Author: Farook

Musnad-Ahmad-23837

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23837. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)


«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسَحَ عَلَى رَأْسِي»


Musnad-Ahmad-23836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23836. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள். மேலும் அவர்களின் மடியில் என்னை அமர வைத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)


«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ، وَأَجْلَسَنِي فِي حَجْرِهِ»


Musnad-Ahmad-16407

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16407. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களின் மடியில் அமர வைத்தார்கள். மேலும் எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)


«أَجْلَسَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ وَمَسَحَ عَلَى رَأْسِي وَسَمَّانِي يُوسُفَ»


Musnad-Ahmad-16405

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)


«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ»


Musnad-Ahmad-16404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

யூசுஃப் பின் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

16404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)


«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ وَمَسَحَ عَلَى رَأْسِي»


Kubra-Bayhaqi-16522

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

16522. நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. (வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ , وَكَانَ إِذَا بَعَثَ عَامِلًا سَأَلَ عَنِ اسْمِهِ , فَإِذَا أَعْجَبَهُ اسْمُهُ فَرِحَ بِهِ , وَرُئِيَ بِشْرُ ذَلِكَ فِي وَجْهِهِ , وَإِنْ كَرِهَ اسْمَهُ رُئِيَ كَرَاهِيَةُ ذَلِكَ فِي وَجْهِهِ , وَإِذَا دَخَلَ قَرْيَةً سَأَلَ عَنِ اسْمِهَا , فَإِنْ أَعْجَبَهُ اسْمُهَا فَرِحَ بِهَا , وَرُئِيَ بِشْرُ ذَلِكَ فِي وَجْهِهِ , وَإِنْ كَرِهَ اسْمَهَا رُئِيَ كَرَاهِيَةُ ذَلِكَ فِي وَجْهِهِ


Kubra-Nasaayi-8771

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8771. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. ஒரு மனிதரின் பெயரைப் பற்றிக் கேட்டு, அவருடையப் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயர் கெட்டதாக இருந்தால் அதனால் அவர்களது முகத்தில் வெறுப்பு தென்படும். 

அவர்கள் ஒரு ஊரின் பெயரைப் பற்றி விசாரித்து அதன் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் கெட்டதாக இருந்தால் அதனால் அவர்களது முகத்தில் வெறுப்பு தென்படும்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


«مَا كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ، وَلَكِنْ كَانَ إِذَا سَأَلَ عَنِ اسْمِ الرَّجُلِ فَكَانَ حَسَنًا رُئِيَ الْبِشَارَةُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ سَيِّئًا رُئِيَ ذَلِكَ فِيهِ، وَإِذَا سَأَلَ عَنِ اسْمِ الْأَرْضِ فَكَانَ حَسَنًا رُئِيَ الْبِشَارَةُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ سَيِّئًا رُئِيَ ذَلِكَ فِيهِ»


Ibn-Hibban-5827

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5827. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை.  அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அழகாக இருந்தால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் அருவெறுப்பாக இருந்தால் அவர்களின் முகத்தில் வெறுப்பு தென்படும்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَتَطَيَّرُ مِنَ شَيْءٍ غَيْرَ أَنَّهُ كَانَ، إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَرْضًا سَأَلَ عَنِ اسْمِهَا، فَإِنْ كَانَ حَسَنًا رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ»


Musnad-Ahmad-22946

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22946. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்கும் சகுனம் பார்த்ததில்லை. அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அழகாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயர் அருவெறுப்பாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் வெறுப்பு தென்படும்.

(வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அழகாக இருந்தால்  அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயர் அருவெறுப்பாக இருந்தால் அதனால் அவர்களுடைய முகத்தில் வெறுப்பு தென்படும். 

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ، وَلَكِنَّهُ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَرْضًا سَأَلَ عَنْ اسْمِهَا، فَإِنْ كَانَ حَسَنًا رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ، وَكَانَ إِذَا بَعَثَ رَجُلًا سَأَلَ عَنْ اسْمِهِ، فَإِنْ كَانَ حَسَنَ الِاسْمِ رُئِيَ الْبِشْرُ فِي وَجْهِهِ، وَإِنْ كَانَ قَبِيحًا رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ»


Next Page » « Previous Page