத்திரத்தை மூடிவைத்தல்.

5623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் அல்லது அந்திப் பொழுதாகிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டுவிடுங்கள்.

மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை.

உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்

«إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ، أَوْ أَمْسَيْتُمْ، فَكُفُّوا صِبْيَانَكُمْ، فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ، فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَحُلُّوهُمْ، فَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا، وَأَوْكُوا قِرَبَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ، وَلَوْ أَنْ تَعْرُضُوا عَلَيْهَا شَيْئًا، وَأَطْفِئُوا مَصَابِيحَكُمْ»


Bukhari-5622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 சிறியோர், பெரியோருக்குப் பணிவிடை செய்வது.

5622. அனஸ்(ரலி) கூறினார்

நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங்க காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது ‘மது தடைசெய்யப்பட்டுவிட்டது’ என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்)’ அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு’ என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க கொட்டி) விட்டோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:

நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘அவர்களின் மது எத்தகையது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), ‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது’ என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.

كُنْتُ قَائِمًا عَلَى الحَيِّ أَسْقِيهِمْ، عُمُومَتِي وَأَنَا أَصْغَرُهُمْ، الفَضِيخَ، فَقِيلَ: حُرِّمَتِ الخَمْرُ، فَقَالَ: اكْفِئْهَا، فَكَفَأْنَا ” قُلْتُ لِأَنَسٍ: مَا شَرَابُهُمْ؟ قَالَ: «رُطَبٌ وَبُسْرٌ» فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ: وَكَانَتْ خَمْرَهُمْ، فَلَمْ يُنْكِرْ أَنَسٌ، وَحَدَّثَنِي بَعْضُ أَصْحَابِي: أَنَّهُ سَمِعَ أَنَسًا يَقُولُ: «كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ»


Next Page » « Previous Page