Author: Farook

Bukhari-3831

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

அறியாமைக் காலம்.67

3831. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ஆஷூரா (முஹர்ரம் 10-ம் நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்கிற நாளாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்றபோது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கும்) உத்தரவிட்டார்கள். ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது ஆஷூரா தினம், விரும்பியவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
Book : 63


«كَانَ يَوْمُ عَاشُورَاءَ يَوْمًا تَصُومُهُ قُرَيْشٌ، فِي الجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لاَ يَصُومُهُ»


Bukhari-3830

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3830. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்:
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (இறையில்லமான) பைத்துல் ஹராமைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் இருந்ததில்லை. மக்கள் இறையில்லத்தைச் சுற்றிலும் தொழுது வந்தார்கள். உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வந்தபோது அதைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டினார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ்(ரஹ்), ‘அந்தச் சுவர் குட்டையாக இருந்தது. பிறகு அதை (அப்துல்லாஹ்) இப்னு ஸுபைர்(ரலி) (உயர்த்திக்) கட்டினார்கள்’ என்று கூறுகிறார்கள்.
Book :63


«لَمْ يَكُنْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوْلَ البَيْتِ حَائِطٌ، كَانُوا يُصَلُّونَ حَوْلَ البَيْتِ، حَتَّى كَانَ عُمَرُ فَبَنَى حَوْلَهُ حَائِطًا»، قَالَ عُبَيْدُ اللَّهِ جَدْرُهُ قَصِيرٌ فَبَنَاهُ ابْنُ الزُّبَيْرِ


Bukhari-3829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்.64
3829. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(நபியவர்களின் காலத்தில் குறைஷிகளால்) கஅபா (புதுப்பித்துக்) காட்டப்பட்டபோது நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) (சிறுவரான) நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் வேட்டியை (கழற்றி) உங்கள் கழுத்துக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காப்பாற்றும்’ என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்த போது) அவர்கள் பூமியில் (மூர்ச்சித்து) விழுந்துவிட்டார்கள். அவர்களின் இரண்டு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்றுவிட்டன. பிறகு மூர்ச்சை தெளிந்ததும், ‘என் வேட்டி, என் வேட்டி’ என்று கேட்கலானார்கள். (வேட்டி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாக கட்டிக் கொண்டார்கள்.
Book : 63


لَمَّا بُنِيَتِ الكَعْبَةُ، ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الحِجَارَةَ، فَقَالَ عَبَّاسٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ يَقِيكَ مِنَ الحِجَارَةِ، فَخَرَّ إِلَى الأَرْضِ وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ: «إِزَارِي إِزَارِي فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ»


Bukhari-3828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3828. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, ‘குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தின் படி நடக்கவில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தேன். மேலும், அவர் உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், ‘அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), ‘நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளுடைய செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க் கொள்கிறேன்’ என்று சொல்வார்.
Book :63


وَقَالَ اللَّيْثُ، كَتَبَ إِلَيَّ هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: ” رَأَيْتُ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ قَائِمًا مُسْنِدًا ظَهْرَهُ إِلَى الكَعْبَةِ يَقُولُ: يَا مَعَاشِرَ قُرَيْشٍ، وَاللَّهِ مَا مِنْكُمْ عَلَى دِينِ إِبْرَاهِيمَ غَيْرِي، وَكَانَ يُحْيِي المَوْءُودَةَ، يَقُولُ لِلرَّجُلِ إِذَا أَرَادَ أَنْ يَقْتُلَ ابْنَتَهُ، لاَ تَقْتُلْهَا، أَنَا أَكْفِيكَهَا مَئُونَتَهَا، فَيَأْخُذُهَا فَإِذَا تَرَعْرَعَتْ قَالَ لِأَبِيهَا: إِنْ شِئْتَ دَفَعْتُهَا إِلَيْكَ، وَإِنْ شِئْتَ كَفَيْتُكَ مَئُونَتَهَا


Bukhari-3827

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3827. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல், (நபித்துவ காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின் பற்றுவதற்காக ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறிஞர் ஒருவரைச் சந்தித்து யூதர்களின் மார்க்கதைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அந்த அறிஞரிடம், ‘நான் உங்கள் மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றக் கூடும். எனவே, எனக்கு (அதைப் பற்றித்) தெரிவியுங்கள்’ என்று கூறினார். அதற்கு அந்த அறிஞர், ‘அல்லாஹ்வின் கோபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் (கொண்டு அதற்காக வேதனையை அனுபவித்துக்) கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது’ என்று கூறினார். ஸைத் அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தானே வெருண்டோடி வருகிறேன்! மேலும், அல்லாஹ்வின் கோபத்தில் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். என்னால் எப்படி அதைத் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு அறிவித்துத் தரமுடியுமா?’ என்று கேட்டார். அந்த அறிஞர், ‘அது (ஏகத்துவ மார்க்கமான) நேரிய மார்க்கமாகத் தவிர இருக்க முடியாது என்பதை நான் நன்கறிவேன்’ என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள், ‘நேரிய மார்க்கம் என்பதென்ன?’ என்று கேட்டதற்கு அந்த அறிஞர், ‘இது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின்

أَنَّ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ خَرَجَ إِلَى الشَّأْمِ يَسْأَلُ عَنِ الدِّينِ، وَيَتْبَعُهُ، فَلَقِيَ عَالِمًا مِنَ اليَهُودِ فَسَأَلَهُ عَنْ دِينِهِمْ، فَقَالَ: إِنِّي لَعَلِّي أَنْ أَدِينَ دِينَكُمْ، فَأَخْبِرْنِي، فَقَالَ: لاَ تَكُونُ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ غَضَبِ اللَّهِ، قَالَ زَيْدٌ مَا أَفِرُّ إِلَّا مِنْ غَضَبِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ غَضَبِ اللَّهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُهُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ، قَالَ: مَا أَعْلَمُهُ إِلَّا أَنْ يَكُونَ حَنِيفًا، قَالَ زَيْدٌ: وَمَا الحَنِيفُ؟ قَالَ: دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا، وَلاَ نَصْرَانِيًّا، وَلاَ يَعْبُدُ إِلَّا اللَّهَ، فَخَرَجَ زَيْدٌ فَلَقِيَ عَالِمًا مِنَ النَّصَارَى فَذَكَرَ مِثْلَهُ، فَقَالَ: لَنْ تَكُونَ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ لَعْنَةِ اللَّهِ، قَالَ: مَا أَفِرُّ إِلَّا مِنْ لَعْنَةِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ لَعْنَةِ اللَّهِ، وَلاَ مِنْ غَضَبِهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ، قَالَ: مَا أَعْلَمُهُ إِلَّا أَنْ يَكُونَ حَنِيفًا، قَالَ: وَمَا الحَنِيفُ؟ قَالَ: دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا ، وَلاَ يَعْبُدُ إِلَّا اللَّهَ، فَلَمَّا رَأَى زَيْدٌ قَوْلَهُمْ فِي إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ خَرَجَ، فَلَمَّا بَرَزَ رَفَعَ يَدَيْهِ فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَشْهَدُ أَنِّي عَلَى دِينِ إِبْرَاهِيمَ


Bukhari-3826

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ بِأَسْفَلِ بَلْدَحٍ، قَبْلَ أَنْ يَنْزِلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَحْيُ، فَقُدِّمَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُفْرَةٌ، فَأَبَى أَنْ يَأْكُلَ مِنْهَا، ثُمَّ قَالَ زَيْدٌ: إِنِّي لَسْتُ آكُلُ مِمَّا تَذْبَحُونَ عَلَى أَنْصَابِكُمْ، وَلاَ آكُلُ إِلَّا مَا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ، وَأَنَّ زَيْدَ بْنَ عَمْرٍو كَانَ يَعِيبُ عَلَى قُرَيْشٍ ذَبَائِحَهُمْ، وَيَقُولُ: الشَّاةُ خَلَقَهَا اللَّهُ، وَأَنْزَلَ لَهَا مِنَ السَّمَاءِ المَاءَ، وَأَنْبَتَ لَهَا مِنَ الأَرْضِ، ثُمَّ تَذْبَحُونَهَا عَلَى غَيْرِ اسْمِ اللَّهِ، إِنْكَارًا لِذَلِكَ وَإِعْظَامًا لَهُ


Bukhari-3825

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 ஹிந்த் பின்த் உத்பா-ரலியல்லாஹு அன்ஹா- அவர்கள் பற்றிய குறிப்பு.61
3825. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஹிந்த் பின்த் உத்பா, (நபி – ஸல் – அவர்களிடம்) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)’ என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை’ என்று பதிலளித்தார்கள்.
Book : 63


جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَا كَانَ عَلَى ظَهْرِ الأَرْضِ مِنْ أَهْلِ خِبَاءٍ أَحَبُّ إِلَيَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ، ثُمَّ مَا أَصْبَحَ اليَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ خِبَاءٍ، أَحَبَّ إِلَيَّ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ، قَالَ: «وَأَيْضًا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا؟ قَالَ: «لاَ أُرَاهُ إِلَّا بِالْمَعْرُوفِ»


Bukhari-3824

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 ஹுதைஃபா பின் யமான் அல் அப்ஸீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.59
3824. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின் (ஆரம்பத்தின்)போது இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி,) பின் அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா(ரலி), தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!’ என்று உரக்கக் கூவினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா(ரலி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்:
‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா(ரலி) மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது’ என்று என் தந்தை (உர்வா – ரஹ் – அவர்கள்) கூறுகிறார்கள்.
Book : 63


لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، هُزِمَ المُشْرِكُونَ هَزِيمَةً بَيِّنَةً، فَصَاحَ إِبْلِيسُ: أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ عَلَى أُخْرَاهُمْ، فَاجْتَلَدَتْ أُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ، فَنَادَى أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي، فَقَالَتْ: فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ، قَالَ أَبِي: فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهَا بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ


Bukhari-3823

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3823. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் ‘துல்கலஸா’ என்னும் ஆலயம் ஒன்று இருந்தது. அது யமன் நாட்டு கஅபா.. அல்லது ஷாம் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீ விடுவித்து விடுவாயா?’ என்று கேட்டார்கள். எனவே நான் ‘அஹ்மஸ்’ என்னும் (என்) குலத்தாரிலிருந்து நூற்றி ஐம்பது குதிரை வீரர்களுடன் அதை நோக்கிப் புறப்பட்டேன். அதை நாங்கள் உடைத்து விட்டோம். அதனருகே இருந்த(பகை)வர்களை நாங்கள் கொன்று விட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தோம். அப்போது, நபி(ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
Book :63


كَانَ فِي الجَاهِلِيَّةِ بَيْتٌ، يُقَالُ لَهُ ذُو الخَلَصَةِ وَكَانَ يُقَالُ لَهُ: الكَعْبَةُ اليَمَانِيَةُ أَوِ الكَعْبَةُ الشَّأْمِيَّةُ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ أَنْتَ مُرِيحِي مِنْ ذِي الخَلَصَةِ» قَالَ: فَنَفَرْتُ إِلَيْهِ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ، قَالَ: فَكَسَرْنَا، وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ، فَأَتَيْنَاهُ فَأَخْبَرْنَاهُ، فَدَعَا لَنَا وَلِأَحْمَسَ


Bukhari-3822

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 ஜரீர் பின் அப்தில்லாஹ் அல் பஜலீ- ரலியல்லாஹு அன்ஹு-அவர்கள் பற்றிய குறிப்பு.54
3822. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நான் இஸ்லாதை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; சிரித்த முகத்துடனே தவிர அவர்கள் என்னைக் கண்டதில்லை.
என கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
Book : 63


«مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلَّا ضَحِكَ»


Next Page » « Previous Page