Author: Farook

Bukhari-3841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3841. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன ‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே’ என்றும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :63


أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ، كَلِمَةُ لَبِيدٍ:
[البحر الطويل]
أَلاَ كُلُّ شَيْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ … وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ


Bukhari-3840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3840. மேலும், இப்னு அப்பாஸ்(ரலி), ‘என் தந்தை (அப்பாஸ் – ரலி – அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் அவர்களின்) அறியாமைக் காலத்தில் ‘எங்களுக்குத் தொடர்ந்து நிரம்பும் கிண்ண(திலிருப்ப)தை அருந்தச் செய்’ என்று (தம் பணியாளரிடம்) கூற கேட்டேன்’ எனக் கூறினார்கள்.
Book :63


سَمِعْتُ أَبِي يَقُولُ فِي الجَاهِلِيَّةِ: «اسْقِنَا كَأْسًا دِهَاقًا»


Bukhari-3839

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3839. (இப்னு அப்பாஸ் – ரலி – அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.
திருக்குர்ஆனில் (திருக்குர்ஆன் 78: 34-ல்) இடம் பெற்றுள்ள ‘கஃஸன் திஹாக்கன் – நிரம்பிய கிண்ணமும்’ என்பதற்கு ‘(தீரத்திரத்) தொடர்ந்து நிரம்பிக் கொண்டிருக்கக் கூடிய கிண்ணமும் (சொர்க்கத்தில் உண்டு)’ என்று பொருளாகும்.
Book :63


{وَكَأْسًا دِهَاقًا} [النبأ: 34] قَالَ: «مَلْأَى مُتَتَابِعَةً»


Bukhari-3838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3838. உமர்(ரலி) அறிவித்தார்.
(ஹஜ்ஜின் போது) ‘ஸபீர்’ மலை மீது சூரியன் ஒளிராத வரை, இணைவைப்பவர்கள் முஸ்தலிஃபாவைவிட்டுப் புறப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மாறு செய்து சூரியன் உதிக்கும் முன்பாகப் புறப்பட்டார்கள்.
Book :63


«إِنَّ المُشْرِكِينَ كَانُوا لاَ يُفِيضُونَ مِنْ جَمْعٍ، حَتَّى تَشْرُقَ الشَّمْسُ عَلَى ثَبِيرٍ، فَخَالَفَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَفَاضَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ»


Bukhari-3837

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3837. அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம்(ரஹ்) அறிவித்தார்.
(என் தந்தை) காஸிம்(ரஹ்) ஜனாஸாவுக்கு (பிரேதத்திற்கு) முன்னால் நடந்து செல்வார்கள். அதற்காக எழுந்து நிற்கமாட்டார்கள்.
மேலும், ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து இப்படியும் அறிவிப்பார்கள்:
ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பதும் அதைக் கண்டால், ‘(உன் வாழ் நாளில்) நீ எப்படி இருந்தாயோ அப்படியே இப்போதும் இருப்பாய்’ என்று இருமுறை கூறுவதும் அறியாமைக் கால மக்களின் வழக்கமாகும்.
Book :63


أَنَّ القَاسِمَ كَانَ يَمْشِي بَيْنَ يَدَيِ الجَنَازَةِ وَلاَ يَقُومُ لَهَا، وَيُخْبِرُ عَنْ عَائِشَةَ قَالَتْ: ” كَانَ أَهْلُ الجَاهِلِيَّةِ يَقُومُونَ لَهَا يَقُولُونَ إِذَا رَأَوْهَا: كُنْتِ فِي أَهْلِكِ مَا أَنْتِ مَرَّتَيْنِ


Bukhari-3836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3836. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
‘சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book :63


«أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلَّا بِاللَّهِ»، فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا، فَقَالَ: «لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ»


Bukhari-3835

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3835. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்தமான கருப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள். அவளுக்குப் பள்ளி வாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் பேசி முடிக்கும்போது, ‘அரையணித் தோள் பட்டிகை (காணாமல் போன) நாள் எம் இறைவனின் விந்தைகளில் ஒன்றாகும். அந்த நாள் இறை மறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றிவிட்டது’ என்று பாடுவாள். இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், ‘அரையணித் தோள் பட்டிகை நாள்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள்: என் (எஜமானியர்) குடும்பத்தாரில் ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப் பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆன (சிவப்பு) அரையணித் தோள் பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து (கழன்று) விழுந்து விட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது. (என் எஜமானர்கள் நானே அதைச் திருடினேன் என்று) என் மீது குற்றம் சாட்டிச் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் (துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து

أَسْلَمَتِ امْرَأَةٌ سَوْدَاءُ لِبَعْضِ العَرَبِ وَكَانَ لَهَا حِفْشٌ فِي المَسْجِدِ، قَالَتْ: فَكَانَتْ تَأْتِينَا فَتَحَدَّثُ عِنْدَنَا، فَإِذَا فَرَغَتْ مِنْ حَدِيثِهَا قَالَتْ:
وَيَوْمُ الوِشَاحِ مِنْ تَعَاجِيبِ رَبِّنَا، … أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الكُفْرِ أَنْجَانِي
فَلَمَّا أَكْثَرَتْ، قَالَتْ لَهَا عَائِشَةُ: وَمَا يَوْمُ الوِشَاحِ؟ قَالَتْ: خَرَجَتْ جُوَيْرِيَةٌ لِبَعْضِ أَهْلِي، وَعَلَيْهَا وِشَاحٌ مِنْ أَدَمٍ، فَسَقَطَ مِنْهَا، فَانْحَطَّتْ عَلَيْهِ الحُدَيَّا، وَهِيَ تَحْسِبُهُ لَحْمًا، فَأَخَذَتْهُ فَاتَّهَمُونِي بِهِ فَعَذَّبُونِي، حَتَّى بَلَغَ مِنْ أَمْرِي أَنَّهُمْ طَلَبُوا فِي قُبُلِي، فَبَيْنَا هُمْ حَوْلِي وَأَنَا فِي كَرْبِي، إِذْ أَقْبَلَتِ الحُدَيَّا حَتَّى وَازَتْ بِرُءُوسِنَا، ثُمَّ أَلْقَتْهُ، فَأَخَذُوهُ، فَقُلْتُ لَهُمْ: هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ


Bukhari-3834

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3834. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) ‘ஸைனப்’ என்றழைக்கப்படும் ‘அஹ்மஸ்’ குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மெளன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, ‘இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘(இவள் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவளிடம், ‘நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மெளனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும்’ என்று கூறினார்கள். எனவே, அவள் (மெளன விரதத்தைக் கலைத்துப் பேசினாள். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), ‘முஹாஜிர்களில் ஒருவன்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண், ‘முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?’ என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), ‘குறைஷிகளின் குலத்தைச் சேர்ந்தவன்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண், ‘குறைஷிகளில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?’ என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), ‘நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நானே அபூ பக்ர்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண், ‘அறியாமைக் காலத்திற்குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து

دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ، فَرَآهَا  لاَ تَكَلَّمُ، فَقَالَ: «مَا لَهَا لاَ تَكَلَّمُ؟» قَالُوا: حَجَّتْ مُصْمِتَةً، قَالَ لَهَا: «تَكَلَّمِي، فَإِنَّ هَذَا لاَ يَحِلُّ، هَذَا مِنْ عَمَلِ الجَاهِلِيَّةِ»، فَتَكَلَّمَتْ، فَقَالَتْ: مَنْ أَنْتَ؟ قَالَ: «امْرُؤٌ مِنَ المُهَاجِرِينَ»، قَالَتْ: أَيُّ المُهَاجِرِينَ؟ قَالَ: «مِنْ قُرَيْشٍ»، قَالَتْ: مِنْ أَيِّ قُرَيْشٍ أَنْتَ؟ قَالَ: «إِنَّكِ لَسَئُولٌ، أَنَا أَبُو بَكْرٍ»، قَالَتْ: مَا بَقَاؤُنَا عَلَى هَذَا الأَمْرِ الصَّالِحِ الَّذِي جَاءَ اللَّهُ بِهِ بَعْدَ الجَاهِلِيَّةِ؟ قَالَ: «بَقَاؤُكُمْ عَلَيْهِ مَا اسْتَقَامَتْ بِكُمْ أَئِمَّتُكُمْ»، قَالَتْ: وَمَا الأَئِمَّةُ؟ قَالَ: «أَمَا كَانَ لِقَوْمِكِ رُءُوسٌ وَأَشْرَافٌ، يَأْمُرُونَهُمْ فَيُطِيعُونَهُمْ؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَهُمْ أُولَئِكِ عَلَى النَّاسِ»


Bukhari-3833

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3833. ஹஸன் இப்னு அபீ வஹ்ப் அல் முஹாஜிரீ(ரலி) அறிவித்தார்.
(இஸ்லாத்திற்கு முந்திய) அறியாமைக் காலத்தில் (ஒரு முறை) பெருவெள்ளம் ஒன்று (பெருக்கெடுத்து) வந்து (மக்காவின்) இரண்டு மலைகளையும் மூடிக் கொண்டது.
இதை ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) தம் தந்தை முஸய்யப் இப்னு ஹஸ்ன்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:
‘இது பெரியதொரு நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்பாகும்’ என்று அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்.
Book :63


«جَاءَ سَيْلٌ فِي الجَاهِلِيَّةِ فَكَسَا مَا بَيْنَ الجَبَلَيْنِ» – قَالَ سُفْيَانُ وَيَقُولُ: إِنَّ هَذَا لَحَدِيثٌ لَهُ شَأْنٌ


Bukhari-3832

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3832. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று’ என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போரிடுதல் தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்குமாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து)விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ரா செய்ய அனுமதியுண்டு’ என்று கூறி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுககாக இஹ்ராம் அணிந்து கொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எச்செயல்கள் அனுமதிக்கப்படும்?’ எனக் கேட்டனர்.

كَانُوا يَرَوْنَ أَنَّ العُمْرَةَ فِي أَشْهُرِ الحَجِّ مِنَ الفُجُورِ فِي الأَرْضِ، وَكَانُوا يُسَمُّونَ المُحَرَّمَ صَفَرًا، وَيَقُولُونَ: إِذَا بَرَا الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، حَلَّتِ العُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ، قَالَ: «فَقَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالحَجِّ، وَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الحِلِّ قَالَ: «الحِلُّ كُلُّهُ»


Next Page » « Previous Page