676.
ثَلاثَةٌ يُحِبُّهَا اللَّهُ عَزَّ وَجَلَّ تَعْجِيلُ الْفِطْرِ وَتَأْخِيرُ السُّحُورِ وَضَرْبُ الْيَدَيْنِ أَحَدِهِمَا بِالأُخْرَى فِي الصَّلاةِ.
676.
ثَلاثَةٌ يُحِبُّهَا اللَّهُ عَزَّ وَجَلَّ تَعْجِيلُ الْفِطْرِ وَتَأْخِيرُ السُّحُورِ وَضَرْبُ الْيَدَيْنِ أَحَدِهِمَا بِالأُخْرَى فِي الصَّلاةِ.
21507. பிலாலே! அதிகாலை, அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) வெண்மை தெரியும் நேரம் நீ ஸஹர் பாங்கு கூறுவீராக! அது (ஸுப்ஹு தொழுகை நேரம் அல்ல). அகலவாக்கில் வெண்மை பரவும் நேரம்தான் ஸுப்ஹு தொழுகை நேரமாகும் என்று பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு ஸஹர் உணவை வரவழைத்து ஸஹர் செய்தார்கள்.
மேலும், ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி, நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ: «أَنْتَ يَا بِلَالُ تُؤَذِّنُ إِذَا كَانَ الصُّبْحُ سَاطِعًا فِي السَّمَاءِ، فَلَيْسَ ذَلِكَ بِالصُّبْحِ، إِنَّمَا الصُّبْحُ هَكَذَا مُعْتَرِضًا» ثُمَّ دَعَا بِسَحُورِهِ فَتَسَحَّرَ، وَكَانَ يَقُولُ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا أَخَّرُوا السَّحُورَ، وَعَجَّلُوا الْفِطْرَ»
1698. நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர். நீங்கள் நோன்பு துறப்பதை விரைவுபடுத்துங்கள். யூதர்கள் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ، عَجِّلُوا الْفِطْرَ؛ فَإِنَّ الْيَهُودَ يُؤَخِّرُونَ»
9810. ‘மக்கள் நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் காலமெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி இருக்கும். ஏனெனில் யூதர்களும், கிருத்தவர்களும் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»
2353. ‘மக்கள் நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் காலமெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி இருக்கும். ஏனெனில் யூதர்களும், கிருத்தவர்களும் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا يَزَالُ الدِّينُ ظَاهِرًا مَا عَجَّلَ النَّاسُ الْفِطْرَ، لِأَنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى يُؤَخِّرُونَ»
பாடம் :
விரைவாக நோன்பு துறத்தல்.
790. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)
لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ.
பாடம் :
விரைவாக நோன்பு துறத்தல்.
699. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)
«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»
1697. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)
«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْإِفْطَارَ»
1741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)
«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»
22870. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)
«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ»
சமீப விமர்சனங்கள்