Author: Farook

Bukhari-5325 & 5326

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5325. & 5326. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அப்துர் ரஹ்மான் இப்னு அல்ஹகமுடைய புதல்வியான இன்னவளைப் பார்த்தீர்களா? அவரை அவரின் கணவர் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் ‘இத்தா’ இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே!’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) ‘அவர் செய்தது தவறு’ என்றார்கள். நான் ஃபாத்திமா பின்த் கைஸ், (தான் மற்றோர் இடத்தில் ‘இத்தா’ இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷாரலி) அவர்கள், ‘இச்செய்தியைக் கூறி வருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை என்பதைப் புரிந்துகொள்!’என்று கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது:

ஆயிஷா(ரலி) (ஃபாத்திமா பின்த் கைஸைக்) கடுமையாகச் சாடினார்கள். மேலும், ‘(இந்த) ஃபாத்திமா தன்னந் தனியானதோர் இடத்தில் இருந்தார். இதனால் அவர் (பாதுகாப்பு) குறித்து அஞ்சப்பட்டது.

قَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ لِعَائِشَةَ: أَلَمْ تَرَيْ إِلَى فُلاَنَةَ بِنْتِ الحَكَمِ، طَلَّقَهَا زَوْجُهَا البَتَّةَ فَخَرَجَتْ؟ فَقَالَتْ: «بِئْسَ مَا صَنَعَتْ» قَالَ: أَلَمْ تَسْمَعِي فِي قَوْلِ فَاطِمَةَ؟ قَالَتْ: «أَمَا إِنَّهُ لَيْسَ لَهَا خَيْرٌ فِي ذِكْرِ هَذَا الحَدِيثِ» وَزَادَ ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَابَتْ عَائِشَةُ، أَشَدَّ العَيْبِ، وَقَالَتْ: «إِنَّ فَاطِمَةَ كَانَتْ فِي مَكَانٍ وَحْشٍ، فَخِيفَ عَلَى نَاحِيَتِهَا، فَلِذَلِكَ أَرْخَصَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-5323 & 5324

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5323. & 5324. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? ‘(மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ‘இத்தா’வின் போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை’ என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா?

Book :68


«مَا لِفَاطِمَةَ أَلاَ تَتَّقِي اللَّهَ» يَعْنِي فِي قَوْلِهَا: لاَ سُكْنَى وَلاَ نَفَقَةَ


Bukhari-5321 & 5322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் வரை தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும் எனும் (2:228ஆவது) வசனத் தொடர். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இத்தா’வில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து, அவரிடம் வந்த பின் அவளுக்கு மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்தால், முதல் கணவனிடமிருந்து அவள் முற்றாகப் பிரிந்தவள் ஆவாள். (ஆனால்,) இந்த மாதவிடாய்க் காலத்தை இரண்டாம் கணவனுக்கான இத்தா’வாக அவள் கணக்கிட முடியாது. அவ்வாறு கணக்கிடலாம் என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் கருத்தே சுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மிக உவப்பானதாகும்.84 மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (2:228ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குரூஉ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) அக்ரஅத்’ எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது’ என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது’ என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் கரஅத்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு. பாடம் : 41 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் நிகழ்ச்சி.85 வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்:

أَنَّ يَحْيَى بْنَ سَعِيدِ بْنِ العَاصِ طَلَّقَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَكَمِ، فَانْتَقَلَهَا عَبْدُ الرَّحْمَنِ، فَأَرْسَلَتْ عَائِشَةُ أُمُّ المُؤْمِنِيِنَ إِلَى مَرْوَانَ بْنِ الحَكَمِ، وَهُوَ أَمِيرُ المَدِينَةِ: «اتَّقِ اللَّهَ وَارْدُدْهَا إِلَى بَيْتِهَا» قَالَ مَرْوَانُ – فِي حَدِيثِ سُلَيْمَانَ -: إِنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الحَكَمِ غَلَبَنِي، وَقَالَ القَاسِمُ بْنُ مُحَمَّدٍ: أَوَمَا بَلَغَكِ شَأْنُ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ؟ قَالَتْ: «لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَذْكُرَ حَدِيثَ فَاطِمَةَ»، فَقَالَ مَرْوَانُ بْنُ الحَكَمِ: إِنْ كَانَ بِكِ شَرٌّ، فَحَسْبُكِ مَا بَيْنَ هَذَيْنِ مِنَ الشَّرِّ


Bukhari-5320

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5320. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்

தம் கணவர் இறந்த சில நாள்களுக்குப் பின் சுபைஆ அல்அஸ்லமிய்யா(ரலி) பிரசவித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று (மறு)மணம் புரிந்து கொள்ள அனுமதி கோரினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி அளித்ததையடுத்து அவர் (ஒருவரை) மணந்தார்.

Book :68


أَنَّ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ نُفِسَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ، فَجَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَأْذَنَتْهُ أَنْ تَنْكِحَ، «فَأَذِنَ لَهَا فَنَكَحَتْ»


Bukhari-5319

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5319. அப்துல்லாஹ் இப்னு உத்பா இப்னி மஸ்வூத்(ரஹ்) அறிவித்தார்

நான் உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அல் அர்கம்(ரஹ்) அவர்களை, அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ(ரலி) அவர்களிடம் சென்று, அவருக்கு நபி(ஸல்) அவர்கள் (‘இத்தா’ தொடர்பாக) என்ன தீர்ப்பளித்தார்கள்? என்று கேட்கும்படி கடிதம் எழுதினேன். (அவ்வாறே அவரும் கேட்டார்.)

அப்போது சுபைஆ(ரலி) ‘நீ பிரசவித்தவுடன் மணமுடித்துக்கொள்’ என்று நபி(ஸல்) அவர்கள் எனக்குத் தீர்ப்பு வழங்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ ஹபீப்(ரஹ்) அவர்களுக்கு இப்னு ஷிஹாப்(ரஹ்) தம் கடிதத்தில் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

Book :68


أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِ الأَرْقَمِ، أَنْ يَسْأَلَ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ، كَيْفَ أَفْتَاهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: «أَفْتَانِي إِذَا وَضَعْتُ أَنْ أَنْكِحَ»


Bukhari-5318

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 மேலும், உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர் களுடைய இத்தாவைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டாலும், இன்னும் யாருக்கு (இதுவரை) மாதவிடாயே ஏற்பட வில்லையோ அவர்களுக்கும் இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும் (எனும் 65:4ஆவது வசனத் தொடர்). முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: அதாவது மாதவிடாய் ஏற்படுகிறதா அல்லது இல்லையா என உங்களுக்குத் (தெளிவாகத்) தெரியாத பெண்களுக்கும், (முதுமையின் காரணத்தினால்) மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், (பருவம் அடையாததால் இதுவரை) மாதவிடாயே ஏற்பட்டிராத பெண்களுக்கும் இத்தா’ (தவணை) மூன்று மாதங்களாகும்.82 பாடம் : 39 கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களு டைய (இத்தா’வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (எனும் 65:4ஆவது வசனத் தொடர்).

5318. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ‘சுபைஆ’ என்றழைக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரின் கணவர் (ஸஅத் இப்னு கவ்லா) இறந்துவிட்டார். (நாற்பது நாள்களுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை பிறந்தது.) இந்நிலையில்

أَنَّ امْرَأَةً مِنْ أَسْلَمَ يُقَالُ لَهَا سُبَيْعَةُ، كَانَتْ تَحْتَ زَوْجِهَا، تُوُفِّيَ عَنْهَا وَهِيَ حُبْلَى، فَخَطَبَهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ، فَأَبَتْ أَنْ تَنْكِحَهُ، فَقَالَ: «وَاللَّهِ مَا يَصْلُحُ أَنْ تَنْكِحِيهِ حَتَّى تَعْتَدِّي آخِرَ الأَجَلَيْنِ»، فَمَكُثَتْ قَرِيبًا مِنْ عَشْرِ لَيَالٍ، ثُمَّ جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْكِحِي»


Bukhari-5317

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா’க் காலத்திற்குப் பின் வேறொரு கணவனை மணமுடித்து,அவர் அவளைத் தாம்பத்திய உறவுகொள்ளாத நிலையில் (அவரும் அவளைத் தலாக் சொல்லிவிட்டால்,முதல் கணவன் அவளை மணந்து கொள்ளலாமா?)

5317. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். பிறகு அப்பெண்ணை அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். எனவே, அந்தப் பெண் வேறொருவரை மணந்துகொண்டார். பிறகு அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தம் கணவர் தம்மிடம் (உறவுகொள்ள) வருவதில்லை என்றும், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சம் போன்றதுதான் என்றும் கூறினார். (பிறகு தாம் தம் முதல் கணவருடன் வாழ விரும்புவதாகவும் கூறினார்.) (அப்போது அங்கிருந்த அவரின் இரண்டாவது கணவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தமக்கு முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளையும் அவர் காட்டினார்.) உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை; நீ (உன்னடைய இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும் வரையிலும், அவர் உன்னிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும் வரையிலும் (முதல்

أَنَّ رِفَاعَةَ القُرَظِيَّ تَزَوَّجَ امْرَأَةً ثُمَّ طَلَّقَهَا، فَتَزَوَّجَتْ آخَرَ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ لَهُ أَنَّهُ لاَ يَأْتِيهَا، وَأَنَّهُ لَيْسَ مَعَهُ إِلَّا مِثْلُ هُدْبَةٍ، فَقَالَ: «لاَ، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ»


Bukhari-5316

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 (சாப அழைப்புப் பிரமாணத்தின்போது) இறைவா! (உண்மையை) வெளிப்படுத்து வாயாக’ என்று தலைவர் கூறுவது.

5316. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்வது (நடைமுறையில் வருவதற்கு முன், மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ(ரலி) அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகச்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவுகொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகக் கூறினார். அப்போது ‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே (என் குலத்தாரில் நடந்த) இந்த நிகழ்ச்சியால் நானே சோதிக்கப்பட்டுள்ளேன்’ என்று ஆஸிம்(ரலி) கூறினார். எனவே, ஆஸிம்(ரலி) அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக்

ذُكِرَ المُتَلاَعِنَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عَاصِمُ بْنُ عَدِيٍّ فِي ذَلِكَ قَوْلًا ثُمَّ انْصَرَفَ، فَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ، فَذَكَرَ لَهُ أَنَّهُ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا، فَقَالَ عَاصِمٌ: مَا ابْتُلِيتُ بِهَذَا الأَمْرِ إِلَّا لِقَوْلِي، فَذَهَبَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ، وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا، قَلِيلَ اللَّحْمِ سَبْطَ الشَّعَرِ، وَكَانَ الَّذِي وَجَدَ عِنْدَ أَهْلِهِ آدَمَ خَدْلًا كَثِيرَ اللَّحْمِ، جَعْدًا قَطَطًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَيِّنْ» فَوَضَعَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَ عِنْدَهَا، فَلاَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَهُمَا، فَقَالَ رَجُلٌ لِابْنِ عَبَّاسٍ فِي المَجْلِسِ: هِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ لَرَجَمْتُ هَذِهِ»؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لاَ، تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ السُّوءَ فِي الإِسْلاَمِ


Bukhari-5315

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணிடமே (அவளுடைய) குழந்தை சேர்க்கப்படும்.

5315. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவரின் மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தம்தல்ல என்று கூறினார். எனவே, அவ்விருவருரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.

Book : 68


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَعَنَ بَيْنَ رَجُلٍ وَامْرَأَتِهِ فَانْتَفَى مِنْ وَلَدِهَا، فَفَرَّقَ بَيْنَهُمَا، وَأَلْحَقَ الوَلَدَ بِالْمَرْأَةِ»


Bukhari-5314

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5314. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் உள்ள ஒரு தம்பதியரை சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.

Book :68


«لاَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ رَجُلٍ وَامْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، وَفَرَّقَ بَيْنَهُمَا»


Next Page » « Previous Page