Author: Farook

Darimi-3463

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3463. அப்துல்லாஹ் பின் ஈஸா அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை உண்மையான ஈமானுடன் ஓதுபவர், (பாவங்கள்) மன்னிக்கப்பட்டவராக காலையில் எழுவார் என்ற செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது.


«أُخْبِرْتُ أَنَّهُ مَنْ قَرَأَ حم الدُّخَانَ لَيْلَةَ الْجُمُعَةِ إِيمَانًا وَتَصْدِيقًا بِهَا، أَصْبَحَ مَغْفُورًا لَهُ»


Ibn-Hibban-2574

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)


«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»


Darimi-3458

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3458. யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். மேலும் அது முழு குர்ஆனுக்கும் நிகராகும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஸுலைமான் பின் தர்க்கான் (ரஹ்)


«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ أَوْ مَرْضَاةِ اللَّهِ، غُفِرَ لَهُ» وَقَالَ: «بَلَغَنِي أَنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ كُلَّهُ»


Tayalisi-2589

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2589. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَرَأَ: يس فِي لَيْلَةٍ الْتِمَاسَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ


Almujam-Assaghir-1010

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு இரவிலும் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  வழமையாக ஓதிவரக்கூடியவர் மரணிக்கும்போது ஷீஹீதாக மரணிப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ دَاوَمَ عَلَى قِرَاءَةِ يس كُلَّ لَيْلَةٍ , ثُمَّ مَاتَ , مَاتَ شَهِيدٌ»


Almujam-Alawsat-7018

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு இரவிலும் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  வழமையாக ஓதிவரக்கூடியவர் மரணிக்கும்போது ஷீஹீதாக மரணிப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«مِنْ دَاوَمَ عَلَى قِرَاءَةِ يس كُلَّ لَيْلَةٍ، ثُمَّ مَاتَ، مَاتَ شَهِيدًا»


Darimi-3461

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3461. பகலின் ஆரம்பத்தில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதக்கூடியவருக்கு அவரின் தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)


«مَنْ قَرَأَ يس فِي صَدْرِ النَّهَارِ، قُضِيَتْ حَوَائِجُهُ»


Almujam-Assaghir-417

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

417. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகலிலும், இரவிலும் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ يس فِي يَوْمٍ أَوْ لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»


Almujam-Alawsat-3509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகலிலும், இரவிலும் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ يَاسِينَ فِي يَوْمٍ وَلَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»


Abi-Yala-6232

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6232. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை  ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ سُورَةَ الدُّخَانِ لَيْلَةَ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ»


Next Page » « Previous Page