Author: Farook

Ibn-Majah-758

ஹதீஸின் தரம்: More Info

758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَمَرَ بِالْمَسَاجِدِ أَنْ تُبْنَى فِي الدُّورِ، وَأَنْ تُطَهَّرَ وَتُطَيَّبَ»


Musnad-Ahmad-26386

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

26386. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِبُنْيَانِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَمَرَ بِهَا أَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»


Bazzar-864

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

864. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கைப்பற்றப்பட்டு (மரணித்து) விடுவேன். நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். எனவே அவ்விரண்டிற்கு பின்னால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். காணாமல் போன பொருளை தேடப்பட்டு அது கிடைக்காமல் போவதைப் போன்று நபித்தோழர்களையும் தேடப்படும் ஒரு காலம் வராமல் மறுமை நாள் ஏற்படாது…

அறிவிப்பவர் : அலீ (ரலி)


إِنِّي مَقْبُوضٌ وَإِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللَّهِ وَأَهْلَ بَيْتِي وإِنَّكُمْ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا وَأَنَّهُ لَنْ تَقُومَ السَّاعَةُ حَتَّى يُبْتَغَى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا تُبْتَغَى الضَّالَّةُ فَلَا تُوجَدُ


Almujam-Alkabir-4923

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் எனக்குப் பின் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ مِنْ بَعْدِي: كِتَابَ اللهِ عَزَّ وَجَلَّ وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Musannaf-Ibn-Abi-Shaybah-31679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

31679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் எனக்கு பின் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


إِنِّي تَارِكٌ فِيكُمُ الْخَلِيفَتَيْنِ مِنْ بَعْدِي: كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي , أَهْلَ بَيْتِي , وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Musnad-Ahmad-21578

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


إِنِّي تَارِكٌ فِيكُمْ خَلِيفَتَيْنِ: كِتَابُ اللَّهِ، حَبْلٌ مَمْدُودٌ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، أَوْ مَا بَيْنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ، وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Almujam-Alawsat-4757

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4757. …மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாமல் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ، وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ: «أَيُّهَا النَّاسُ، قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي»


Tirmidhi-3786

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3786. …மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாமல் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ القَصْوَاءِ يَخْطُبُ، فَسَمِعْتُهُ يَقُولُ: ” يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي


Almujam-Alkabir-2679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“…நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது. எனவே எனக்குபின்னால் இவ்விரண்டின் விசயத்தில் நீங்கள் எப்படி நடக்கவேண்டும் என்பதை சிந்தித்துக்கொள்ளுங்கள்…

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


كَأَنِّي قَدْ دُعِيتُ فَأَجَبْتُ فَإِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّ‍قَلَيْنِ: كِتَابَ اللهِ، حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ، فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا


Almujam-Alkabir-2678

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2678. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மக்களே! நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று மற்றதை விட பெரியதாகும். அது தான் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


أَيُّهَا النَّاسُ إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَمْرَيْنِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ: كِتَابَ اللهِ، حَبَلٌ مَمْدُودٌ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَنْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Next Page » « Previous Page