Author: Farook

Musnad-Ahmad-6646

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ»


Musnad-Ahmad-6582

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால் அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ»


Tirmidhi-1074

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால்  அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الجُمُعَةِ أَوْ لَيْلَةَ الجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ القَبْرِ»


Abi-Yala-4113

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَنْ مَاتَ يَوْمَ الْجُمُعَةِ وُقِيَ عَذَابَ الْقَبْرِ»


Abu-Dawood-3131

ஹதீஸின் தரம்: Pending

3131. நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, ‘இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது’ என்று உறுதிமொழி எடுத்தனர்…


كَانَ فِيمَا أَخَذَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَعْرُوفِ الَّذِي أَخَذَ عَلَيْنَا أَنْ لَا نَعْصِيَهُ فِيهِ: «أَنْ لَا نَخْمُشَ وَجْهًا، وَلَا نَدْعُوَ وَيْلًا، وَلَا نَشُقَّ جَيْبًا، وَأَنْ لَا نَنْشُرَ شَعَرًا»


Bazzar-9409

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9409. பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


من مات في بيت المقدس فكأنما مات في السَّماء


Musannaf-Ibn-Abi-Shaybah-25540

ஹதீஸின் தரம்: More Info

25540. அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் பற்றி புறம் பேச ஆரம்பித்தார். உடனே மற்றொரு மனிதர் அதைத் தடுத்தார்.

அப்போது உம்முத்தர்தா (ரலி) அவர்கள், (புறம் பேசுவதைத் தடுத்த மனிதரைப் பார்த்து) நீ அவரைத் தடுத்து நல்ல காரியம் செய்தாய்…

யார் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவரை நரகத்தின் அனல் காற்றை விட்டு அல்லாஹ் காப்பாற்றுகிறான் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் மிஸ்அர் அவர்கள், “நரகத்தின் அனல்காற்றை” விட்டு அல்லாஹ் காப்பாற்றுவான் என்று அறிவிக்கின்றார்.


وَقَعَ رَجُلٌ فِي رَجُلٍ فَرَدَّ عَلَيْهِ آخَرُ، فَقَالَتْ أُمُّ الدَّرْدَاءِ «لَقَدْ غَبَطْتُكَ، إِنَّهُ مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ، وَقَاهُ اللَّهُ

 


Almujam-Alkabir-22111

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22111. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ بِالْمَغِيبِ كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَعْتِقَهُ مِنَ النَّارِ»


Almujam-Alkabir-22110

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22110. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ فِي الْمَغِيبِ كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يَقِيهِ مِنَ النَّارِ»


Tayalisi-1737

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1737. யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ»


Next Page » « Previous Page