Author: Farook

Almujam-Alkabir-10022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10022. நபி (ஸல்) அவர்கள் சில காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையிலும் இமாம் ஸலாம் கொடுப்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

«خِلَالٌ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُنَّ، تَرَكَهُنَّ النَّاسُ، إِحْدَاهُنَّ تَسْلِيمُ الْإِمَامِ فِي الْجَنَازَةِ مِثْلَ تَسْلِيمِهِ فِي الصَّلَاةِ»

Kubra-Bayhaqi-6989

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6989. மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

ثَلَاثُ خِلَالٍ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُنَّ، تَرَكَهُنَّ النَّاسُ , إِحْدَاهُنَّ: التَّسْلِيمُ عَلَى الْجِنَازَةِ مِثْلُ التَّسْلِيمِ فِي الصَّلَاةِ

Kubra-Bayhaqi-7132

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7132. முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்றும் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும் கூறினார்கள்.

உமது தாய்மாமன் ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறினார்கள்.

உமது கணவரும் (முஸ்அப் பின் உமைர்-ரலி) கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் (அவரின் பிரிவால்) நான் கவலையடைகிறேன் என்று கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணிடம் கணவனுக்கு மற்றவர்களுக்கில்லாத தனி மதிப்பு (அந்தஸ்து) உள்ளது என்று கூறினார்கள்.

أَنَّهُ قِيلَ لَهَا: قُتِلَ أَخُوكِ فَقَالَتْ: رَحِمَهُ اللهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ , فَقِيلَ لَهَا: قُتِلَ خَالُكِ حَمْزَةُ فَقَالَتْ: رَحِمَهُ اللهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ , فَقِيلَ لَهَا: قُتِلَ زَوْجُكِ , فَقَالَتْ: وَاحُزْنَاهُ , فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لَشُعْبَةً لَيْسَتْ لِشَيْءٍ

Hakim-6906

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6906. முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்றும் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும் கூறினார்கள்.

உமது தாய்மாமன் ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறினார்கள்.

உமது கணவரும் (முஸ்அப் பின் உமைர்-ரலி) கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் (அவரின் பிரிவால்) நான் கவலையடைகிறேன் என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணிடம் கணவனுக்கு மற்றவர்களுக்கில்லாத தனி மதிப்பு (அந்தஸ்து) உள்ளது என்று கூறினார்கள்.

أَنَّهَا قِيلَ لَهَا: قُتِلَ أَخُوكِ. قَالَتْ: رَحِمَهُ اللَّهُ، إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، فَقِيلَ لَهَا: قُتِلَ خَالُكِ حَمْزَةُ. فَقَالَتْ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، فَقِيلَ لَهَا: قُتِلَ زَوْجُكِ، قَالَتْ: وَاحُزْنَاهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لِشُعْبَةً مَا هِيَ لِشَيْءٍ»

Ibn-Majah-1590

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1590. முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்றும் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும் கூறினார்கள்.

சிலர் உமது கணவரும் (முஸ்அப் பின் உமைர்-ரலி)  கொல்லப்பட்டு விட்டார் என்று கூறினர். அதற்கு அவர்கள், (அவரின் பிரிவால்) நான் கவலையடைகிறேன் என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணிடம் கணவனுக்கு மற்றவர்களுக்கில்லாத தனி மதிப்பு (அந்தஸ்து) உள்ளது என்று கூறினார்கள்.

أَنَّهُ قِيلَ لَهَا: قُتِلَ أَخُوكِ، فَقَالَتْ: رَحِمَهُ اللَّهُ، وَإِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، قَالُوا: قُتِلَ زَوْجُكِ، قَالَتْ: وَاحُزْنَاهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لَشُعْبَةً، مَا هِيَ لِشَيْءٍ»

Bazzar-8560

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

8560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவருக்கு நீங்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

إذا صلى أحدكم على جنازة فليخلص لها الدعاء.

Bazzar-7830

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7830. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவருக்கு நீங்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

إذا صلى أحدكم على الجنازة فليخلص لها الدعاء

Kubra-Bayhaqi-6964

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6964. இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ

Abu-Dawood-3199

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3199. இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

«إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»

Ibn-Majah-1497

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

ஜனாஸாத் தொழுகையில் (ஜனாஸாவுக்கு) துஆ செய்வது பற்றி வந்துள்ளவை.

1497. “இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«إِذَا صَلَّيْتُمْ عَلَى الْمَيِّتِ، فَأَخْلِصُوا لَهُ الدُّعَاءَ»

Next Page » « Previous Page