Author: Farook

Almujam-Alkabir-7603

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7603. நபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மரணத்திற்கு முன் நோய்வாய்ப்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»


Almujam-Alkabir-7602

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7602. நபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மரணத்திற்கு முன் நோய்வாய்ப்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)


«كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»


Almujam-Alkabir-8865

ஹதீஸின் தரம்: Pending

8865. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும். இறைமறுப்பாளருக்கு கைசேதமாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«مَوْتُ الْفَجْأَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكَافِرِ»


Kubra-Bayhaqi-6572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6572. அப்துல்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திடீர் மரணம் ஏற்படுவதை வெறுக்க வேண்டுமா? என நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், என்ன காரணத்திற்காக அதை வெறுக்க வேண்டும்?.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இதைப்பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என்று கூறினார்கள் என பதிலளித்தார்கள்.


سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ مَوْتِ الْفُجَاءَةِ، أَيُكْرَهُ؟. قَالَتْ: لِأِيِّ شَيْءٍ يُكْرَهُ؟ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: ” رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذُ أَسَفٍ لِلْفَاجِرِ


Almujam-Alawsat-3129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3129. மூஸா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களுக்கு திடீர் மரணம் ஏற்படுவது, அல்லாஹ்வினுடைய கோபத்தின் வெளிப்பாடாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!

திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு (இறை)கோபத்தின் வெளிப்பாடாகும் என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.


بَلَغَ عَائِشَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ مَوْتَ الْفَجْأَةِ سَخْطَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، فَقَالَتْ: يَغْفِرُ اللَّهُ لِابْنِ عُمَرَ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْتُ الْفَجْأَةِ تَخْفِيفٌ عَنِ الْمُؤْمِنِينَ، وَسَخْطَةٌ عَلَى الْكَافِرِينَ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-1197

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1197. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் திடீரெண இறந்துவிட்டார். அது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.

திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றிருந்தாலும், அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) க்கு உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டு இறப்பதையே நான் விரும்புகிறேன் ஆயிஷா (ரலி) என்று கூறினார்கள்.


تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فَجْأَةً، فَشَقَّ ذَلِكَ عَلَى عَائِشَةَ وَقَالَتْ: لَوَدِدْتُ أَنَّهُ أُصِيبَ فِي شَيْءٍ مِنْ جَسَدِهِ مَعَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُوَ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ وَعَذَابٌ عَلَى الْكَافِرِ»


Musannaf-Abdur-Razzaq-6781

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6781. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு (இறை)கோபத்தின் தண்டனையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَوْتُ الْفُجَاءَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ وَأَخْذَةُ أَسَفٍ عَلَى الْكُفَّارِ»


Musnad-Ahmad-25042

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25042. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திடீர் மரணத்தை பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَوْتِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذَةُ أَسَفٍ لِلْفَاجِرِ»


Kubra-Bayhaqi-6570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6570. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்) அல்லது ஸஃது பின் உபைதா (ரஹ்)

இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.


قَالَ مَرَّةً عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ مَرَّةً أُخْرَى عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ قَالَ: ” مَوْتُ الْفُجَاءَةِ أَخْذَةُ أَسَفٍ


Next Page » « Previous Page