Author: Farook

Nasaayi-84

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

84.

உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர் யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.


رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلَاثًا فَغَسَلَهُمَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ قَدَمَهُ الْيُمْنَى ثَلَاثًا ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ نَفْسَهُ فِيهِمَا بِشَيْءٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Abu-Dawood-110

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

110. நான் உஸ்மான் (ரலி) அவர்களை தன் இரு முழங்கைகளையும் மும்முறை கழுவக் ‎கண்டேன். மேலும் தலையை மூன்று முறை மஸஹ் செய்யவும் கண்டேன் என்று கூறி ‎நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இதே போன்று உலூச் செய்யக் கண்டேன் ‎என்ற உஸ்மான் (ரலி) கூறியதாக ஷகீத் பின் ஸலமா அறிவிக்கிறார்கள்.‎

இந்த ஹதீஸை இஸ்ராயீல் மூலம் வகீஃ அவர்கள் அறிவிக்கும்போது உஸ்மான் (ரலி) ‎அவர்கள் எல்லா உறுப்புகளையும் மும்முறை கழுவி உலூச் செய்ததாக மட்டும் ‎அறிவிக்கிறார்.‎


رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ «غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، وَمَسَحَ رَأْسَهُ ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ هَذَا»، قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ قَالَ: تَوَضَّأَ ثَلَاثًا فَقَطْ


Abu-Dawood-109

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

109. உஸ்மான் (ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உலூச் செய்யலானார்கள். ‎அப்போது இடக் கையின் மீது வலது கையால் தண்ணீர் ஊற்றி பிறகு இரு கைகளையும் ‎மணிக்கட்டு வரை கழுவினார்கள். பிறகு மும்முறை வாய் கொப்பளித்து நாசிக்கு நீர் ‎செலுத்தி சுத்தம் செய்தார்கள். ஒவ்வொரு உறுப்பையும் மூன்று முறை கழுவியதாக ‎அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார். தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு ‎கால்களையும் கழுவினார்கள் என்று கூறி என்னை எவ்வாறு உலூச் செய்யக் கண்டீர்களோ ‎அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன் என்று ‎உஸ்மான் (ரலி) கூறியதாக அபூஅல்கமா அறிவிக்கிறார். பிறகு ஜுஹ்ரீ அவர்களது ‎‎(மேற்கண்ட 106வது) ஹதீஸை போன்று முழுமையாக அறிவிக்கிறார்.‎


أَنَّ عُثْمَانَ «دَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ، فَأَفْرَغَ بِيَدِهِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، ثُمَّ غَسَلَهُمَا إِلَى الْكُوعَيْنِ»، قَالَ: «ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثًا، وَذَكَرَ الْوُضُوءَ ثَلَاثًا»، قَالَ: «وَمَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»، وَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِثْلَ مَا رَأَيْتُمُونِي تَوَضَّأْتُ»، ثُمَّ سَاقَ نَحْوَ حَدِيثِ الزُّهْرِيِّ وَأَتَمَّ


Abu-Dawood-108

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

108. உலூச் செய்யும் முறை பற்றி இப்னு அபி முலைக்கா அவர்களிடம் வினவப்பட்டபோது, ‎அவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் உலூச் செய்யும் முறை பற்றி வினவப்பட்டது. ‎அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிச் சொன்னார்கள். அவர்களிடம் ஒரு ‎தண்ணீர் பாத்திரம் கொண்டு வரப்பட்டதும் அதை தனது வலது கையில் சாய்த்து (நீர் விட்டு ‎கழுவிய பின்) கையை தண்ணீர் பாத்திரத்திற்குள் செலுத்தி மூன்று முறை வாய் ‎கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். மும்முறை ‎முகத்தை கழுவினார்கள். பின்பு மூன்று முறை வலது கையையும்,. மூன்று முறை இடது ‎கையையும் கழுவினார்கள். பின்பு கையை தண்ணீருள் செலுத்தி தண்ணீர் எடுத்து தமது ‎தலைக்கு மஸஹ் செய்தார்கள் (காதுகளுக்கு மஸஹ் செய்யும் போது) காதுகளின் உட்புறம் ‎வெளிப்புறமும் ஒரு தடவை கழுவினார்கள். பின்பு இரு கால்களையும் கழுவினார்கள். ‎பிறகு உலூவின் முறை பற்றி கேட்டவர் எங்கே? (என்று வினவி) இவ்வாறே நான் ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன் என்று உஸ்மான் பின் ‎அப்பாஸ் (ரலி) கூறினார்கள். ‎

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தைமியி

Read More »

Abu-Dawood-106

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 50

அண்ணல் நபி ஸல் அவர்கள் உளூச் செய்த விதம்.

106. உஸ்மான் (ரலி) அவர்கள் உலூச் செய்த போது தன் இரு கைகளிலும் தண்ணீர் ஊற்றிக் ‎கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‎முகத்தை மும்முறை கழுவினார்கள். பின்னர் வலது கையை முழங்கை உட்பட மூன்று ‎முறை கழுவினார்கள். பின்னர் இடது கையையும் அதே போலக் கழுவினார்கள். பின்னர் ‎தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் வலது காலை மூன்று முறை கழுவினார்கள். ‎அதே போல இடது காலையும் கழுவினார்கள். பின்பு நான் இப்போது உலூச் செய்தது ‎போலவே நபி (ஸல்) அவர்களையும் உலூச் செய்யப் பார்த்திருக்கிறேன் என்றார்கள். யார் ‎நான் உலூச் செய்தது போலேவே உலூச் செய்து அவர் தனது மனதில் எவ்வித ‎எண்ணங்களுக்கும் இடமளிக்காமல் இரண்டு ரக்அத் தொழுதால் அவரது முன் பாவங்களை ‎அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் ‎‎(ரலி) அறிவிக் கிறார்கள். இதை உஸ்மான் (ரலி) அவர் களின் அடிமை அபான் ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் ‎பெற்றுள்ளது.)‎


رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلَاثًا فَغَسَلَهُمَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ قَدَمَهُ الْيُمْنَى ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Ibn-Majah-459

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

459.


«مَنْ أَتَمَّ الْوُضُوءَ، كَمَا أَمَرَهُ اللَّهُ، فَالصَّلَاةُ الْمَكْتُوبَاتُ، كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ»


Ibn-Majah-435

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

435.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، فَمَسَحَ رَأْسَهُ مَرَّةً


Ibn-Majah-413

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

413.


رَأَيْتُ عُثْمَانَ وَعَلِيًّا ” يَتَوَضَّآَنِ ثَلَاثًا ثَلَاثًا، وَيَقُولَانِ: هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَاهُ أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ فَذَكَرَ نَحْوَهُ


Ibn-Majah-285

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

285.


رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَاعِدًا فِي الْمَقَاعِدِ، فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَقْعَدِي هَذَا، تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» وَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَا تَغْتَرُّوا» حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ قَالَ: حَدَّثَنِي حُمْرَانُ، عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ


Next Page » « Previous Page