Author: Farook

Bukhari-4025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4025. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா( ரலி) அவர்களின் (மீது சொல்லப்பட்ட அவதூறு) நிகழ்ச்சி குறித்து உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்), அல்கம இப்னு வக்காஸ் (ரஹ்), உபைதுல்லா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரிடம் செவியேற்றேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தனர்.

ஆயிஷா (ரலி) கூறினார்: நானும் (அபூ ருஹ்மின் மகள்) உம்மு மிஸ்தஹும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹ் (மிஸ்தஹின் தாயார்) தம் கம்பளி அங்கியில் இடறிக் கொண்டார். அப்போது அவர், (அவதூறில் பங்கெடுத்த தம் மகன் மிஸ்தஹை சபித்தவராக) ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘மிக மோசமான சொல்லைச் சொல்லி விட்டீர். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்.’ என்று கூறினேன்…

பிறகு அவதூறு பற்றிய ஹதீஸை (முழு வடிவத்துடன்) அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்.
Book :64


سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ المُسَيِّبِ، وَعَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ، وَعُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ، قَالَتْ: فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ، فَعَثَرَتْ أُمُّ مِسْطَحٍ فِي مِرْطِهَا، فَقَالَتْ: تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ: «بِئْسَ مَا قُلْتِ، تَسُبِّينَ رَجُلًا شَهِدَ بَدْرًا» فَذَكَرَ حَدِيثَ الإِفْكِ


Bukhari-4024

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4024. நபி (ஸல்) அவர்கள் பத்ருப்போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்:

முத்யிம் இப்னு அதீ உயிரோடியிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டு விட்டிருப்பேன்.

என ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்.

ஸயீத் இப்னு முஸய்யப் (ரலி) கூறினார் :

முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரையும்விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ‘ஹர்ரா போர்’ நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன் படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும்விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது.65 மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.
Book :64


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فِي أُسَارَى بَدْرٍ: «لَوْ كَانَ المُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى، لَتَرَكْتُهُمْ لَهُ»

وَقَالَ اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ: وَقَعَتِ الفِتْنَةُ الأُولَى – يَعْنِي مَقْتَلَ عُثْمَانَ – فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ بَدْرٍ أَحَدًا، ثُمَّ وَقَعَتِ الفِتْنَةُ الثَّانِيَةُ، – يَعْنِي الحَرَّةَ – فَلَمْ تُبْقِ مِنْ أَصْحَابِ الحُدَيْبِيَةِ أَحَدًا، ثُمَّ وَقَعَتِ الثَّالِثَةُ، فَلَمْ تَرْتَفِعْ وَلِلنَّاسِ طَبَاخٌ


Bukhari-4023

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4023 . ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் “அத்தூர்’ (எனும் 52ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருக்க நான் கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை எனது இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.

அத்தியாயம்: 64


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْرَأُ فِي المَغْرِبِ بِالطُّورِ، وَذَلِكَ أَوَّلَ مَا وَقَرَ الإِيمَانُ فِي قَلْبِي»


Bukhari-4022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4022. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்ஃதிர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தின் போது), ‘(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்’ என்று கூறினார்கள்.
Book :64


كَانَ عَطَاءُ البَدْرِيِّينَ خَمْسَةَ آلاَفٍ، خَمْسَةَ آلاَفٍ وَقَالَ عُمَرُ: «لَأُفَضِّلَنَّهُمْ عَلَى مَنْ بَعْدَهُمْ»


Bukhari-4021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4021. உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘என்னுடன் நம் அன்சாரித் தோழர்களிடம் (பனூ சாஇதா சமுதாயக் கூடத்துக்கு) வாருங்கள்’ என்று கூறினேன். (நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.) அப்போது அன்சாரிகளில் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களான இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்: (இந்த ஹதீஸை) நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் கூறியபோது, ‘உவைஸ் இப்னு சாஇதா(ரலி), மஅன் இப்னு அதீ(ரலி) ஆகியோரே அந்த இருவர்’ என்று அவர்கள் கூறினார்கள்.
Book :64


لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لِأَبِي بَكْرٍ: انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا مِنَ الأَنْصَارِ، فَلَقِينَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ شَهِدَا بَدْرًا ” فَحَدَّثْتُ بِهِ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، فَقَالَ: «هُمَا عُوَيْمُ بْنُ سَاعِدَةَ وَمَعْنُ بْنُ عَدِيٍّ»


Bukhari-4020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4020. அனஸ் (ரலி) அறிவித்தார்.

அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப்போர் (நடந்த) நாளில் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத் (ரலி) (அவனைத் தேடிச்) சென்றார்கள். அப்போது அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாக) அவனைத் தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். (அவனை நோக்கி), ‘அபூ ஜஹ்லே! நீயா?’ என்றும் கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உலய்யா (ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:

இப்படித் தான் இந்த நிகழ்ச்சியினை (எனக்கு) அனஸ் (ரலி) அறிவித்தார்’ என்று சுலைமான் இப்னு தர்கான் (ரஹ்) கூறினார்கள். மேலும், ‘இப்னு மஸ்வூத் அவர்கள் (அபூ ஜஹ்லை நோக்கி), ‘அபூ ஜஹ்லே நீயா?’ என்று கேட்டபோது, ‘நீங்களே கொன்று விட்ட ஒரு மனிதனுக்கு மேலாக… அல்லது தம் சமுதாயத்தாராலேயே கொல்லப்பட்டு விட்ட ஒரு மனிதனுக்கு மேலாக.. யாரும் உண்டா?’ என்று (தன்னத்தானே புகழ்ந்தவனாக) அபூ ஜஹ்ல் சொன்னான்’ என சுலைமான் (ரஹ்) அறிவித்தார்.

அபூ மிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘விவசாயி அல்லாத ஒருவன் என்னைக் கொன்றிருந்தால்… (நன்றாயிருந்திருக்குமே!)’ என்று அபூ ஜஹ்ல் கூறினான் என இடம் பெற்றுள்ளது.
Book :64


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ: «مَنْ يَنْظُرُ مَا صَنَعَ أَبُو جَهْلٍ» فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَقَالَ: آنْتَ أَبَا جَهْلٍ؟ قَالَ ابْنُ عُلَيَّةَ، قَالَ سُلَيْمَانُ: هَكَذَا قَالَهَا أَنَسٌ، قَالَ : ” أَنْتَ أَبَا جَهْلٍ؟ قَالَ: وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ ” قَالَ سُلَيْمَانُ: أَوْ قَالَ: «قَتَلَهُ قَوْمُهُ» قَالَ: وَقَالَ أَبُو مِجْلَزٍ: «قَالَ أَبُو جَهْلٍ فَلَوْ غَيْرُ أَكَّارٍ قَتَلَنِي»


Bukhari-4019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4019. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) கூறினார்.
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, ‘அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்’ என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(வேண்டாம்.) அவனைக் கொல்லாதே’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!’ என்று கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய்’ என்று கூறினார்கள்.
Book :64


أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتَ إِنْ لَقِيتُ رَجُلًا مِنَ الكُفَّارِ فَاقْتَتَلْنَا، فَضَرَبَ إِحْدَى يَدَيَّ بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ، فَقَالَ: أَسْلَمْتُ لِلَّهِ، أَأَقْتُلُهُ يَا رَسُولَ اللَّهِ بَعْدَ أَنْ قَالَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ قَطَعَ إِحْدَى يَدَيَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَإِنَّكَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ»


Bukhari-4018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4018. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம், (பத்ருப்போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த அப்பாஸ் – ரலி அவர்களின் விடுதலை தொடர்பாக) ‘எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களிடமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை)விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்’ என்று அனுமதி கோரினார்.
நபி(ஸல்) அவர்கள், ‘அவரிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தைக் கூட (வாங்காமல்) ஒருபோதும்விட்டு விடாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book :64


أَنَّ رِجَالًا مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ائْذَنْ لَنَا فَلْنَتْرُكْ لِابْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ قَالَ: «وَاللَّهِ لاَ تَذَرُونَ مِنْهُ دِرْهَمًا»


Bukhari-4017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4017. ‘வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்’ என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.
என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
Book :64


حَتَّى حَدَّثَهُ أَبُو لُبَابَةَ البَدْرِيُّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ البُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا»


Bukhari-4016

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4016. இப்னு உமர்(ரலி) எல்லாப் பாம்பு(வகை)களையும் கொல்பவர்களாக இருந்தார்கள்.
Book :64


أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يَقْتُلُ الحَيَّاتِ كُلَّهَا


Next Page » « Previous Page