Author: Farook

Tirmidhi-2023

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2023. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது;

(தமக்கிடையே சண்டையிட்டு) பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர! “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டு வையுங்கள் ” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفَتَّحُ أَبْوَابُ الجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ فَيُغْفَرُ فِيهِمَا لِمَنْ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا المُهْتَجِرَيْنِ، يُقَالَ: رُدُّوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا


Abu-Dawood-4916

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4916. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அவ்விரு நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ يَوْمِ اثْنَيْنِ، وَخَمِيسٍ فَيُغْفَرُ فِي ذَلِكَ الْيَوْمَيْنِ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا مَنْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا


Ibn-Majah-1740

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1740. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பார்கள். எனவே அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்புவைக்கிறீர்களே! (ஏன்) என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும், அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான். (தமக்கிடையே சண்டையிட்டு “பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர!  “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ؟ فَقَالَ: ” إِنَّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ يَغْفِرُ اللَّهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ، إِلَّا مُتَهَاجِرَيْنِ، يَقُولُ: دَعْهُمَا حَتَّى يَصْطَلِحَا


Muwatta-Malik-2643

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2643. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு தடவையும், வியாழக்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் ஒவ்வொரு முஃமினான அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு அடியாரைத் தவிர.

அப்போது, “இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்” என்று கூறப்படுகிறது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸாலிஹ் (ரஹ்)


تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ كُلَّ جُمُعَةٍ مَرَّتَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ، إِلاَّ عَبْدًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا، أَوِ ارْكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا.


Muwatta-Malik-2642

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2642. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் முஸ்லிமான அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும் வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الاِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُسْلِمٍ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلاَّ رَجُلاً كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا.


Darimi-1792

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1792. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்புவைப்பார்கள். அ(தன் காரணத்)தைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு திங்கள் மற்றும், வியாழக்கிழமைகளில் (அடியார்களின்) அமல்கள் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «إِنَّ الْأَعْمَالَ تُعْرَضُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Nasaayi-2364

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2364. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»


Nasaayi-2363

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2363. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Nasaayi-2362

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களை தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»


Nasaayi-2361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2361. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Next Page » « Previous Page