2889. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ غُفِرَ لَهُ»
2889. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةِ الجُمُعَةِ غُفِرَ لَهُ»
பாடம்:
துஃகான் (44 வது) அத்தியாயத்தின் சிறப்பு.
2888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதுபவருக்கு காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ قَرَأَ حم الدُّخَانَ فِي لَيْلَةٍ أَصْبَحَ يَسْتَغْفِرُ لَهُ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ»
3460. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அந்த இரவில் மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ، غُفِرَ لَهُ فِي تِلْكَ اللَّيْلَةِ»
6224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார். ஒருவர் வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை ஓதினால் காலையில் மன்னிக்கப்பட்டவராக எழுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ أَصْبَحَ مَغْفُورًا لَهُ، وَمَنْ قَرَأَ حم الَّتِي يُذْكَرُ فِيهَا الدُّخَانُ فِي لَيْلَةِ الْجُمُعَةِ أَصْبَحَ مَغْفُورًا لَهُ»
9312. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
إِنَّ لِكُلِّ شَيْءٍ قلبا وقلب القرآن {يس}
6009. ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும். இதை ஒருவர் ஓதினால் முழுகுர்ஆனையும் ஓதியவரைப் போன்றவராவார்.
ஒருவர் அல்காஃபிரூன் எனத் தொடங்கும் (109 வது) அத்தியாயத்தை ஓதினால் அது குர்ஆனில் நான்கில் ஒரு பங்குக்கு நிகராகும். இதா ஸுல்ஸிலத் எனத் தொடங்கும் (99 வது அத்தியாயத்தை ) ஓதினால் அது குர்ஆனில் பாதிக்கு நிகராகும் என ஒரு மனிதர் எனக்கு அறிவித்தார்.
அறிவிப்பவர்: மஃமர் (ரஹ்)
أَنَّ لِكُلِّ شَيءٍ قَلْبٌ وَقَلْبُ الْقُرْآنِ يس وَمَنْ قَرَأَهَا فَإِنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ – أَوْ قَالَ: تَعْدِلُ قِرَاءَةَ الْقُرْآنِ كُلِّهِ – وَمَنْ قَرَأَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ فَإِنَّهَا تَعْدِلُ رُبْعَ الْقُرْآنِ، وَإِذَا زُلْزِلَتْ شَطْرَ الْقُرْآنِ
7282. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
لِكُلِّ شَيْءٍ قَلْبٌ وَقَلْبُ الْقُرْآنِ {يس}
3459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும். யார் அதை ஓதுகிறாரோ அவர் பத்து தடவை குர்ஆனை ஓதியவர் போன்றவராவார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«إِنَّ لِكُلِّ شَيْءٍ قَلْبًا، وَإِنَّ قَلْبَ الْقُرْآنِ يس، مَنْ قَرَأَهَا، فَكَأَنَّمَا قَرَأَ الْقُرْآنَ عَشْرَ مَرَّاتٍ»
13610. ஒரு மனிதன் கப்ரில் வைக்கப்பட்டவுடன் அவனிடத்தில் இரு வானவர்கள் வந்து உன்னை ஒரு அடி அடிக்கப்போகிறோம்! என்று கூறுவர். என்ன காரணத்திற்காக அடிக்கப்போகிறீர்கள்? என்று அந்த மனிதன் கேட்பான். அதற்குள் அவ்விருவரும் அவனை ஒரு அடி அடித்துவிடுவார்கள். அதனால் அவனின் கப்ர் முழுவதும் நெருப்பாகிவிடும். அவனை அப்படியே விட்டுவிடுவார்கள். பயம் நீங்கி, தெளிவடைந்து எதற்காக என்னை அடித்தீர்கள்? என்று அவன் கேட்பான்.
அதற்கவர்கள், நீ உளூவின்றி ஒரு தொழுகையை தொழுதாய். அநீதமிழைக்கப்பட்டவனைக் கண்டும் அவனுக்கு உதவி செய்யாமல் அவனைக் கடந்து சென்றாய். (அதற்காகவே நாங்கள் அடித்தோம்) என்று அவ்விரு வானவர்களும் கூறுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
يَوْمَ أُدْخِلَ رَجُلٌ فِي قَبْرِهِ، فَأَتَاهُ مَلَكَانَ فَقَالَا لَهُ: إِنَّا ضَارِبُوكَ ضَرْبَةً، فَقَالَ لَهُمَا: عَلَامَ تَضْرِبَانِي؟ فَضَرَبَاهُ ضَرْبَةً امْتَلَأَ قَبْرُهُ مِنْهَا نَارًا، فَتَرَكَاهُ حَتَّى أَفَاقَ وَذَهَبَ عَنْهُ الرُّعْبُ، فَقَالَ لَهُمَا عَلَامَ ضَرَبْتُمَانِي؟ فَقَالَا: إِنَّكَ صَلَّيْتَ صَلَاةً، وَأَنْتَ عَلَى غَيْرِ طُهُورٍ، وَمَرَرْتَ بِرَجُلٍ مَظْلُومٍ وَلَمْ تَنْصُرْهُ
1115. அபூஸப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரைமேடையில் ஏறி நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின்பு, மக்களே! உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களின் உரிமையை அறியாதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று கூறினார்கள்.
صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «أَيُّهَا النَّاسُ، لَا صَلَاةَ إِلَّا بِوُضُوءٍ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يُذْكَرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ، وَلَمْ يُؤْمِنْ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَمْ يَعْرِفْ حَقَّ الْأَنْصَارِ»
சமீப விமர்சனங்கள்