Author: Farook

Musnad-Ahmad-21744

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21744. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை தேடி சென்ற போது (நானும் அவர்களுடன் சென்றேன்) . அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைப்பார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டகப்பட்டபோது  அவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.


أَنَّهُ انْطَلَقَ مَعَ أُسَامَةَ إِلَى وَادِي الْقُرَى يَطْلُبُ مَالًا لَهُ، وَكَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَقَالَ لَهُ مَوْلَاهُ: لِمَ تَصُومُ يَوْمَ الْإِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، وَأَنْتَ شَيْخٌ كَبِيرٌ قَدْ رَقَقْتَ؟ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَسُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّ أَعْمَالَ النَّاسِ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ»


Nasaayi-2359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2359. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இனிமேல்) நோன்பை விடமாட்டார்களோ! என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து நோன்பு வைப்பார்கள். (பிறகு இனிமேல்) நோன்பு வைக்கமாட்டார்களோ! என்று சொல்லுமளவுக்கு தொடர்ந்து நோன்பு வைக்காமல் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

 


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسْرُدُ الصَّوْمَ، فَيُقَالُ: لَا يُفْطِرُ، وَيُفْطِرُ، فَيُقَالُ: لَا يَصُومُ


Nasaayi-2358

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2358.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَصُومُ حَتَّى لَا تَكَادَ تُفْطِرُ، وَتُفْطِرُ حَتَّى لَا تَكَادَ أَنْ تَصُومَ، إِلَّا يَوْمَيْنِ إِنْ دَخَلَا فِي صِيَامِكَ وَإِلَّا صُمْتَهُمَا، قَالَ: «أَيُّ يَوْمَيْنِ؟» قُلْتُ: يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، قَالَ: «ذَانِكَ يَوْمَانِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ عَلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»


Nasaayi-2357

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2357.

அல்லாஹ்வின் தூதரே! மற்ற மாதங்களை விட ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை…

ரஜப் மற்றும் ரமலான் மாதங்களுக்கு இடையே வரும் ஷஃபான் மாதத்தைப் பற்றி மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். ஆனால் அது மக்களின் செயல்கள் இறைவனிடம் உயர்த்தப்படும் மாதம். எனவே நான் நோன்பு நோற்ற நிலையில் எனது செயல்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ، قَالَ: «ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»


Darimi-1791

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1791. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை பார்க்க செல்வார்கள். (நானும் அவர்களுடன் செல்வேன்). அப்போது அவர்கள், வழியில் திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைத்தார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராகவும், பலவீனமாகவும் (அல்லது மெலிந்தும் இருந்துக் கொண்டு (இந்த நாட்களில் பயணத்தில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். மேலும் “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறுவார்கள்” என பதிலளித்தார்கள்.


كَانَ أُسَامَةُ يَرْكَبُ إِلَى مَالٍ لَهُ بِوَادِي الْقُرَى، فَيَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فِي الطَّرِيقِ، فَقُلْتُ لَهُ لِمَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فِي السَّفَرِ، وَقَدْ كَبِرْتَ وَضَعُفْتَ – أَوْ رَقِقْتَ -؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، وَقَالَ: «إِنَّ أَعْمَالَ النَّاسِ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Abu-Dawood-2436

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைத்தல்.

2436. உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் அடிமை கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், “வாதில் குரா” எனுமிடத்தில் இருந்த (தன்னுடைய) சொத்தை தேடி சென்ற போது நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள், திங்கள், வியாழக்கிழமை நோன்பு வைப்பார்கள். நான், “நீங்கள் இவ்வளவு முதியவராக இருந்தும் (இந்த நாட்களில்) ஏன் நோன்பு வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறே) திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். இதைப் பற்றி அவர்களிடம் கேட்டகப்பட்டபோது  அவர்கள், “(ஒவ்வொரு) திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.


أَنَّهُ انْطَلَقَ مَعَ أُسَامَةَ إِلَى وَادِي الْقُرَى فِي طَلَبِ مَالٍ لَهُ، فَكَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَقَالَ لَهُ مَوْلَاهُ: لِمَ تَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، وَأَنْتَ شَيْخٌ كَبِيرٌ؟، فَقَالَ: إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، وَسُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّ أَعْمَالَ الْعِبَادِ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ»،


Musnad-Ahmad-10006

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று (வானவர்களிடம்) அல்லாஹ் கூறுவான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ يَوْمَ الْاثْنَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيَقُولُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا


Musnad-Ahmad-9199

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9199. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


إِنَّ أَبْوَابَ الْجَنَّةِ تُفْتَحُ يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلٌ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوهُمَا حَتَّى يَصْطَلِحَا ” مَرَّتَيْنِ


Musnad-Ahmad-9053

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9053. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيُغْفَرُ ذَلِكَ الْيَوْمَ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا امْرَأً كَانَ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا


Musnad-Ahmad-8361

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள் மற்றும், வியாழக்கிழமைகளில் அதிகமாக நோன்பு வைப்பார்கள். இதுப்பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும்  (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அல்லது ஒவ்வொரு முஃமினுக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கிடையே பகைமை உள்ள இரு மனிதர்களைத் தவிர!

(இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை) இவர்களுக்கு (மன்னிப்பை)  தாமதப்படுத்துங்கள் என்று அல்லாஹ் (வானவர்களிடம்)  கூறுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَكْثَرَ مَا يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: ” إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ – أَوْ: كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ – فَيَغْفِرُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ مُسْلِمٍ – أَوْ: لِكُلِّ مُؤْمِنٍ – إِلَّا الْمُتَهَاجِرَيْنِ، فَيَقُولُ: أَخِّرْهُمَا


Next Page » « Previous Page