Author: Farook

Bazzar-7937

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அல்ஹுஜ்ஜூன் என்ற இடத்தில் நின்றவர்களாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)……..என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم وقف عام الفتح بالحجون فقال: والله إنك لأخير أرض الله وأحب أرض الله إلى الله، ولولاَ أني أخرجت منك ما خرجت وإنها لم تحل لأحد كان قبلي، ولاَ تحل لأحد بعدي، وَإنَّما أحلت لي ساعة من نهار، ثُمَّ هي حرام ساعتي هذه لا يعضد شجرها، ولاَ يحتش كلأها، ولاَ تلتقط ضالتها إلاَّ لمنشد قال: فقال رجل قال – وزعم الناس أنه عباس – يا رَسولَ اللهِ إلاَّ الإذخر فإنه لبيوتنا ولقبورنا ولعيوننا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: إلاَّ الإذخر.


Hakim-4261

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4261. அல்லாஹ்வே! ஊர்களில் எனக்கு மிகவும் விருப்பமான ஊரைவிட்டு என்னை நீ வெளியேற்றிவிட்டாய். எனவே உனக்கு மிகவும் விருப்பமான ஊரில் என்னை குடியமர்த்துவாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்துக் கூறினார்கள். எனவே அல்லாஹ், அவர்களை மதீனாவில் குடியமர்த்தி வாழ வைத்தான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«اللَّهُمَّ إِنَّكَ أَخْرَجْتَنِي مِنْ أَحَبِّ الْبِلَادِ إِلَيَّ، فَأَسْكِنِّي أَحَبَّ الْبِلَادِ إِلَيْكَ» ، فَأَسْكَنَهُ اللَّهُ الْمَدِينَةَ


Kubra-Nasaayi-4240

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவின் “ஹஸ்வரா” என்ற கடைவீதியில் இருந்தபோது, (மக்காவை நோக்கி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي سُوقِ الْحَزْوَرَةِ بِمَكَّةَ: «وَاللهِ إِنَّكَ لَخَيْرُ أَرْضِ اللهِ وَأَحَبُّ الْبِلَادِ إِلَى اللهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Kubra-Nasaayi-4239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் மக்காவின் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றிருக்கும் போது அதன்மீதமர்ந்தவர்களாக, மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ وَاقِفٌ عَلَى رَاحِلَتِهِ بِالْحَزْوَرَةِ بِمَكَّةَ يَقُولُ لِمَكَّةَ: «وَاللهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللهِ وَأَحَبُّ أَرْضِ اللهِ إِلَى اللهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Almujam-Alawsat-454

ஹதீஸின் தரம்: More Info

454. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحَزْوَرَةِ، فَقَالَ: «وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Kubra-Nasaayi-4238

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றிருக்கும் போது அதன்மீதமர்ந்தவர்களாக, மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ وَاقِفًا بِالْحَزْوَرَةِ، يَقُولُ: «وَاللهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللهِ وَأَحَبُّ أَرْضِ اللهِ إِلَى اللهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Hakim-5827

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5827. நபி (ஸல்) அவர்கள் மக்காவின் கடைவீதியில் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக  மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ وَاقِفٌ بِالْحَزْوَرَةِ بِمَكَّةَ، «وَاللَّهِ إِنَّكَ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضٍ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Hakim-5220

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5220. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحَزْوَرَةِ، فَقَالَ: «وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ إِنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَيَّ وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Hakim-4270

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் வாகனத்தின்மீதிருந்தவர்களாக மக்காவை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ بِالْحَزْوَرَةِ، يَقُولُ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Ibn-Hibban-3708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் மக்காவின் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றிருக்கும் போது அதன்மீதமர்ந்தவர்களாக, மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَاقِفًا بِالْحَزْوَرَةِ يَقُولُ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»


Next Page » « Previous Page