Author: Farook

Abu-Dawood-3225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3225. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது உட்காருவதையும்; அதைக் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன்.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَقْعُدَ عَلَى الْقَبْرِ، وَأَنْ يُقَصَّصَ وَيُبْنَى عَلَيْهِ»


Nasaayi-2027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது (தோண்டிய மண்ணை விட) அதிகப்படுத்துதல்.

2027. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் அதிகப்படுத்துவதையும் அல்லது அதை (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும்; அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா, “கப்ரின் மீது எழுதுவதையும்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُزَادَ عَلَيْهِ، أَوْ يُجَصَّصَ» زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: «أَوْ يُكْتَبَ عَلَيْهِ»


Tirmidhi-1046

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1046. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது “பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரஸூலில்லாஹ்” எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூகாலிதின் வேறு அறிவிப்பில் இறந்தவரின் உடல் உட்குழிக்குள் வைக்கப்படும் போது என்றும், மேற்கண்ட துஆவும் கூறப்பட்டுள்ளது.

அபூகாலிதின் மற்றொரு அறிவிப்பில், “பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரஸூலில்லாஹ்” என்றும் இடம்பெற்றுள்ளது.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُدْخِلَ المَيِّتُ القَبْرَ، وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً: إِذَا وُضِعَ المَيِّتُ فِي لَحْدِهِ، قَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»، وَقَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Majah-1553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1553.


حَضَرْتُ ابْنَ عُمَرَ فِي جِنَازَةٍ، فَلَمَّا وَضَعَهَا فِي اللَّحْدِ، قَالَ: «بِسْمِ اللَّهِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ» فَلَمَّا أُخِذَ فِي تَسْوِيَةِ اللَّبِنِ عَلَى اللَّحْدِ قَالَ: «اللَّهُمَّ أَجِرْهَا مِنَ الشَّيْطَانِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ جَافِ الْأَرْضَ عَنْ جَنْبَيْهَا، وَصَعِّدْ رُوحَهَا، وَلَقِّهَا مِنْكَ رِضْوَانًا» قُلْتُ: يَا ابْنَ عُمَرَ أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمْ قُلْتَهُ بِرَأْيِكَ؟ قَالَ: «إِنِّي إِذًا لَقَادِرٌ عَلَى الْقَوْلِ، بَلْ شَيْءٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Majah-1550

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1550. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

அபூகாலிதின் வேறு அறிவிப்பில் இறந்தவரின் உடல் உட்குழிக்குள் வைக்கப்படும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா சுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.

ஹிஷாமின் அறிவிப்பில் ‘பிஸ்மில்லாஹி வ ஃபீ ஸபீலில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்’ என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ، قَالَ: «بِسْمِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ» وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً: إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي لَحْدِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ» ، وَقَالَ هِشَامٌ فِي حَدِيثِهِ: «بِسْمِ اللَّهِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»


Musnad-Ahmad-5370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5370. உங்களில் இறந்தவர்களை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா சுன்ன(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي الْقَبْرِ فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-4990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4990. உங்களில் இறந்தவர்களை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي الْقُبُورِ، فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musnad-Ahmad-4812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4812. உங்களில் இறந்தவர்களை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي الْقَبْرِ، فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-3213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3213. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடலை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم، َ كَانَ إِذَا وَضَعَ الْمَيِّتَ فِي الْقَبْرِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»،

هَذَا لَفْظُ مُسْلِمٍ


Musnad-Ahmad-6111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6111. உங்களில் இறந்தவர்களை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي الْقُبُورِ فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page