Author: Farook

Bukhari-5250

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 126

ஒருவர் தம் நண்பரிடம் ‘‘இன்றிரவு தாம்பத்திய உறவைத் தொடங்கினீர் களா?” என்று கேட்பதும், ஒருவர் தம் புதல்வியைக் கண்டிக்கும்போது இடுப்பில் குத்துவதும்.

5250. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள் என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். என் இடுப்பில் தமது கரத்தால் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது மடியில் தலைவைத்துப் படுத்திருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது.

அத்தியாயம்: 67


«عَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأْسُهُ عَلَى فَخِذِي»


Bukhari-5249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 125 உங்களில் பருவ வயதை அடையாத (சிறு)வர்கள் (உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் மட்டும் அனுமதி பெற்றுக் கொள்ளட்டும்! எனும் 24:58ஆவது வசனத் தொடர்).

5249. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரலி) அறிவித்தார்

ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘தாங்கள் (பெரு நாள்களான) ஈதுல் அள்ஹாவிலோ, ஈதுல் ஃபித்ரிலோ இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். இப்னு அப்பாஸ்(ரலி), ‘ஆம் (இருந்திருக்கிறேன்.) (உறவின் காரணத்தினால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்த நான் (பெரு நாள் தொழுகையில்) அவர்களுடன் பங்கெடுத்து (பெண்கள் பகுதிவரை சென்று) இருக்கமுடியாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று (மக்களுடன் பெருநாள்) தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு உரை நிகழ்த்தினார்கள்.

இந்த இடத்தில் இப்னு அப்பாஸ்(ரலி) (அத்தொழுகைக்கு முன்) பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதாகக் கூறவில்லை.

பிறகு நபி(ஸல்) அவர்கள் பெண்கள் இருந்த பகுதிக்கு வந்து

سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، سَأَلَهُ رَجُلٌ: شَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِيدَ، أَضْحًى أَوْ فِطْرًا؟ قَالَ: نَعَمْ، وَلَوْلاَ مَكَانِي مِنْهُ مَا شَهِدْتُهُ – يَعْنِي مِنْ صِغَرِهِ – قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى ثُمَّ خَطَبَ، وَلَمْ يَذْكُرْ أَذَانًا وَلاَ إِقَامَةً، ثُمَّ أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَرَأَيْتُهُنَّ يَهْوِينَ إِلَى آذَانِهِنَّ وَحُلُوقِهِنَّ، يَدْفَعْنَ إِلَى بِلاَلٍ، ثُمَّ ارْتَفَعَ هُوَ وَبِلاَلٌ إِلَى بَيْتِهِ»


Bukhari-5248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 124 தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய புதல்வர்கள், தங்கள் கணவன்மார்களின் புதல்வர்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் (உடன் நெருங்கிப் பழகும்) பெண்கள், தங்களுடைய அடிமைகள், (பெண்கள் மீது) வேட்கையில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், பெண்களின் அந்தரங்க விஷயங் களைப் பற்றி ஏதும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களது அழகை இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் வெளிக்காட்ட வேண்டாம் (எனும் 24:31ஆவது இறைவசனம்).

5248. அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

உஹுத் போர் நாளில் (காயமுற்ற) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்திற்கு என்ன மருந்திடப்பட்டது என்பது தொடர்பாக மக்கள் கருதது வேறுபாடு கொண்டனர். எனவே, சஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி(ரலி) அவர்களிடம் (சென்று அது பற்றிக்) கேட்டார்கள். -ஸஹ்ல்(ரலி) மதீனாவில் கடைசியாக எஞ்சியிருந்த நபித்தோழர்களில் ஒருவராய் இருந்தார்கள் – அதற்கு ஸஹ்ல்(ரலி) (பின்வருமாறு) பதிலளித்தார்கள்.

اخْتَلَفَ النَّاسُ بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، فَسَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَكَانَ مِنْ آخِرِ مَنْ بَقِيَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَقَالَ: «وَمَا بَقِيَ مِنَ النَّاسِ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ تَغْسِلُ الدَّمَ عَنْ وَجْهِهِ، وَعَلِيٌّ يَأْتِي بِالْمَاءِ عَلَى تُرْسِهِ، فَأُخِذَ حَصِيرٌ فَحُرِّقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»


Bukhari-5247

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 123

(கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக் கத்தியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; தலைவிரி கோலமாக இருந்தவள் தலைவாரிக்கொள்ள வேண்டும்.

5247. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்க்ள அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (தபூக் எனும்) ஒரு போரில் இருந்தோம். (போர் முடிந்து) திரும்பி வந்து நாங்கள் மதீனாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லும் என் ஒட்டகத்தில் இருந்தவாறு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த நேரம் எனக்குப் பின்னால் இருந்து வாகனத்தில் ஒருவர் என்னை வந்தடைந்து தம்மிடமிருந்த கைத் தடியால் என்னுடைய ஒட்டகத்தைக் குத்தினார். உடனே என்னுடைய ஒட்டகம் நீ கண்ட ஒட்டகங்களிலேயே அதிவிரைவாக ஓடக் கூடியது போன்று ஓடியது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களே இருந்தார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் புதிதாகத் திருமணம் ஆனவன்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘திருமணம் செய்துகொண்டுவிட்டாயா?’ என்று கேட்க, நான், ‘ஆம்” என்று பதிலளித்தேன்.

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَلَمَّا قَفَلْنَا، كُنَّا قَرِيبًا مِنَ المَدِينَةِ، تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ لِي قَطُوفٍ، فَلَحِقَنِي رَاكِبٌ مِنْ خَلْفِي، فَنَخَسَ بَعِيرِي بِعَنَزَةٍ كَانَتْ مَعَهُ، فَسَارَ بَعِيرِي كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنَ الإِبِلِ، فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، قَالَ: «أَتَزَوَّجْتَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «أَبِكْرًا أَمْ ثَيِّبًا؟» قَالَ: قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «فَهَلَّا بِكْرًا تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ» قَالَ: فَلَمَّا قَدِمْنَا ذَهَبْنَا لِنَدْخُلَ، فَقَالَ: «أَمْهِلُوا، حَتَّى تَدْخُلُوا لَيْلًا – أَيْ عِشَاءً – لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ المُغِيبَةُ»


Bukhari-5246

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5246. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயப்பத்தப்படுத்தி)க் கொள்ளும் வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமையாயிரு!”) என்று கூறிவிட்டு, ‘புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்” என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

Book :67


«إِذَا دَخَلْتَ لَيْلًا، فَلاَ تَدْخُلْ عَلَى أَهْلِكَ، حَتَّى تَسْتَحِدَّ المُغِيبَةُ، وَتَمْتَشِطَ الشَّعِثَةُ» قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَعَلَيْكَ بِالكَيْسِ الكَيْسِ» تَابَعَهُ عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِي الكَيْسِ


Bukhari-5245

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 122 குழந்தைத் தேட்டம்.173

5245. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் ஒரு போரில் (தபூக்கில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக் கொண்டிருந்தபோது, மெதுவாகச் செல்லக் கூடிய ஒட்டகத்தின் மீது இருந்தவாறு நான் அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனமொன்றில் வந்து சேர்ந்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) ‘உமக்கு என்ன அவசரம்?’ என்று கேட்டார்கள். ‘நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்தாயா. அல்லது கன்னி கழிந்த பெண்ணை மணந்தாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை. கன்னிகழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்றேன். நபி(ஸல்) அவர்கள், அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக் குலாவி மகிழ்ந்திருக்கலாமே!” என்றார்கள்.

பிறகு நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்து (ஊருக்குள்) நுழையப் போனபோது நபி(ஸல்) அவர்கள், (நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட

كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ، فَلَمَّا قَفَلْنَا، تَعَجَّلْتُ عَلَى بَعِيرٍ قَطُوفٍ، فَلَحِقَنِي رَاكِبٌ مِنْ خَلْفِي، فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا يُعْجِلُكَ» قُلْتُ: إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، قَالَ: «فَبِكْرًا تَزَوَّجْتَ أَمْ ثَيِّبًا؟» قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «فَهَلَّا جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ» قَالَ: فَلَمَّا قَدِمْنَا ذَهَبْنَا لِنَدْخُلَ، فَقَالَ: ” أَمْهِلُوا، حَتَّى تَدْخُلُوا لَيْلًا – أَيْ عِشَاءً – لِكَيْ تَمْتَشِطَ الشَّعِثَةُ، وَتَسْتَحِدَّ المُغِيبَةُ – قَالَ: وَحَدَّثَنِي الثِّقَةُ: أَنَّهُ قَالَ فِي هَذَا الحَدِيثِ – الكَيْسَ الكَيْسَ يَا جَابِرُ ” يَعْنِي الوَلَدَ


Bukhari-5244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5244. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

உங்களில் ஒருவர் நீண்ட நாள்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். 172

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book :67


«إِذَا أَطَالَ أَحَدُكُمُ الغَيْبَةَ فَلاَ يَطْرُقْ أَهْلَهُ لَيْلًا»


Bukhari-5243

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 121 நீண்ட பயணத்திலிருந்து திரும்புகின்றவர் இரவில் திடீரென தமது வீட்டினுள் நுழையலாகாது. தம் வீட்டார் மீது துரோகக் குற்றச்சாட்டு சுமத்திடவும், அவர்களின் குற்றங் குறைகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு நேர்ந்திடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம்.

5243. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஒருவர் (வெளியிலிருந்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் வருவதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாயிருந்தார்கள்.

Book : 67


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ أَنْ يَأْتِيَ الرَّجُلُ أَهْلَهُ طُرُوقًا»


Bukhari-5242

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 120

ஒருவர் நான் இன்றிரவு என் துணைவியர் அனைவரிடமும் (தாம்பத்திய உறவுக்காகச்) சென்றுவருவேன்என்று கூறுவது.

5242. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், ‘நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) ‘இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால்” என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்றார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறிவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் ‘இன்ஷா அல்லாஹ்

قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ بِمِائَةِ امْرَأَةٍ، تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ لَهُ المَلَكُ: قُلْ إِنْ شَاءَ اللَّهُ، فَلَمْ يَقُلْ وَنَسِيَ، فَأَطَافَ بِهِنَّ، وَلَمْ تَلِدْ مِنْهُنَّ إِلَّا امْرَأَةٌ نِصْفَ إِنْسَانٍ ” قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ لَمْ يَحْنَثْ، وَكَانَ أَرْجَى لِحَاجَتِهِ


Bukhari-5241

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5241. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 170

Book :67


لاَ تُبَاشِرِ المَرْأَةُ المَرْأَةَ، فَتَنْعَتَهَا لِزَوْجِهَا كَأَنَّهُ يَنْظُرُ إِلَيْهَا


Next Page » « Previous Page