Author: Farook

Bukhari-5541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 பிராணிகளின் முகத்தில் அடையாளமிடல்.

5541. சாலிம்(ரஹ்) கூறினார்

இப்னு உமர்(ரலி) பிராணியின் முகத்தில் அடையாளமிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், ‘பிராணிகளை அடிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ என்றும் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு…’ என வந்துள்ளது.

Book : 72


أَنَّهُ كَرِهَ أَنْ تُعْلَمَ الصُّورَةُ، وَقَالَ ابْنُ عُمَرَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُضْرَبَ» تَابَعَهُ قُتَيْبَةُ، حَدَّثَنَا العَنْقَزِيُّ، عَنْ حَنْظَلَةَ، وَقَالَ: «تُضْرَبُ الصُّورَةُ»


Bukhari-5540

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5540. மைமூனா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து (செத்து)விட்ட எலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு (மீதி நெய்யை) உண்ணுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

Book :72


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ، فَقَالَ: «أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ»


Bukhari-5539

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5539. யூனுஸ் இப்னு யஸீத்(ரஹ்) கூறினார்

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், எலி போன்ற உயிரினம் உறைந்த அல்லது உறையாத எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றில் விழுந்து இறந்துவிட்டால் (அப்பொருளை உண்ணலாமா?) என்பது குறித்து வினவப்பட்டது. அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நெய்யில் (விழுந்து) இறந்துவிட்ட எலியையும் அதையொட்டி இருந்த நெய்யையும் (உடனே எடுத்து) எறியும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை (எடுத்து) எறியப்பட்டன. பிறகு (அந்த மீதி நெய்) உண்ணப்பட்டது’ என்று உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்துள்ள ஹதீஸ் குறித்து எங்களுக்குச் செய்தி எட்டியது’ என்று பதிலளித்தார்கள்.

Book :72


عَنِ الدَّابَّةِ تَمُوتُ فِي الزَّيْتِ وَالسَّمْنِ، وَهُوَ جَامِدٌ أَوْ غَيْرُ جَامِدٍ، الفَأْرَةِ أَوْ غَيْرِهَا، قَالَ: بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَ بِفَأْرَةٍ مَاتَتْ فِي سَمْنٍ، فَأَمَرَ بِمَا قَرُبَ مِنْهَا فَطُرِحَ، ثُمَّ أُكِلَ» عَنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ


Bukhari-5538

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 உறைந்த அல்லது உருகிய நெய்யில் எலி விழுந்துவிட்டால்…?53

5538. மைமூனா(ரலி) கூறினார்

(ஒரு முறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(உடயே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு அ(தில் மீதியுள்ள)தை உண்ணுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.54

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

இந்த ஹதீஸை ஸுஹ்ரீ(ரஹ்) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள். ஸுஹ்ரீயிடமிருந்து நான் இந்த ஹதீஸைப் பலமுறை செவியுற்றுள்ளேன்.

Book : 72


أَنَّ فَأْرَةً وَقَعَتْ فِي سَمْنٍ فَمَاتَتْ، فَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهَا فَقَالَ: «أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ» قِيلَ لِسُفْيَانَ: فَإِنَّ مَعْمَرًا يُحَدِّثُهُ، عَنِْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ؟ قَالَ: مَا سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ إِلَّا عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَقَدْ سَمِعْتُهُ مِنْهُ مِرَارًا


Bukhari-5537

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5537. காலித் இப்னு வலீத்(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னாரின் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டு வரப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தை அந்த உடும்பை நோக்கி நீட்ட (அங்கிருந்த) பெண்களில் ஒருவர், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதைச் சாப்பிடப்போகிறார்கள் என்பதை அவர்களுக்கு (முன்பே) தெரிவித்துவிடுங்கள்’ என்று கூறினார்.

அப்போது, ‘இது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!’ என்று (அங்கிருந்தவர்கள்) கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தை (உடும்பைவிட்டு) எடுத்துவிட்டார்கள்.

அப்போது நான், ‘உடும்பு தடை செய்யப்பட்டதா, இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘இல்லை (தடை செய்யப்பட்டதன்று). ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை’ என்று பதிலளித்தார்கள்.

நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்துச் சாப்பிட்டேன்.

أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْتَ مَيْمُونَةَ، فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ، فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، فَقَالَ بَعْضُ النِّسْوَةِ: أَخْبِرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ، فَقَالُوا: هُوَ ضَبٌّ يَا رَسُولَ اللَّهِ، فَرَفَعَ يَدَهُ، فَقُلْتُ: أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «لاَ، وَلَكِنْ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ» قَالَ خَالِدٌ: فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ


Bukhari-5536

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 உடும்பு

5536. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவுமாட்டேன்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 72


«الضَّبُّ لَسْتُ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ»


Bukhari-5535

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 முயல்

5535. நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைச் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப்பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப்பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனை அறுத்து ‘அதன் இரண்டு பின் சப்பைகளையும்’ அல்லது ‘அதன் இரண்டு தொடைகளையும்’ (அன்பளிப்பாக) நபி(ஸல்) அவாக்ளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.

Book : 72


أَنْفَجْنَا أَرْنَبًا وَنَحْنُ بِمَرِّ الظَّهْرَانِ، فَسَعَى القَوْمُ فَلَغِبُوا، فَأَخَذْتُهَا فَجِئْتُ بِهَا إِلَى أَبِي طَلْحَةَ، ” فَذَبَحَهَا فَبَعَثَ بِوَرِكَيْهَا – أَوْ قَالَ: بِفَخِذَيْهَا – إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبِلَهَا


Bukhari-5534

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.50

Book :72


مَثَلُ الجَلِيسِ الصَّالِحِ وَالسَّوْءِ، كَحَامِلِ المِسْكِ وَنَافِخِ الكِيرِ، فَحَامِلُ المِسْكِ: إِمَّا أَنْ يُحْذِيَكَ، وَإِمَّا أَنْ تَبْتَاعَ مِنْهُ، وَإِمَّا أَنْ تَجِدَ مِنْهُ رِيحًا طَيِّبَةً، وَنَافِخُ الكِيرِ: إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً


Bukhari-5533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 கஸ்தூரி48

5533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர் தம் காயத்தில் இரத்தம் வழிய, மறுமை நாளில் (இறைவன் முன்னால்) வருவார். அவரின் (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்த(ச் சிவப்பு) நிறமாயிருக்கும்; (அதன்) மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.49

Book : 72


«مَا مِنْ مَكْلُومٍ يُكْلَمُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا جَاءَ يَوْمَ القِيَامَةِ وَكَلْمُهُ يَدْمَى، اللَّوْنُ لَوْنُ دَمٍ، وَالرِّيحُ رِيحُ مِسْكٍ»


Bukhari-5532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5532. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செத்துப்போன பெட்டை வெள்ளாடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘இதன் தோலால் பயன் அடைவதால் இதன் உரிமையாளர் மீது குற்றம் ஏதுமில்லை’ என்று கூறினார்கள்.

Book :72


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَنْزٍ مَيِّتَةٍ، فَقَالَ: «مَا عَلَى أَهْلِهَا لَوِ انْتَفَعُوا بِإِهَابِهَا»


Next Page » « Previous Page