Author: Farook

Musnad-Ahmad-25497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25497. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


قَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، بِمَ أَدْعُو؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي


Musnad-Ahmad-25495

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25495. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் (அதில்) என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்?’ என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


أَنَّ عَائِشَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، فَبِمَ أَدْعُو؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي


Musnad-Ahmad-25384

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25384. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


قَالَتْ عَائِشَةُ: يَا نَبِيَّ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ، مَا أَقُولُ؟ قَالَ: ” تَقُولِينَ: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي


Tirmidhi-3513

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3513. அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: ” قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي


Musannaf-Abdur-Razzaq-7917

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7917. உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். (அதற்கு காரணம்)

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பதை விடமாட்டார்கள். “இந்த இரண்டு நாட்களில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் அவ்விரண்டிலும் நற்செயல் உள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகிறேன் என்று (அதற்கு காரணம்) கூறினார்கள்.

இதை எனக்கு (அபூஹுரைரா (ரலி) —> உஸமா பின் ஸைத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) ஸயீத் அல்மக்புரீ அவர்கள் அறிவித்ததை செவியேற்றேன் என ஃகிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் அறிவித்தார் என்று உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மதீனாவை சேர்ந்த ஒருவர்


أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ قَالَ: وَأَخْبَرَنِي شَيْخٌ مِنْ غِفَارٍ أَنَّهُ، سَمِعَ سَعِيدًا الْمَقْبُرِيَّ، يُحِدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتْرُكُ صَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ وَقَالَ: «إِنَّهُمَا يَوْمَانِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ لِي فِيهِمَا عَمَلٌ صَالِحٌ»


Tayalisi-666

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

666. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை தேடிப் பயணம் சென்றார்கள். (நானும் அவர்களுடன் சென்றேன்). அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைத்தார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பதை நான் பார்த்து, “அல்லாஹ்வின் தூதரே! திங்கள், வியாழக் கிழமைகளில் நீங்கள் ஏன் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டேன்.  அதற்கவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.


أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ كَانَ يَرْكَبُ إِلَى مَالٍ بِوَادِي الْقُرَى فَكَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقُلْتُ لَهُ: أَتَصُومُ وَقَدْ كَبِرْتَ وَرَقَقْتَ؟ فَقَالَ: إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ الِإثْنَيْنِ وَالْخَمِيسِ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؟ فَقَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Musnad-Ahmad-21816

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21816. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை பார்க்க செல்வார்கள். (நானும் அவர்களுடன் செல்வேன்). அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைத்தார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில்) பயணத்தில் ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பதை நான் பார்த்து, “அல்லாஹ்வின் தூதரே! திங்கள், வியாழக் கிழமைகளில் நீங்கள் ஏன் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டேன்.  அதற்கவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.


أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ، كَانَ يَخْرُجُ إِلَى مَالِهِ بِوَادِي الْقُرَى فَيَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقُلْتُ لَهُ: لِمَ تَصُومُ فِي السَّفَرِ وَقَدْ كَبِرْتَ وَرَقَقْتَ؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ. فَقَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Musnad-Ahmad-21791

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21791.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»


Musnad-Ahmad-21781

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21781. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை பார்க்க செல்வார்கள். (நானும் அவர்களுடன் செல்வேன்). அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைத்தார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில்) பயணத்தில் ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பதை நான் பார்த்து, “அல்லாஹ்வின் தூதரே! திங்கள், வியாழக் கிழமைகளில் நீங்கள் ஏன் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டேன்.  அதற்கவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.


أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ، كَانَ يَخْرُجُ فِي مَالٍ لَهُ بِوَادِي الْقُرَى فَيَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقُلْتُ لَهُ: لِمَ تَصُومُ فِي السَّفَرِ وَقَدْ كَبِرْتَ وَرَقَقْتَ؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ؟ قَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ»


Musnad-Ahmad-21753

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21753.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ الْأَيَّامَ يَسْرُدُ حَتَّى يُقَالَ: لَا يُفْطِرُ، وَيُفْطِرُ الْأَيَّامَ حَتَّى لَا يَكَادَ أَنْ يَصُومَ إِلَّا يَوْمَيْنِ مِنَ الْجُمُعَةِ، إِنْ كَانَ فِي صِيَامِهِ، وَإِلَّا صَامَهُمَا، وَلَمْ يَكُنْ يَصُومُ مِنْ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا يَصُومُ مِنْ شَعْبَانَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَصُومُ لَا تَكَادُ أَنْ تُفْطِرَ، وَتُفْطِرَ حَتَّى لَا تَكَادَ أَنْ تَصُومَ إِلَّا يَوْمَيْنِ إِنْ دَخَلَا فِي صِيَامِكَ وَإِلَّا صُمْتَهُمَا قَالَ: «أَيُّ يَوْمَيْنِ؟» قَالَ: قُلْتُ: يَوْمُ الِاثْنَيْنِ، وَيَوْمُ الْخَمِيسِ. قَالَ: «ذَانِكَ يَوْمَانِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ عَلَى رَبِّ الْعَالَمِينَ، وَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ» قَالَ: قُلْتُ: وَلَمْ أَرَكَ تَصُومُ مِنْ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ: «ذَاكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ [ص:86]، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»


Next Page » « Previous Page