2179.
«صُومُوا لِرُؤْيَتِهِ» , ثُمَّ ذَكَرِ مِثْلَهُ إِلَى آخِرِهِ وَلَمْ يَذْكُرِ: الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ.
رَوْحُ بْنُ الْقَاسِمِ مِنَ الثِّقَاتِ
2179.
«صُومُوا لِرُؤْيَتِهِ» , ثُمَّ ذَكَرِ مِثْلَهُ إِلَى آخِرِهِ وَلَمْ يَذْكُرِ: الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ.
رَوْحُ بْنُ الْقَاسِمِ مِنَ الثِّقَاتِ
2181.
«الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ».
2177. மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.
அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். மினா முழுவதும் பலியிடும் இடமாகும். மக்காவின் பாதை முழுவதும் பலியிடும் இடமாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மது பின் முன்கதிர்
அறிவிப்பாளர் அய்யூபிடமிருந்து ஹம்மாத் பின் ஸைத் அறிவிக்கும் அறிவிப்பில் இந்த செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவிக்கப்பட்டுள்ளது.
«إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ , فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا الْعِدَّةَ ثَلَاثِينَ , فِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ وَأُضْحِيَتُكُمْ يَوْمَ تُضَحُّونَ وَكُلُّ عَرَفَةَ مَوْقِفٌ وَكُلُّ مِنًى مَنْحَرٌ وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ»
496. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ»
7304. ரமலான் பிறை விசயத்தில், “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் அறிவிப்பில் “ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي هِلَالِ رَمَضَانَ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا، ثُمَّ إِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَتِمُّوا ثَلَاثِينَ صَوْمَكُمْ يَوْمَ تَصُومُونَ، وَفِطْرَكُمْ يَوْمَ تُفْطِرُونَ»
وَزَادَ ابْنُ جُرَيْجٍ فِي هَذَا الْحَدِيثِ: «وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ»
பாடம்:
நீங்கள் நோன்பை விடும் நாள்தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது குறித்து வந்துள்ளவை.
697. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நோன்பு (வைக்கும்) நாள் என முடிவு செய்யும் நாள்தான் நோன்பு (வைக்கும்) நாள். நீங்கள் நோன்பை விடும்நாள் என முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும்நாள் என முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
இந்தச் செய்திக் குறித்து கல்வியாளர்களில் சிலர் இதன் கருத்து, “நோன்பு வைப்பதும், நோன்பை விடுவதும் (முஸ்லிம்) ஜமாஅத்துடனும், அதிகமான மக்களுடனும் இருக்க வேண்டும் என்பதாகும்” என்று விளக்கம் கூறியுள்ளனர்.
«الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»
2324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.
அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். மினா முழுவதும் பலியிடும் இடமாகும். மக்காவின் பாதை முழுவதும் பலியிடும் இடமாகும். முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ، وَأَضْحَاكُمْ يَوْمَ تُضَحُّونَ، وَكُلُّ عَرَفَةَ مَوْقِفٌ، وَكُلُّ مِنًى مَنْحَرٌ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ، وَكُلُّ جَمْعٍ مَوْقِفٌ»
1660. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»
2180.
«صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ»
சமீப விமர்சனங்கள்