Author: Farook

Bukhari-5368

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஏழை (தமக்குக் கிடைக்கும் பொருளைத்) தம் வீட்டாருக்கே செலவிடுதல்.

5368. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன்’ என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஏன் (என்ன நடந்தது)?’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர் ‘என்னிடம் அடிமை இல்லையே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘அது என்னால் இயலாது’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக’ என்று கூறினார்கள். அம்மனிதர், ‘என்னிடம் வசதி இல்லையே!’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இதோ! நானே அது’ என்று பதிலளித்தார்.

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: هَلَكْتُ، قَالَ: «وَلِمَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى أَهْلِي فِي رَمَضَانَ، قَالَ: «فَأَعْتِقْ رَقَبَةً» قَالَ: لَيْسَ عِنْدِي، قَالَ: «فَصُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ أَسْتَطِيعُ، قَالَ: «فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ أَجِدُ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «أَيْنَ السَّائِلُ؟» قَالَ: هَا أَنَا ذَا، قَالَ: «تَصَدَّقْ بِهَذَا» قَالَ: عَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ، فَوَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، قَالَ: «فَأَنْتُمْ إِذًا»


Bukhari-5367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 கணவனின் குழந்தை(யைப் பராமரிக்கும்) விஷயத்தில் அவனுக்கு மனைவி ஒத்துழைப்பது (விரும்பத்தக்கதாகும்).

5367. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ‘ஏழு பெண் குழந்தைகளை’ அல்லது ‘ஒன்பது பெண் குழந்தைகளை’விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அவர்கள், ‘கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!’ என்று கூறினார்கள்.

அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள்.

هَلَكَ أَبِي وَتَرَكَ سَبْعَ بَنَاتٍ أَوْ تِسْعَ بَنَاتٍ، فَتَزَوَّجْتُ امْرَأَةً ثَيِّبًا، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ يَا جَابِرُ» فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا؟» قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «فَهَلَّا جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ، وَتُضَاحِكُهَا وَتُضَاحِكُكَ» قَالَ: فَقُلْتُ لَهُ: إِنَّ عَبْدَ اللَّهِ هَلَكَ، وَتَرَكَ بَنَاتٍ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أَجِيئَهُنَّ بِمِثْلِهِنَّ، فَتَزَوَّجْتُ امْرَأَةً تَقُومُ عَلَيْهِنَّ وَتُصْلِحُهُنَّ، فَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ» أَوْ قَالَ: «خَيْرًا»


Bukhari-5366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 நியாயமான வகையில் மனைவிக்கு ஆடை வழங்குவது (கணவனின் கடமையாகும்).

5366. அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப்பாக) வழங்கினார்கள். எனவே, அதை நான் அணிந்து கொண்டேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.

Book : 69


«آتَى إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً سِيَرَاءَ فَلَبِسْتُهَا، فَرَأَيْتُ الغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَّقْتُهَا بَيْنَ نِسَائِي»


Bukhari-5365

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 கணவனின் செல்வத்தையும் (அவன் வழங்கும்) செலவுத் தொகையையும் பாதுகாப்பது மனைவியின் பொறுப்பாகும்.

5365. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களேயாவர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் இப்னு தாவூஸ், அபுஸ்ஸினாத் ஆகிய இருவரில்) ஒருவரின் அறிவிப்பில் காணப்படுவதாவது:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் ஆவர். 19

முஆவியா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :

خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ نِسَاءُ قُرَيْشٍ – وَقَالَ الآخَرُ: صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ – أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ، وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ ” وَيُذْكَرُ عَنْ مُعَاوِيَةَ، وَابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-5364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

கணவன் செலவுக்கு(ப் பணம்) தராவிட்டால் அவனுக்குத் தெரியாமல் தனக்கும் தன் குழந்தைக்கும் வேண்டியதை நியாயமான அளவில் எடுத்துக்கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு.

5364. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!’ என்று கூறினார்கள். 18

Book : 69


أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ وَهُوَ لاَ يَعْلَمُ، فَقَالَ: «خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ، بِالْمَعْرُوفِ»


Bukhari-5363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 ஆண் தன் வீட்டுப் பணிகளைச் செய்வது.

5363. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். 17

Book : 69


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْنَعُ فِي البَيْتِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ»


Bukhari-5362

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 மனைவியின் பணியாள்

5362. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்

ஃபாத்திமா அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உறங்கும்போது முப்பத்து மூன்றுமுறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்’ என்று கூறினார்கள். 16

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயையனா(ரஹ்) கூறினார்:

இந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும்.

(தொடர்ந்து அலீ(ரலி)) ‘இவற்றை (நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட) பின்னால் (ஒரு நாளும் ஓதாமல்) நான்விட்டதில்லை’ என்று கூறினார்கள். அவர்களிடம், ‘ஸிஃப்பீன்’ போரின் இரவில் கூடவாவிட்டதில்லை? என்று

أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ خَادِمًا، فَقَالَ: «أَلاَ أُخْبِرُكِ مَا هُوَ خَيْرٌ لَكِ مِنْهُ؟ تُسَبِّحِينَ اللَّهَ عِنْدَ مَنَامِكِ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتَحْمَدِينَ اللَّهَ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتُكَبِّرِينَ اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ» ثُمَّ قَالَ سُفْيَانُ: إِحْدَاهُنَّ أَرْبَعٌ وَثَلاَثُونَ، فَمَا تَرَكْتُهَا بَعْدُ، قِيلَ: وَلاَ لَيْلَةَ صِفِّينَ؟ قَالَ: وَلاَ لَيْلَةَ صِفِّينَ


Bukhari-5361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

கணவனின் வீட்டு வேலைகளை மனைவி செய்வது.

5361. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் மனைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா, நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள்.

அவர்களின் பாதங்கள் என் வயிற்றில்பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், ‘‘நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு

أَنَّ فَاطِمَةَ عَلَيْهِمَا السَّلاَمُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، وَبَلَغَهَا أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ، فَلَمْ تُصَادِفْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عَائِشَةُ، قَالَ: فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا نَقُومُ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا» فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا، حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى بَطْنِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا؟ إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا – أَوْ أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا – فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ»


Bukhari-5360

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5360. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 11

Book :69


«إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا، عَنْ غَيْرِ أَمْرِهِ، فَلَهُ نِصْفُ أَجْرِهِ»


Bukhari-5359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 கணவன் (ஊரில்) இல்லாத போது மனைவி மற்றும் குழந்தைகளின் (பராமரிப்புச்) செலவு.

5359. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 69


جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا؟ قَالَ: «لاَ، إِلَّا بِالْمَعْرُوفِ»


Next Page » « Previous Page