Author: Farook

Darimi-3429

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் காலையில் (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவர், அவர் வெறுக்கும் எந்த ஒன்றையும் மாலை வரை காணமாட்டார்.

யார் அதை மாலையில் ஓதுவாரோ அவர், அவர் வெறுக்கும் எந்த ஒன்றையும் காலை வரை காணமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ، وَفَاتِحَةَ حم الْمُؤْمِنِ إِلَى قَوْلِهِ: {غَافِرِ الذَّنبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيدِ الْعِقَابِ ذِي الطَّوْلِ لاَ إِلَهَ إِلاَّ هُوَ إِلَيْهِ الْمَصِيرُ} [غافر: 3] لَمْ يَرَ شَيْئًا يَكْرَهُهُ حَتَّى يُمْسِيَ، وَمَنْ قَرَأَهَا حِينَ يُمْسِي، لَمْ يَرَ شَيْئًا يَكْرَهُهُ حَتَّى يُصْبِحَ


Almujam-Alawsat-8068

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8068. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ»


Almujam-Alkabir-7532

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

அறிவிப்பாளர் முஹம்மது பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில், குல்ஹுவல்லாஹு அஹத் என்ற (112) அத்தியாயத்தையும் ஆயத்துல் குர்ஸீயுடன் ஓதவேண்டும் என இடம்பெற்றுள்ளது.


«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ، إِلَّا الْمَوْتُ»

زَادَ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ فِي حَدِيثِهِ: «وَقُلُ هُوَ اللهُ أَحَدٌ»


Kubra-Nasaayi-9848

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

9848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ»


Musnad-Ahmad-25328

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25328. நான் நபி (ஸல்) அவர்களிடம்),  பெண்களும் அறப்போர் புரிவது பற்றி கேட்டேன். அதற்கவர்கள், ‘உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும் என்றோ அல்லது உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجِهَادِ؟ فَقَالَ: «بِحَسْبِكُنَّ الْحَجُّ» أَوْ قَالَ: «جِهَادُكُنَّ الْحَجُّ»


Musnad-Ahmad-25325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25325. நபி (ஸல்) அவர்களிடம், அவர்களின் மனைவிமார்களாகிய நாங்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டோம். அதற்கவர்கள், ‘உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும் என்றோ அல்லது உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجِهَادِ، فَقَالَ: «حَسْبُكُنَّ الْحَجُّ، أَوْ جِهَادُكُنَّ الْحَجُّ»


Musnad-Ahmad-24888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களின் அறப்போர், இந்த இறையில்லமான கஃபாவை ஹஜ் செய்வது தான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«جِهَادُ النِّسَاءِ حَجُّ هَذَا الْبَيْتِ»


Musnad-Ahmad-24497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24497. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (பெண்களாகிய) நாங்கள் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களுக்கு) சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத (இறைவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்ற) ஹஜ்ஜாகும்!’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை!’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نُجَاهِدُ مَعَكَ؟ فَقَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكِ أَحْسَنُ الْجِهَادِ، وَأَجْمَلُهُ الْحَجُّ، حَجٌّ مَبْرُورٌ» فَقَالَتْ عَائِشَةُ: «فَلَا أَدَعُ الْحَجَّ أَبَدًا بَعْدَ إذ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musnad-Ahmad-24463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24463. ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அறப்போர் புரிவது பெண்கள் மீது கடமையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களாகிய) உங்கள் ஜிஹாத், ஹஜ் செய்வதும் உம்ரா செய்வதும் தான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹித்தான் (ரஹ்)


أَنَّهَا سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَعَلَى النِّسَاءِ جِهَادٌ؟ قَالَ: «الْحَجُّ وَالْعُمْرَةُ، هُوَ جِهَادُ النِّسَاءِ»


Musnad-Ahmad-24422

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24422. ஆயிஷா(ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (பெண்களாகிய) நாங்களும் உங்களுடன் வந்து அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா பின்த் தல்ஹா (ரஹ்)


يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَخْرُجُ نُجَاهِدُ مَعَكُمْ، قَالَ: «لَا، جِهَادُكُنَّ الْحَجُّ الْمَبْرُورُ، هُوَ لَكُنَّ جِهَادٌ»


Next Page » « Previous Page