Author: Farook

Nasaayi-2360

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2360. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Nasaayi-2187

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான், ரமலான் மாதங்களில் நோன்பு வைப்பார்கள். மேலும்  திங்கள், வியாழன் ஆகிய நாட்களையும் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَعْبَانَ وَرَمَضَانَ وَيَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»


Nasaayi-2186

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2186. ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்டார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் நோன்பு வைப்பார்கள். மேலும் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என பதிலளித்தார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ عَائِشَةَ، عَنِ الصِّيَامِ، فَقَالَتْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، وَيَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Musnad-Ahmad-24748

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

24748. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Musnad-Ahmad-24584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24584. ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்டார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஷஃபான் மாதம் நோன்பு வைப்பார்கள். மேலும் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என பதிலளித்தார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ عَائِشَةَ عَنِ الصِّيَامِ، فَقَالَتْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ شَعْبَانَ، وَكَانَ يَتَحَرَّى صِيَامَ يَوْمِ الْخَمِيسِ وَالِاثْنَيْنِ»


Musnad-Ahmad-24509

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

24509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஷஃபான் மாதத்தையும், திங்கள், வியாழன் ஆகிய நாட்களையும் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் மஅதான் (ரஹ்)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَتَحَرَّى صَوْمَ شَعْبَانَ، وَصَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Musnad-Ahmad-24508

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

24508. காலித் பின் மஅதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் நோன்பு வைப்பார்கள். மேலும் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என பதிலளித்தார்கள்.


أَنَّهَا سُئِلَتْ عَنْ صَوْمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: «كَانَ يَصُومُ شَعْبَانَ، وَيَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»


Ibn-Majah-1739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1739. ரபீஆ பின் ஃகாஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களை தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என பதிலளித்தார்கள்.


أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: كَانَ «يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Muwatta-Malik-859

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

859.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ، وَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ»


Tirmidhi-745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 44

(வாரம்வாரம்) திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பது பற்றி வந்துள்ளவை.

745. நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், ஹஃப்ஸா (ரலி), அபூகதாதா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

ஆயிஷா (ரலி) வழியாக வந்துள்ள இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ»


Next Page » « Previous Page