Author: Farook

Ibn-Khuzaymah-940

ஹதீஸின் தரம்: Pending

940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். அவர்களின் நற்செயல்கள்வானத்திற்கு உயரவும் செய்யாது.  (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; அவன் தனது எசமானர்களிடம் திரும்பி வந்து சரணடையும் வரை. கணவனின் கோபத்திற்கு ஆளான பெண்; அவன் அவளை பொறுந்திக்கொள்ளும் வரை. போதையுள்ளவன்; அவன் தெளிவடையும் வரை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللَّهُ لَهُمْ صَلَاةً وَلَا يَصْعَدُ لَهُمْ حَسَنَةٌ: الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ، فَيَضَعُ يَدَهُ فِي أَيْدِيهِمْ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا حَتَّى يَرْضَى، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ


Ibn-Hibban-5355

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5355. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். அவர்களின் நற்செயல்களை வானத்திற்கு உயர்த்தவும் மாட்டான்.  (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; அவன் தனது எசமானர்களிடம் திரும்பி வந்து சரணடையும் வரை. கணவனின் கோபத்திற்கு ஆளான பெண்; அவன் அவளை பொறுந்திக்கொள்ளும் வரை. போதையுள்ளவன்; அவன் தெளிவடையும் வரை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللَّهُ لَهُمْ صَلَاةً، وَلَا يَرْفَعُ لَهُمْ إِلَى السَّمَاءِ حَسَنَةً: الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ فَيَضَعَ يَدَهُ فِي أَيْدِيهِمْ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا حَتَّى يَرْضَى، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ»


Kubra-Bayhaqi-5339

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5339. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்க முன்வந்தவர். நேரம் தவறி தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللهُ مِنْهُمْ صَلَاةً: مَنْ يَؤُمُّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ أَتَى الصَّلَاةَ دِبَارًا قَالَ: وَالدِّبَارُ أَنْ يَأْتِيَ بِهَا بَعْدَ فَوْتِ الْوَقْتِ، وَرَجُلٌ اعْتَبَدَ مُحَرَّرَهُ


Almujam-Alkabir-176

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்க முன்வந்தவர். நேரம் தவறி தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ: مَنْ تَقَدَّمَ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ أَتَى الصَّلَاةَ دِبَارًا، وَالدِّبَارُ أَنْ يَأْتِيَ بَعْدَ الْوَقْتِ، وَرَجُلٌ اعْتَبَدَ مُحَرَّرَهُ


Ibn-Majah-970

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

970. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படாது. (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர். நேரம் தவறித் தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ، الرَّجُلُ يَؤُمُّ الْقَوْمَ وَهُمْ لَهُ كَارِهُونَ، وَالرَّجُلُ لَا يَأْتِي الصَّلَاةَ إِلَّا دِبَارًا – يَعْنِي بَعْدَ مَا يَفُوتُهُ الْوَقْتُ – وَمَنْ اعْتَبَدَ، مُحَرَّرًا»


Abu-Dawood-593

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

593. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்க முன்வந்தவர். நேரம் தவறி தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


 «ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُمْ صَلَاةً، مَنْ تَقَدَّمَ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ أَتَى الصَّلَاةَ دِبَارًا» وَالدِّبَارُ: أَنْ يَأْتِيَهَا بَعْدَ أَنْ تَفُوتَهُ، «وَرَجُلٌ اعْتَبَدَ مُحَرَّرَهُ»


Almujam-Alkabir-12275

ஹதீஸின் தரம்: Pending

12275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் எந்த தொழுகைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் மீது கோபமாக இருக்கும் நிலையில் இரவைக் கழித்த பெண்; தங்களுக்குள் நட்புறவை முறித்துக் கொண்ட இரு சகோதரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللهُ لَهُمْ صَلَاةً: إِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا غَضْبَانُ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ


Ibn-Hibban-1757

ஹதீஸின் தரம்: Pending

1757. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் எந்த தொழுகைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் மீது கோபமாக இருக்கும் நிலையில் இரவைக் கழித்த பெண்; தங்களுக்குள் நட்புறவை முறித்துக் கொண்ட இரு சகோதரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللَّهُ لَهُمْ صَلَاةً: إِمَامُ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا غَضْبَانُ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ»


Ibn-Majah-971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு சாண் அளவும் (கூட) உயர்த்தப்படாது. (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் மீது கோபமாக இருக்கும் நிலையில் இரவைக் கழித்த பெண்; தங்களுக்குள் நட்புறவை முறித்துக் கொண்ட இரு சகோதரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


ثَلَاثَةٌ لَا تُرْفَعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ


Almujam-Alkabir-8098

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8098. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருந்தும் வரை மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன  அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுக்கும் தலைவன்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ حَتَّى يَرْجِعُوا: الْعَبْدُ الْآبِقُ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ


Next Page » « Previous Page