Author: Farook

Hakim-319

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதற்குப் பின் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ شَيْئَيْنِ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّتِي، وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Muwatta-Malik-3338

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3338. நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ


Musnad-Ahmad-21654

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21654. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


إِنِّي تَارِكٌ فِيكُمْ خَلِيفَتَيْنِ: كِتَابُ اللَّهِ وَأَهْلُ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ جَمِيعًا


Almujam-Alkabir-4922

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


«إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمُ الْخَلِيفَتَيْنِ كِتَابَ اللهِ وَعِتْرَتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»


Almujam-Alkabir-4921

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4921. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


«إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ خَلِيفَتَيْنِ كِتَابَ اللهِ وَأَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَمْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»


Almujam-Alkabir-2680

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2680. …மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாமல் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ، فَخَطَبَ، فَسَمِعْتُهُ وَهُوَ يَقُولُ: ” أَيُّهَا النَّاسُ، قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللهِ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي


Musannaf-Ibn-Abi-Shaybah-7444

ஹதீஸின் தரம்: More Info

7444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்…

அறிவிப்பவர் : உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


«أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَمَرَ أَنْ تُطَهَّرَ وَتُطَيَّبَ»

يَعْنِي الْقَبَائِلَ


Musnad-Ahmad-23146

ஹதீஸின் தரம்: More Info

23146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்.

அறிவிப்பவர் : உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا أَنْ نَصْنَعَ الْمَسَاجِدَ فِي دُورِنَا، وَأَنْ نُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Bazzar-4622

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அல்லாஹ் நாடினால் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يَأْمُرُنَا أَنْ نَصْنَعَ الْمَسَاجِدَ فِي دُورِنَا وَنُنَظِّفَهَا وَنُطَهِّرَهَا إِنْ شَاءَ اللَّهُ.


Almujam-Alkabir-7027

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا بِالْمَسْجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُحْسِنَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Next Page » « Previous Page