Author: Farook

Musnad-Ahmad-3265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3265. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன், மதீனாவில் எட்டு ரக்அத் (கொண்ட லுஹர், அஸர் ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்; ஏழு ரக்அத் (கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்.

அப்போது அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا، وَسَبْعًا جَمِيعًا» ، قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: لِمَ فَعَلَ ذَاكَ؟ قَال: أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ


Musnad-Ahmad-3467

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3467. நான், (ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் தொழுதேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا، وَسَبْعًا جَمِيعًا»


Musnad-Ahmad-2582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2582. (மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ صَلَّى سَبْعًا جَمِيعًا، وَثَمَانِيًا جَمِيعًا


Musnad-Ahmad-2465

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2465. (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَمَانِيًا جَمِيعًا، وَسَبْعًا جَمِيعًا»


Musnad-Ahmad-1918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1918. அபுஷ்ஷஅஸா ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத்கள் (கொண்ட லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன். ஏழு ரக்அத்கள் கொண்ட (மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை இடையில் கூடுதல் தொழுகைகள் ஏதும் தொழாமல்) சேர்ந்தாற்போல் தொழுதிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றேன். அதற்கு அபுஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் “நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்றார்கள்.


«صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَمَانِيًا جَمِيعًا، وَسَبْعًا جَمِيعًا» ، قَالَ: قُلْتُ لَهُ: يَا أَبَا الشَّعْثَاءِ، أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ، وَعَجَّلَ الْعَصْرَ، وَأَخَّرَ الْمَغْرِبَ، وَعَجَّلَ الْعِشَاءَ؟ قَالَ: وَأَنَا أَظُنَّ ذَلِكَ


Ibn-Majah-1069

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பயணத்தில் இருத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

1069. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது அவர்களுக்கு எந்த அவசர வேலையும் இருக்கவில்லை. (போர் அபாயம் மிகுந்த) எதிரிகளின் அச்சம் போன்ற பயமும் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ «يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ، مِنْ غَيْرِ أَنْ يُعْجِلَهُ شَيْءٌ، وَلَا يَطْلُبَهُ عَدُوُّ، وَلَا يَخَافَ شَيْئًا»


Abu-Dawood-1214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1214. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) எட்டு ரக்அத்களும்,மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) ஏழு ரக்அத்களும் எங்களுக்கு தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸைத் (ரஹ்)

 

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஸுலைமான், முஸத்தத் போன்றோர் “பினா-எங்களுக்கு” என்ற வார்த்தையை கூறவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ், “மழை இல்லாத நேரத்தில்” என்ற வார்த்தையை கூடுதலாக அறிவிக்கிறார். (இது பலவீனமானது. (பார்க்க: அஹ்மத்-3235 )

 


«صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ ثَمَانِيًا وَسَبْعًا، الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ»،


Abu-Dawood-1211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1211. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


«جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ مِنْ غَيْرِ خَوْفٍ، وَلَا مَطَرٍ»، فَقِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَا أَرَادَ إِلَى ذَلِكَ؟ قَالَ: «أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ»


Abu-Dawood-1210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1210. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மழைக் காலத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதுகிறேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்.

மேலும் கூறுகிறார்:

அபுஸ் ஸுபைரிடமிருந்து மாலிக் இமாம் அறிவித்ததைப்போன்றே ஹம்மாத் பின் ஸலமாவும் அறிவித்துள்ளார். என்றாலும் குர்ரத்து பின் காலித் “நாங்கள் தபூக் போருக்கு சென்ற பயணத்தில்” என்று அறிவித்துள்ளார்.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا، فِي غَيْرِ خَوْفٍ، وَلَا سَفَرٍ»

قَالَ: قَالَ مَالِكٌ: «أَرَى ذَلِكَ كَانَ فِي مَطَرٍ»،


Nasaayi-603

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

603. நான், (ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் தொழுதேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا»


Next Page » « Previous Page