Author: Farook

Bukhari-3317

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3317. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதருடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, ‘தொடர்ந்து அனுப்பப்படும் காற்றுகளின் மீது சத்தியமாக!’ என்னும் அத்தியாயம் (77) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் (திரு) வாயிலிருந்து (அவர்கள் ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைக் போல் அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்றார்கள்.

வேறொரு வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘நாங்கள் அந்த அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்களின் (திரு) வாயிலிருந்து புத்தம் புதியதாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறினார்கள்.

இதை அறிவிப்பாளர் இஸ்ராயீல்(ரஹ்) அவர்களைப் போன்றே அபூ அவானா(ரஹ்) அவர்களும் முகீரா இப்னு மிக்ஸம்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்திருக்கிறார்கள்.
Book :59


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، فَنَزَلَتْ {وَالمُرْسَلاَتِ عُرْفًا} [المرسلات: 1] فَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، إِذْ خَرَجَتْ حَيَّةٌ مِنْ جُحْرِهَا، فَابْتَدَرْنَاهَا لِنَقْتُلَهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا» وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ، قَالَ: وَإِنَّا لَنَتَلَقَّاهَا  مِنْ فِيهِ رَطْبَةً


Bukhari-3316

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :59


«خَمِّرُوا الآنِيَةَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَأَجِيفُوا الأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ العِشَاءِ، فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً، وَأَطْفِئُوا المَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ، فَإِنَّ الفُوَيْسِقَةَ رُبَّمَا اجْتَرَّتِ الفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ البَيْتِ»،

قَالَ: ابْنُ جُرَيْجٍ وَحَبِيبٌ، عَنْ عَطَاءٍ «فَإِنَّ لِلشَّيَاطِينِ»


Bukhari-3315

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3315. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து பிராணிகள் எத்தகையவையெனில் அவற்றை இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமெதுவும் இல்லை. தேள், எலி, வெறி நாய், காக்கை, பருந்து ஆகியன தாம் அவை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :59


خَمْسٌ مِنَ الدَّوَابِّ، مَنْ قَتَلَهُنَّ وَهُوَ مُحْرِمٌ فَلاَ جُنَاحَ عَلَيْهِ: العَقْرَبُ، وَالفَأْرَةُ، وَالكَلْبُ العَقُورُ، وَالغُرَابُ، وَالحِدَأَةُ


Bukhari-3314

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்.ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது என்னும் நபிமொழியும்,

ஐந்து பிராணிகள் தீங்கிழைக்கக் கூடியவை. அவற்றை ஹரமிலும் கொல்லலாம் என்னும் நபிமொழியும்.

3314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (பிராணிகள்) எத்தகையவையெனில் அவற்றை ‘ஹரம்’ எனும் பனித எல்லைக்குள் கொன்றாலும் குற்றம் ஏதுமில்லை. எலி, தேள், பருந்து, காக்கை, வெறி, நாய் ஆகியன தாம் அவை. என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59


خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الحَرَمِ: الفَأْرَةُ، وَالعَقْرَبُ، وَالحُدَيَّا، وَالغُرَابُ، وَالكَلْبُ العَقُورُ


Bukhari-3313

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3313. அப்போது அபூ லுபாபா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்களிடம்,

‘நபி(ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்’ என்று தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர்(ரலி) அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.
Book :59


فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ البُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا»


Bukhari-3312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3312. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) பாம்புகளைக் கொன்று வந்தார்கள்.
Book : 59


أَنَّهُ كَانَ يَقْتُلُ الحَيَّاتِ


Bukhari-3311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3311. (இந்த நிலையில்) அபூ லுபாபா(ரலி) அவர்களை சந்தித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மெல்லிய வெண்ணிறப் பாம்புகளைக் கொல்லாதீர்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர.

ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தையைச் சிதைத்துவிடும்; பார்வையைப் போக்கிவிடும். எனவே, அவற்றைக் கொன்றுவிடுங்கள்’ எனக் கூறினார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.
Book :59


فَلَقِيتُ أَبَا لُبَابَةَ، فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَقْتُلُوا الجِنَّانَ، إِلَّا كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الوَلَدَ، وَيُذْهِبُ البَصَرَ فَاقْتُلُوهُ»


Bukhari-3310

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3310. இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பாம்புகளைக் கொன்று வந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன்னார்கள்,

நபி (ஸல்) அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை இடித்தார்கள். பாம்புச் சட்டையொன்றை அதில் கண்டார்கள். உடனே, அந்தப் பாம்பு எங்கேயிருக்கிறது என்று பாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். மக்கள் (தேடிப் பார்த்து அதைக்) கண்டு பிடித்தார்கள். நபி (ஸல்) அவரகள், அதைக் கொன்று விடுங்கள் என்று சொன்னார்கள். அதனால் தான் நான் அவற்றைக் கொன்று வந்தேன்.
Book :59


أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقْتُلُ الحَيَّاتِ ثُمَّ نَهَى، قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدَمَ حَائِطًا لَهُ، فَوَجَدَ فِيهِ سِلْخَ حَيَّةٍ، فَقَالَ: «انْظُرُوا أَيْنَ هُوَ» فَنَظَرُوا، فَقَالَ: «اقْتُلُوهُ» فَكُنْتُ أَقْتُلُهَا لِذَلِكَ


Bukhari-3309

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3309. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட (அப்தர் எனும்) பாம்பைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அது கண் பார்வையைப் போக்கிவிடும். கருவைச் சிதைந்து போகச் செய்துவிடும் என்று கூறினார்கள்
Book :59


أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الأَبْتَرِ وَقَالَ: «إِنَّهُ يُصِيبُ البَصَرَ، وَيُذْهِبُ الحَبَلَ»


Bukhari-3308

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3308. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையை அவித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

ஹம்மாத் இப்னு ஸலமா (ரஹ்) இதையே உஸாமா (ரஹ்) வழியாக அறிவித்தார்கள்.
Book :59


«اقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ، فَإِنَّهُ يَلْتَمِسُ البَصَرَ، وَيُصِيبُ الحَبَلَ»


Next Page » « Previous Page