Author: Farook

Musnad-Ahmad-5155

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5155. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது (இந்த மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Musnad-Ahmad-5153

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5153. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது (இந்த மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Musnad-Ahmad-4838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4838. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர! அது (நன்மையில்) மேலும் சிறந்தது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ فَهُوَ أَفْضَلُ»


Musnad-Ahmad-4646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது (இந்த மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Nasaayi-2897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2897. “எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Musannaf-Abdur-Razzaq-8868

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8868. நபி (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். உன்னுடைய ஊரில்வசிப்பவர்கள் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


وَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَزْوَرَةِ فَقَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبَّ الْأَرْضِ إِلَى اللَّهِ، وَلَوَلَا أَنَّ أَهْلَكِ أَخَرَجُونِي مَا خَرَجْتُ»


Musannaf-Abdur-Razzaq-8869

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8869. ஹதீஸ் எண்- 8868 இல் வரும் செய்தி இப்னு ஜுரைஜின் ஆசிரியர்கள் அறிவிக்கும் இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது…


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ خَيْرُ بَلَادِ اللَّهِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ مَعْمَرٍ


Almujam-Alkabir-13347

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13347. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி) “ பூமியில் இருக்கும் ஊர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான ஊர் மக்கா என்பதை நான் நன்கறிவேன்.என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)

அல்லாஹ்வே! எங்கள் உள்ளத்தில் மக்கா ஊரின் மீது பாசத்தை ஏற்படுத்தியது போன்று மதீனா ஊரின் மீதும் பாசத்தை ஏற்படுத்துவாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார்கள்.

அவர்கள் மதீனாவை நெருங்கிவரும்போதெல்லாம் அவர்களின் முகத்தில் சந்தோசமும், மகிழ்ச்சியும் தென்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«قَدْ عَلِمْتُ أَنَّ أَحَبَّ الْبِلَادِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مَكَّةُ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مَا خَرَجْتُ، اللهُمَّ اجْعَلْ فِي قُلُوبِنَا مِنْ حُبِّ الْمَدِينَةِ مِثْلَ مَا جَعَلْتَ فِي قُلُوبِنَا مِنْ حُبِّ مَكَّةَ» ، وَمَا أَشْرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَدِينَةِ قَطُّ إِلَّا عُرِفَ فِي وَجْهِهِ الْبِشْرُ وَالْفَرَحُ


Bazzar-5095

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5095. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை பார்த்து “பூமியில் நீ தான் மிகவும் அல்லாஹ்விற்கு விருப்பமான ஊராவாய்! என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نَظَرَ إِلَى مَكَّةَ فَقَالَ: إِنَّكِ لأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، ولولاَ أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا خَرَجْتُ.


Bazzar-4690

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4690. நபி (ஸல்) அவர்கள் மக்காவை பார்த்து “பூமியில் நீ தான் மிகவும் அல்லாஹ்விற்கு விருப்பமான ஊராவாய்! என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نَظَرَ إِلَى مَكَّةَ فَقَالَ: إِنَّكِ لأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، ولولاَ أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا خَرَجْتُ.


Next Page » « Previous Page