Author: Farook

Almujam-Alkabir-7026

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالْمَسَاجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Musnad-Ahmad-20184

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளில் (உபரியான தொழுகைகளை தொழுவதற்காக) தொழும் இடத்தை ஏற்படுத்திடவும், அவைகள் துப்புரவு செய்யப்பட்டு (தூய்மையாக) இருக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டாார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَّخِذَ الْمَسَاجِدَ فِي دِيَارِنَا، وَأَمَرَنَا أَنْ نُنَظِّفَهَا»


Abu-Dawood-456

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

456. ஸுலைமான் பின் ஸமுரா அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள், எனக்கு எழுதிய கடிதத்தில் “இறைவாழ்த்துக்கும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் கூறிய பின்பு (எழுதுவது என்னவெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

 


أَنَّهُ كَتَبَ إِلَى ابْنِهِ: أَمَّا بَعْدُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَأْمُرُنَا بِالْمَسَاجِدِ أَنْ نَصْنَعَهَا فِي دِيَارِنَا، وَنُصْلِحَ صَنْعَتَهَا وَنُطَهِّرَهَا»


Abi-Yala-4698

ஹதீஸின் தரம்: More Info

4698. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فِي الدُّورِ أَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»


Ibn-Hibban-1634

ஹதீஸின் தரம்: More Info

1634. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُطَيَّبَ وَتُنَظَّفَ».


Ibn-Khuzaymah-1294

ஹதீஸின் தரம்: More Info

1294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فِي الدُّورِ»


Tirmidhi-596

ஹதீஸின் தரம்: More Info

596. ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா அறிவித்துள்ளார்.

இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،

وقَالَ سُفْيَانُ: «قَوْلُهُ بِبِنَاءِ المَسَاجِدِ فِي الدُّورِ يَعْنِي القَبَائِلَ»


Tirmidhi-595

ஹதீஸின் தரம்: More Info

595. ஹதீஸ் எண்-594 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் ஹிஷாமிடமிருந்து அப்தாவும் , வகீஉவும்  அறிவித்துள்ளனர்.

இதில் உர்வா (ரஹ்), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்.

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

முதலில் உள்ள ஹதீஸ்-எண்-594 விட இந்த செய்தி சரியானது.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ، فَذَكَرَ نَحْوَهُ،


Tirmidhi-594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ المَسَاجِدِ فِي الدُّورِ، وَأَنْ تُنَظَّفَ، وَتُطَيَّبَ»


Ibn-Majah-759

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

759. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنْ تُتَّخَذَ الْمَسَاجِدُ فِي الدُّورِ، وَأَنْ تُطَهَّرَ، وَتُطَيَّبَ»


Next Page » « Previous Page