Author: Farook

Musnad-Ahmad-18174

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

18174. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் ஜனாஸாவின் முன்னால் சற்று அருகில் வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ செல்லலாம்.

‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي أَمَامَهَا قَرِيبًا عَنْ يَمِينِهَا، أَوْ عَنْ يَسَارِهَا، وَالسِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»


Musnad-Ahmad-18162

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

18162. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


Nasaayi-1948

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1948. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


Ibn-Majah-1507

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1507. சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


Tirmidhi-1031

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1031. “வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இந்தச் செய்தியை ஸயீத் பின் உபைதுல்லாஹ் அவர்களிடமிருந்து இஸ்ராயீலும் மற்றவர்களும் அறிவித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் சிலர் இதன் அடிப்படையில் அமல்படுத்தியுள்ளனர். அவர்கள் கூறுகிறார்கள்: ‘குழந்தை பிறந்து அழவில்லை என்றாலும், அது உருவாக்கப்பட்டது (உயிர் பெற்றது) என அறிந்தால், அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும். மேலும் இதுவே அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.


«الرَّاكِبُ خَلْفَ الجَنَازَةِ، وَالمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


Abu-Dawood-2710

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மோசடியின் விளைவு.

2710. கைபர் போரில் நபித்தோழர் ஒருவர் மரணித்து விட்டார். இதை மக்கள், நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். அதனால் மக்களின் முகங்கள் மாறிவிட்டன. எனவே, நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார்” என்று கூறினார்கள்.

எனவே  அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களுடன் கண்டோம்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)


أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ يَوْمَ خَيْبَرَ، فَذَكَرُوا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ». فَتَغَيَّرَتْ وُجُوهُ النَّاسِ لِذَلِكَ، فَقَالَ: «إِنَّ صَاحِبَكُمْ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ». فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ لَا يُسَاوِي دِرْهَمَيْنِ


Nasaayi-1959

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மோசடி செய்தவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துதல்.

1959. கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களுடன் கண்டோம்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)


مَاتَ رَجُلٌ بِخَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ إِنَّهُ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ»، فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا فِيهِ خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ مَا يُسَاوِي دِرْهَمَيْنِ


Ibn-Majah-2200

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2200. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அதைத் தொடர்ந்து, எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ قَدْ غَلَا السِّعْرُ فَسَعِّرْ لَنَا، فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ، الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ، إِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ يَطْلُبُنِي بِمَظْلِمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ»


Musnad-Ahmad-14057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14057. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அதைத் தொடர்ந்து, எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


غَلَا السِّعْرُ بِالْمَدِينَةِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّاسُ: يَا رَسُولَ اللَّهِ، غَلَا السِّعْرُ، سَعِّرْ لَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ الْمُسَعِّرُ الْقَابِضُ، الْبَاسِطُ الرَّزَّاقُ، إِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى اللَّهَ، وَلَيْسَ أَحَدٌ مِنْكُمْ يَطْلُبُنِي بِمَظْلَمَةٍ فِي دَمٍ، وَلَا مَالٍ»


Musnad-Ahmad-12591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12591. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அதைத் தொடர்ந்து, எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ لَوْ سَعَّرْتَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ الْخَالِقُ الْقَابِضُ، الْبَاسِطُ الرَّازِقُ، الْمُسَعِّرُ، وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى اللَّهَ وَلَا يَطْلُبُنِي أَحَدٌ بِمَظْلَمَةٍ ظَلَمْتُهَا إِيَّاهُ فِي دَمٍ وَلَا مَالٍ»


Next Page » « Previous Page