Author: Farook

Musnad-Ahmad-5233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5233. உங்களில் இறந்தவர்களை குழிக்குள் வைக்கும் போது ‘பிஸ்மில்லாஹி வஅலா சுன்ன(த்)தி ரசூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ எனக் கூறுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي قُبُورِهِمْ فَقُولُوا: بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Almujam-Alawsat-4673

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு நான்கு தக்பீர்கள் கூறித் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا، ثُمَّ أَتَى الْقَبْرَ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا»


Ibn-Majah-1565

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அடக்கத்தலத்தில் மண் அள்ளிப் போடுவது பற்றி வந்துள்ளவை.

1565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «صَلَّى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا»


Abu-Dawood-3332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3332. நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, ‘கால் பக்கம் விசாலமாக்கு! தலைப் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டேன். பின்பு நாங்கள் (ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு) திரும்பியபோது வழியில் ஒரு பெண்ணின் (சார்பாக அனுப்பப்பட்ட) அழைப்பாளர் எங்களை விருந்திற்கு அழைத்தார். எனவே! நபி (ஸல்) அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு உணவுக்கவளம் (மெள்ளமுடியாமல் வாயில் சுழன்றுக்கொண்டு) விக்கிக் கொள்வதை (சிறுவர்களாகிய) எங்களின் தந்தையர் கண்டனர். “இந்த ஆட்டிறைச்சி அதனுடைய உரிமையாளர் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கருதுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது விருந்திற்கு அழைத்த பெண், அல்லாஹ்வின் தூதரே! ஆடு வாங்கிவர நகீஃ என்ற ஆட்டுச் சந்தைக்கு ஆளனுப்பினேன். ஆடு கிடைக்கவில்லை. பின்பு (ஏற்கனவே) ஆடு வாங்கியிருந்த எனது அண்டைவீட்டாருக்கு ஆளனுப்பி அதற்குரிய கிரயத்தை கொடுத்து ஆட்டை

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ: «أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ، أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ»، فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ، ثُمَّ وَضَعَ الْقَوْمُ، فَأَكَلُوا، فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ، ثُمَّ قَالَ: «أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا»، فَأَرْسَلَتِ الْمَرْأَةُ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً، فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدِ اشْتَرَى شَاةً، أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا، فَلَمْ يُوجَدْ، فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمِيهِ الْأُسَارَى»


Kubra-Bayhaqi-6982

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6982. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை வைக்கும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا وَسَلَّمَ تَسْلِيمَةً


Hakim-1332

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1332. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை வைக்கும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا، وَسَلَّمَ تَسْلِيمَةً التَّسْلِيمَةُ الْوَاحِدَةُ عَلَى الْجِنَازَةِ»


Nasaayi-1325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1325. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வலது கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு வலது புறம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.

அவ்வாறே, அவர்களின் இடது கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு இடது புறம் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ، وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ


Nasaayi-1324

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1324. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பின்னால் இருந்து அவர்களின் கன்னத்தின் வெண்மை காணும் அளவிற்கு வலது புறமும் இடதுபுறமும்  திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று ஸலாம் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


أَنَّهُ ” كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ مِنْ هَاهُنَا، وَبَيَاضُ خَدِّهِ مِنْ هَاهُنَا


Nasaayi-1323

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1323. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு வலது புறம் திரும்பி ஸலாம் கொடுப்பார்கள். அவ்வாறே கன்னத்தின் வெண்மை (நன்றாக) தெரியும் அளவிற்கு இடதுபுறம் திரும்பி ஸலாம் கொடுப்பார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ، وَعَنْ يَسَارِهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ خَدِّهِ»


Nasaayi-1322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1322. நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் வலது புறமும், இடது புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று கூறும்போது அவர்களின் கன்னத்தின் வெண்மை தெரியும். அதை இப்போதும் பார்ப்பதுபோன்று இருக்கிறது என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுல் அஹ்வஸ் (ரஹ்)


«كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَدِّهِ عَنْ يَمِينِهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، وَعَنْ يَسَارِهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ»


Next Page » « Previous Page