Author: Farook

Nasaayi-1320

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1320. வாஸிஃ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி கேட்டார்.  அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், தாழும் போதெல்லாம் ‘அல்லாஹு அக்பர்’ என்றும், எழும்போதெல்லாம் ‘அல்லாஹு அக்பர்’ என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறுவார்கள்.

பிறகு வலது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்றும், இடது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்றும் கூறுவார்கள்’ என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மது பின் யஹ்யா (ரஹ்)


أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” اللَّهُ أَكْبَرُ كُلَّمَا وَضَعَ، اللَّهُ أَكْبَرُ كُلَّمَا رَفَعَ، ثُمَّ يَقُولُ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَمِينِهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَسَارِهِ


Nasaayi-1321

ஹதீஸின் தரம்: More Info

பாடம் :

இடதுபுறம் ஸலாம் கொடுக்கும் முறை.

1321. வாஸிஃ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எப்படி இருந்தது என எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் முறைப் பற்றி கூறினார்கள்.

பிறகு வலது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்றும், இடது புறம் (திரும்பி) ‘அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் கூறுவார்கள்’ என பதிலளித்தார்கள்.


قُلْتُ لِابْنِ عُمَرَ: أَخْبِرْنِي عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ كَانَتْ؟ قَالَ: ” فَذَكَرَ التَّكْبِيرَ، قَالَ: يَعْنِي وَذَكَرَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَمِينِهِ، السَّلَامُ عَلَيْكُمْ عَنْ يَسَارِهِ


Nasaayi-1319

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

வலதுபுறம் ஸலாம் கொடுக்கும் முறை.

1319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) குனியும்போதும் நிமிரும்போதும், எழும்போதும் அமரும்போதும் தக்பீர் கூறுவதையும், அவர்களின் கன்னத்தின் வெண்மை பார்க்கப்படும் அளவிற்கு வலது புறமும், இடது புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்’ என்று கூறியதையும் பார்த்துள்ளேன்.

அபூபக்ர் (ரலி),  உமர் (ரலி) போன்றோரையும் இவ்வாறு செய்பவர்களாக பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ، وَقِيَامٍ وَقُعُودٍ، وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ “، وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلَانِ ذَلِكَ


Daraqutni-1842

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1842. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை வைக்கும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا وَسَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً»


Daraqutni-1817

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1817. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை நடத்தும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا , وَسَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً»


Kubra-Bayhaqi-6988

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6988.


أَمَّنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي أَوْفَى عَلَى جِنَازَةِ ابْنَتِهِ فَكَبَّرَ أَرْبَعًا، فَمَكَثَ سَاعَةً حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُكَبِّرُ خَمْسًا، ثُمَّ سَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ , فَلَمَّا انْصَرَفَ، قُلْنَا لَهُ: مَا هَذَا؟ قَالَ: ” إِنِّي لَا أَزِيدُكُمْ عَلَى مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ ” , أَوْ ” هَكَذَا صَنَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “، ثُمَّ رَكِبَ دَابَّتَهَ، وَقَالَ لِلْغُلَامِ: ” أَيْنَ أَنَا؟ ” قَالَ: أَمَامَ الْجِنَازَةِ، قَالَ: ” أَلَمْ أَنْهَكَ ” , وَكَانَ قَدْ كُفَّ يَعْنِي بَصَرُهُ


Musannaf-Abdur-Razzaq-6448

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6448.


«يُسَلِّمُ الْإِمَامُ عَلَى الْجِنَازَةِ كَمَا يُسَلِّمُ فِي الصَّلَاةِ، وَيُسَلِّمُ مَنْ خَلْفَهُ»


Almujam-Alawsat-4337

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4337.


«صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى جَنَازَةٍ، فَسَلَّمَ، عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»


Next Page » « Previous Page