Author: Farook

Bukhari-3891

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3891. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இரண்டாவது) அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களில் நானும், என் தந்தையும், (ஸஃலபா பின் அனமா (ரலி) (அல்லது அம்ர் பின் அனமா-ரலி), பராஉ பின் மஃரூர் (ரலி) ஆகியோரான) என் இரண்டு மாமன்மார்களும் அடங்குவோம்.

அத்தியாயம்: 63


«أَنَا، وَأَبِي، وَخَالِي، مِنْ أَصْحَابِ العَقَبَةِ»


Bukhari-3890

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3890. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடன் என் இரண்டு மாமன்மார்களும் அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தனர்.

அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)


ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்), ‘அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஃரூர் (ரலி) அவர்களாவார்’ என்று கூறினார் என அபூஅப்துல்லாஹ்-புகாரியாகிய நான் கூறுகிறேன்.

அத்தியாயம்: 63


«شَهِدَ بِي خَالاَيَ العَقَبَةَ»

قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ ابْنُ عُيَيْنَةَ، أَحَدُهُمَا البَرَاءُ بْنُ مَعْرُورٍ


Bukhari-3889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

அன்சாரிகளின் சிறப்புகள்.

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும் (அந்த ஃபய்உ என்னும் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண் டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்).

ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டு மல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவையே என்று மனத்தளவில் கூட அவர்கள் நினைப்ப தில்லை. (59:9)

3889. அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி அகப் (ரஹ்) கூறினார்.

கஅப் இப்னு மாலிக் (ரலி) (முதுமையடைந்து) கண்பார்வையிழந்து விட்டபோது அவர்களைக் கரம் பிடித்து அழைத்துச் செல்பவர்களாயிருந்த (அவர்களின் மகனும் என் தந்தையுமான) அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) என்னிடம் கூறினார்கள்.

என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி), தபூக் போரின்போது, நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல் ((அசிரத்தை காரணமாக) தாம் பின் தங்கிவிட்ட வேளை குறித்து என்னிடம் பேசியதை நான் செவிமடுத்தேன்… என்று கூறிவிட்டு முழு ஹதீஸையும் கூறினார்கள்.

இப்னு புகைர் (ரஹ்) உகைல் (ரஹ்) வாயிலாக அறிவிக்கும் அறிவிப்பில், கஅப் இப்னு மாலிக் (ரலி) கூறுவதாக அறிவித்தார்கள்:

‘அகபா’

وَلَقَدْ «شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ العَقَبَةِ، حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ، وَمَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشْهَدَ بَدْرٍ وَإِنْ كَانَتْ بَدْرٌ أَذْكَرَ فِي النَّاسِ مِنْهَا»


Bukhari-3888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3888. இக்ரிமா (ரஹ்) அறிவித்தார்.

‘(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காண்பித்த (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்’ என்ற (திருக்குர்ஆன் 17:60) இறை வசனத்திற்கு விளக்கம் தரும்போது இப்னு அப்பாஸ்(ரலி),

‘இது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் குறிக்கும். குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரம் என்பது ‘ஸக்கூம்’ என்னும் (நரகத்திலுள்ள கள்ளி) மரத்தைக் குறிக்கும்’ என்று கூறினார்கள்.
Book :63


فِي قَوْلِهِ تَعَالَى: {وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ} [الإسراء: 60] قَالَ: «هِيَ رُؤْيَا عَيْنٍ، أُرِيَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ إِلَى بَيْتِ المَقْدِسِ»، قَالَ: {وَالشَّجَرَةَ المَلْعُونَةَ فِي القُرْآنِ} [الإسراء: 60]، قَالَ: «هِيَ شَجَرَةُ الزَّقُّومِ»


Bukhari-3887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 42

மிஃராஜ் – விண்ணுலகப் பயணம்.

3887. மாலிக் பின் ஸஃஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில் அல்லது ஹிஜ்ரில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.

…அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ் (ரலி), ‘இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்…

அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) கூறினார்:

…நான் என்னருகிலிருந்த (அனஸ்-ரலி அவர்களின் நண்பரான) ஜாரூத் (ரஹ்) அவர்களிடம், ‘அனஸ் (ரலி), ‘இங்கிருந்து, இது வரையில்… என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்), ‘நபி (ஸல்) அவர்களின் நெஞ்சின் காறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை என்ற கருத்தில் அனஸ் (ரலி) கூறினார்’ என்று பதிலளித்தார்கள்…

பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும்

أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُمْ عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِهِ: ” بَيْنَمَا أَنَا فِي الحَطِيمِ، – وَرُبَّمَا قَالَ: فِي الحِجْرِ – مُضْطَجِعًا إِذْ أَتَانِي آتٍ، فَقَدَّ: قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: فَشَقَّ مَا بَيْنَ هَذِهِ إِلَى هَذِهِ – فَقُلْتُ لِلْجَارُودِ وَهُوَ إِلَى جَنْبِي: مَا يَعْنِي بِهِ؟ قَالَ: مِنْ ثُغْرَةِ نَحْرِهِ إِلَى شِعْرَتِهِ، وَسَمِعْتُهُ يَقُولُ: مِنْ قَصِّهِ إِلَى شِعْرَتِهِ – فَاسْتَخْرَجَ قَلْبِي، ثُمَّ أُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ  مَمْلُوءَةٍ إِيمَانًا، فَغُسِلَ قَلْبِي، ثُمَّ حُشِيَ ثُمَّ أُعِيدَ، ثُمَّ أُتِيتُ بِدَابَّةٍ دُونَ البَغْلِ، وَفَوْقَ الحِمَارِ أَبْيَضَ، – فَقَالَ لَهُ الجَارُودُ: هُوَ البُرَاقُ يَا أَبَا حَمْزَةَ؟ قَالَ أَنَسٌ: نَعَمْ – يَضَعُ خَطْوَهُ عِنْدَ أَقْصَى طَرْفِهِ، فَحُمِلْتُ عَلَيْهِ، فَانْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الدُّنْيَا فَاسْتَفْتَحَ، فَقِيلَ مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ فَنِعْمَ المَجِيءُ جَاءَ فَفَتَحَ، فَلَمَّا خَلَصْتُ فَإِذَا فِيهَا آدَمُ، فَقَالَ: هَذَا أَبُوكَ آدَمُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ السَّلاَمَ، ثُمَّ قَالَ: مَرْحَبًا بِالِابْنِ الصَّالِحِ، وَالنَّبِيِّ الصَّالِحِ، ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ، فَاسْتَفْتَحَ قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ فَنِعْمَ المَجِيءُ جَاءَ فَفَتَحَ، فَلَمَّا خَلَصْتُ إِذَا يَحْيَى وَعِيسَى، وَهُمَا ابْنَا الخَالَةِ، قَالَ: هَذَا يَحْيَى وَعِيسَى فَسَلِّمْ عَلَيْهِمَا، فَسَلَّمْتُ فَرَدَّا، ثُمَّ قَالاَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ، وَالنَّبِيِّ الصَّالِحِ، ثُمَّ صَعِدَ بِي إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ، فَاسْتَفْتَحَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ فَنِعْمَ المَجِيءُ جَاءَ فَفُتِحَ، فَلَمَّا خَلَصْتُ إِذَا يُوسُفُ، قَالَ: هَذَا يُوسُفُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ ثُمَّ قَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ، ثُمَّ صَعِدَ بِي حَتَّى أَتَى السَّمَاءَ الرَّابِعَةَ فَاسْتَفْتَحَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: أَوَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ، فَنِعْمَ المَجِيءُ جَاءَ فَفُتِحَ، فَلَمَّا خَلَصْتُ إِلَى إِدْرِيسَ، قَالَ: هَذَا إِدْرِيسُ فَسَلِّمْ عَلَيْهِ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ ثُمَّ قَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ، ثُمَّ صَعِدَ بِي، حَتَّى أَتَى السَّمَاءَ الخَامِسَةَ فَاسْتَفْتَحَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ، قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، قِيلَ: مَرْحَبًا بِهِ، فَنِعْمَ المَجِيءُ جَاءَ، فَلَمَّا خَلَصْتُ فَإِذَا هَارُونُ، قَالَ: هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ، فَرَدَّ ثُمَّ قَالَ:


Bukhari-3886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

இஸ்ராஉ பற்றிய நபிமொழியும் அதுபற்றிய (17:1) இறைவசனமும்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஓர் இரவி(ன் ஒரு சிறு பகுதியி)ல் தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (வெகு தொலைவில் அமைந்த) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரையில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காட்டுவதற்காக,அழைத்துச் சென்ற (இறை)வன் மிகத் தூயவன். (அல் அக்ஸா பள்ளியான) அதன் சுற்றுப்புறங்களை நாம் அருள் வளம் மிக்கதாய் ஆக்கினோம். (17:1)

3886. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.
Book : 63


«لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ، قُمْتُ فِي الحِجْرِ، فَجَلاَ اللَّهُ لِي بَيْتَ المَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ»


Bukhari-3885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3885. அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், ‘அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளை (தகித்துக்) கொதிக்கும்’ என்று சொல்ல கேட்டேன்.

மற்றோர் அறிவிப்பில் ‘அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக் கொண்டிருக்கும்’ என்று காணப்படுகிறது.
Book :63


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذُكِرَ عِنْدَهُ عَمُّهُ، فَقَالَ: «لَعَلَّهُ تَنْفَعُهُ شَفَاعَتِي يَوْمَ القِيَامَةِ، فَيُجْعَلُ فِي ضَحْضَاحٍ مِنَ النَّارِ يَبْلُغُ كَعْبَيْهِ، يَغْلِي مِنْهُ دِمَاغُهُ» حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ بِهَذَا، وَقَالَ «تَغْلِي مِنْهُ أُمُّ دِمَاغِهِ»


Bukhari-3884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3884. முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபூவஹ்ப் (ரலி) அறிவித்தார்:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்டபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள்.

இச்சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்’ என்று கூறினார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபூஉமய்யாவும், ‘அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், ‘(என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)’ என்று அவர்களிடம் கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரக்கூடாது என்று) எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை’ என்று கூறினார்கள்.

அப்போதுதான், ‘இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும்

أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الوَفَاةُ، دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ، فَقَالَ: «أَيْ عَمِّ، قُلْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ» فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ: يَا أَبَا طَالِبٍ، تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَلَمْ يَزَالاَ يُكَلِّمَانِهِ، حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ: عَلَى مِلَّةِ عَبْدِ المُطَّلِبِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَسْتَغْفِرَنَّ لَكَ، مَا لَمْ أُنْهَ عَنْهُ» فَنَزَلَتْ: {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الجَحِيمِ} [التوبة: 113]. وَنَزَلَتْ: {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ} [القصص: 56]


Bukhari-3883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 அபூதாலிப் அவர்கள் குறித்த சம்பவம்.

3883. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) அறிவித்தார்.

நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்கள் பெரிய தந்தை (அபூ தாலிபு)க்கு (அவர் செய்த உதவிகளுக்குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரிகளின் தாக்குதலிருந்து) பாதுகாப்பவராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பில் தான் இருக்கிறார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 63


حَدَّثَنَا العَبَّاسُ بْنُ عَبْدِ المُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أَغْنَيْتَ عَنْ عَمِّكَ، فَإِنَّهُ كَانَ يَحُوطُكَ وَيَغْضَبُ لَكَ؟ قَالَ: «هُوَ فِي ضَحْضَاحٍ مِنْ نَارٍ، وَلَوْلاَ أَنَا لَكَانَ فِي الدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ»


Bukhari-3882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 நபி (ஸல்) அவர்களுக்கு(ம் அவர்களுடைய கிளையினருக்கும்) எதிராக, இணை வைத்தோர் எடுத்த சூளுரை.127

3882. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுனைன் போருக்குச் செல்ல விரும்பியபோது, ‘நாளை நாம் (போருக்காக) முகாமிடப் போகும் இடம் – இறைவன் நாடினால் – ‘பனூம்னானா’ குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்கிலாகும். அது அவர்கள், ‘நாங்கள் குஃப்ரில் (இறைமறுப்பில்) நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்த இடமாகும்.

Book : 63


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَرَادَ حُنَيْنًا: «مَنْزِلُنَا غَدًا إِنْ شَاءَ اللَّهُ، بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الكُفْرِ»


Next Page » « Previous Page