தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-106

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 50

அண்ணல் நபி ஸல் அவர்கள் உளூச் செய்த விதம்.

உஸ்மான் (ரலி) அவர்கள் உலூச் செய்த போது தன் இரு கைகளிலும் தண்ணீர் ஊற்றிக் ‎கழுவினார்கள். பின்னர் வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தார்கள். பின்னர் ‎முகத்தை மும்முறை கழுவினார்கள். பின்னர் வலது கையை முழங்கை உட்பட மூன்று ‎முறை கழுவினார்கள். பின்னர் இடது கையையும் அதே போலக் கழுவினார்கள். பின்னர் ‎தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் வலது காலை மூன்று முறை கழுவினார்கள். ‎அதே போல இடது காலையும் கழுவினார்கள். பின்பு நான் இப்போது உலூச் செய்தது ‎போலவே நபி (ஸல்) அவர்களையும் உலூச் செய்யப் பார்த்திருக்கிறேன் என்றார்கள். யார் ‎நான் உலூச் செய்தது போலேவே உலூச் செய்து அவர் தனது மனதில் எவ்வித ‎எண்ணங்களுக்கும் இடமளிக்காமல் இரண்டு ரக்அத் தொழுதால் அவரது முன் பாவங்களை ‎அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் ‎‎(ரலி) அறிவிக் கிறார்கள். இதை உஸ்மான் (ரலி) அவர் களின் அடிமை அபான் ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் ‎பெற்றுள்ளது.)‎

(அபூதாவூத்: 106)

50- بَابُ صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ:

رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ تَوَضَّأَ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلَاثًا فَغَسَلَهُمَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ، ثُمَّ غَسَلَ قَدَمَهُ الْيُمْنَى ثَلَاثًا، ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-106.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




மேலும் பார்க்க : புகாரி-159 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.