Author: Farook

Almujam-Alawsat-5315

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5315. அபூ தமீமா அல்ஹுஜமிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஊரின் சுவர்கள் உள்ள பகுதியில் இருந்தேன். அப்போது திடீரென ஒரு பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணைத் தவிர வேறு சிந்தனை அப்போது எனக்கு இல்லை. அவள் என்னைக் கடந்துச் சென்றாள். நான் அவளையே பார்த்துக் கொண்டு சென்று சுவற்றில் மோதிக்கொண்டேன். அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, நான் அழிந்து விட்டேன் என்றுக் கூறினேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்ன விசயம் அபூதமீமாவே! என்று கேட்டார்கள். நான் நடந்ததைக் கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்  “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவரின் பாவத்திற்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். நமது இறைவன் ஒரு பாவத்திற்கு இருதடவை தண்டிக்காத கண்ணியமிக்கவன் ஆவான் என்று கூறினார்கள்.

بَيْنَا أَنَا فِي حَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ إِذْ بَصُرْتُ بِامْرَأَةٍ، فَلَمْ يَكُنْ لِي هَمٌّ غَيْرُهَا حَتَّى جَازَتْنِي، ثُمَّ أَتْبَعْتُهَا بَصَرِي، حَتَّى حَازَيْتُ الْحَائِطَ، فَالْتَفَتُّ فَأَصَابَ وَجْهِيَ وَأَدْمَانِي، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: هَلَكَتُ. فَقَالَ: «وَمَا ذَاكَ يَا أَبَا تَمِيمَةَ؟» فَأَخْبَرْتُهُ فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ فِي الدُّنْيَا، وَرَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى أَكْرَمُ مِنْ أَنْ يُعَاقِبَ بِذَنْبٍ مَرَّتَيْنِ»

Almujam-Alkabir-11842

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11842. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தன் முகத்தில் இரத்தம் வடிய, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்றேன். அதனால் ஒருவர், நீங்கள் என்னை பார்க்கும் இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டார் என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்  “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவரின் பாவத்திற்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப் போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيلُ وَجْهُهُ دَمًا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ إِنِّي اتَّبَعْتُ امْرَأَةً، فَلَقِيَنِي رَجُلٌ فَصَنَعَ بِي مَا تَرَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ عُقُوبَةَ ذَنْبِهِ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنَبِهِ حَتَّى يُوافِيَهُ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عِيرٌ»

Hakim-8133

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8133. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.

அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

أَنَّ امْرَأَةً كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ مَرَّ بِهَا رَجُلٌ فَبَسَطَ يَدَهُ إِلَيْهَا وَلَاعَبَهَا فَقَالَتْ: مَهْ، إِنَّ اللَّهَ تَعَالَى ذَهَبَ بِالشِّرْكِ وَجَاءَ بِالْإِسْلَامِ، فَتَرَكَهَا وَوَلَّى فَجَعَلَ يَلْتَفِتُ يَنْظُرُ إِلَيْهَا حَتَّى أَصَابَ وَجْهَهُ الْحَائِطُ، قَالَ: فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا، إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ الْعُقُوبَةَ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَيْرٌ»

Hakim-1291

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1291. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.

அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….

أَنَّ امْرَأَةً كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ فَمَرَّ بِهَا رَجُلٌ – أَوْ مَرَّتْ بِهِ – فَبَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتْ: مَهْ إِنَّ اللَّهَ أَذْهَبَ بِالشِّرْكِ، وَجَاءَ بِالْإِسْلَامِ، فَتَرَكَهَا وَوَلَّى، وَجَعَلَ يَنْظُرُ إِلَيْهَا حَتَّى أَصَابَ وَجْهَهُ الْحَائِطُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا، إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ حَتَّى يُوَافَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ»

Ibn-Hibban-2911

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2911. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.

அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةَ كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتْ: مَهْ، فَإِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ بِالشِّرْكِ وَجَاءَ بِالْإِسْلَامِ، فَتَرَكَهَا وَوَلَّى فَجَعَلَ يَلْتَفِتُ خَلْفَهُ وَيَنْظُرُ إِلَيْهَا حَتَّى أَصَابَ وَجْهُهُ حَائِطًا، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالدَّمُ يَسِيلُ عَلَى وَجْهِهِ، فَأَخْبَرَهُ بِالْأَمْرِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا، عَجَّلَ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ ذَنْبَهُ، حَتَّى يُوَافِيَ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَائِرٌ»

Abi-Yala-4255

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4255. ஹதீஸ் எண்-4254 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

أَنَّهُ كَانَ يَقُولُ: فَذَكَرَ نَحْوَهُ

Hakim-8799

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8799. ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

«إِنَّ اللَّهَ تَعَالَى إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَهُ يَوْمَ الْقِيَامَةِ»

Abi-Yala-4254

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4254. ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

«إِنَّ اللَّهَ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَهُ يَوْمَ الْقِيَامَةِ»

Tirmidhi-2396

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

2396. ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

«إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الخَيْرَ عَجَّلَ لَهُ العُقُوبَةَ فِي الدُّنْيَا، وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الشَّرَّ أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى يُوَافِيَ بِهِ يَوْمَ القِيَامَةِ»

وَبِهَذَا الإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ عِظَمَ الجَزَاءِ مَعَ عِظَمِ البَلَاءِ، وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا، وَمَنْ سَخِطَ فَلَهُ السَّخَطُ»

Musnad-Ahmad-16806

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

16806. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அறியாமைக்காலத்தில் விபச்சாரியாக இருந்த ஒரு பெண்ணை (எதிர்பாராத விதமாக) சந்தித்தார். உடனே அவளிடம் கை நீட்டி சீண்ட ஆரம்பித்தார். அதற்கு அந்தப் பெண் விட்டுவிடு! அல்லாஹ் இணைவைப்பை நீக்கி இஸ்லாத்தை கொண்டு வந்துள்ளான் என்று கூறினார்.

அதனால் அவர் அவளை விட்டுவிட்டு திரும்பிச் செல்ல ஆரம்பித்தார். செல்லும் போது பின்னால் அந்தப்பெண்ணை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார். அதனால் அவரின் முகம் சுவற்றில் மோதி இரத்தம் வடிய ஆரம்பித்தது. அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு நலவை நாடிவிட்ட ஒரு அடியாராக நீ இருக்கிறாய் என்று கூறிவிட்டு, “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை மலைப்போன்ற அளவு நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

أَنَّ رَجُلًا لَقِيَ امْرَأَةً كَانَتْ بَغِيًّا فِي الْجَاهِلِيَّةِ، فَجَعَلَ يُلَاعِبُهَا حَتَّى بَسَطَ يَدَهُ إِلَيْهَا، فَقَالَتِ الْمَرْأَةُ: مَهْ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ ذَهَبَ بِالشِّرْكِ – وَقَالَ عَفَّانُ مَرَّةً: ذَهَبَ بِالْجَاهِلِيَّةِ – وَجَاءَنَا بِالْإِسْلَامِ. فَوَلَّى الرَّجُلُ، فَأَصَابَ وَجْهَهُ الْحَائِطُ، فَشَجَّهُ، ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، فَقَالَ: «أَنْتَ عَبْدٌ أَرَادَ اللَّهُ بِكَ خَيْرًا. إِذَا أَرَادَ اللَّهُ عَزَّ وَجَلَّ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ، وَإِذَا أَرَادَ بِعَبْدٍ شَرًّا أَمْسَكَ عَلَيْهِ بِذَنْبِهِ حَتَّى يُوَافِى بِهِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُ عَيْرٌ»

Next Page » « Previous Page