24393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களாகிய) நீங்கள் வீட்டிலேயே இருந்துங் கொள்ளுங்கள். அதுவே உங்களின் ஜிஹாத் ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«عَلَيْكُنَّ بِالْبَيْتِ، فَإِنَّهُ جِهَادُكُنَّ»
24393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களாகிய) நீங்கள் வீட்டிலேயே இருந்துங் கொள்ளுங்கள். அதுவே உங்களின் ஜிஹாத் ஆகும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«عَلَيْكُنَّ بِالْبَيْتِ، فَإِنَّهُ جِهَادُكُنَّ»
24383. இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) கூறினார்.
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்களாகிய நாங்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டோம். அதற்கவர்கள், ‘உங்களின் ஜிஹாத், ஹஜ் செய்வது ஆகும்’ என்றோ அல்லது “உங்களுக்கு ஹஜ் செய்வதே போதும்” என்றோ கூறினார்கள்.
اسْتَأْذَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجِهَادِ، فَقَالَ: «جِهَادُكُنَّ، أَوْ حَسْبُكُنَّ الْحَجُّ»
2628. நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! குர்ஆனில் அறப்போர் புரிவதை விட சிறந்த ஒரு நற்செயலை நான் காணவில்லை. எனவே, (பெண்களாகிய) நாங்களும் உங்களுடன் வந்து அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம் ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَخْرُجُ فَنُجَاهِدَ مَعَكَ، فَإِنِّي لَا أَرَى عَمَلًا فِي الْقُرْآنِ، أَفْضَلَ مِنَ الْجِهَادِ، قَالَ: «لَا، وَلَكُنَّ أَحْسَنُ الْجِهَادِ وَأَجْمَلُهُ، حَجُّ الْبَيْتِ، حَجٌّ مَبْرُورٌ»
பாடம்:
உம்ரா செய்தல்.
2989. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹஜ் செய்வது ஜிஹாத் செய்வது போன்றதாகும். உம்ரா செய்வது உபரியான வணக்கமாகும்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
«الْحَجُّ جِهَادٌ، وَالْعُمْرَةُ تَطَوُّعٌ»
23937. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள்.
பின்பு அவருக்கும், மற்றவர்களுக்கும் “உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை கேட்கட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)
سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي الصَّلَاةِ، وَلَمْ يَذْكُرِ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا» ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ وَلِغَيْرِهِ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ لِيُصَلِّ عَلَى النَّبِيِّ، ثُمَّ لِيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ»
பாடம்:
தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்துவதும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வதும்.
1284. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்று, தொழுகையாளியே! நீ அவசரப்பட்டு விட்டாய் என்று கூறி அம்மனிதருக்கு அல்லாஹ்வை புகழ்வது பற்றியும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வது பற்றியும் கற்றுக் கொடுத்தார்கள்.
பின்பு அந்த மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை புகழ்ந்து, நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொன்னபோது, (இப்போது) பிரார்த்தனை செய்! பதிலளிக்கப்படும். கேள்! கொடுக்கப்படும்” என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)
سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي»، ثُمَّ عَلَّمَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي، فَمَجَّدَ اللَّهَ وَحَمِدَهُ، وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ تُجَبْ، وَسَلْ تُعْطَ»
4225. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ஃபஜ்ர் தொழுகையின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களைக் கூடத் தொழக்கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள்,”(ஆம்). ஃபஜ்ர் தொழுகையின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களைக் கூடத்தொழக்கூடாது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ ” قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَلَا رَكْعَتَيِ الْفَجْرِ؟ قَالَ: ” وَلَا رَكْعَتَيِ الْفَجْرِ
4226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. ஸுபுஹுத் தொழுகையின் (முன் சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தவிர.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةَ، إِلَّا رَكْعَتَيِ الصُّبْحِ
أنبأ أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ، أنبأ أَبُو مُحَمَّدِ بْنُ حَيَّانَ، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دَاوُدَ، ثنا أَبُو عَمْرٍو الْحَلَبِيُّ السُّوسِيُّ، ثنا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ، فَذَكَرَهُ
866. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»
பாடம்:
இகாமத் சொல்லப்பட்டபின் வேறு தொழுகைகளை தொழுவது வெறுப்பிற்குரிய செயல்.
865. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»
சமீப விமர்சனங்கள்