Author: Farook

Almujam-Alkabir-3962

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3962. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் விரும்புகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் விரும்புகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் விரும்புகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ»


Almujam-Alkabir-3961

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3961. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்”  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-6859

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6859. வித்ருத் தொழுகை அவசியமாகும். அல்லது கட்டாயமாகும்….


«الْوَتْرُ حَقٌّ، أَوْ وَاجِبٌ»


Almujam-Alawsat-1944

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1944. “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ முடிந்தவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; ஐந்து ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ بِثَلَاثٍ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُومِئْ إِيمَاءً»


Musannaf-Abdur-Razzaq-4633

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4633. “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என அபூ அய்யூப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதாஉ பின் யஸீத் (ரஹ்)

 


«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسِ رَكَعَاتٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ إِلَّا أَنْ يُومِئَ إِيمَاءً فَلْيَفْعَلْ»،


Daraqutni-1643

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1643. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஏழு ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِسَبْعٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Daraqutni-1642

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1642. “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ خَمْسٌ أَوْ ثَلَاثٌ أَوْ وَاحِدَةٌ»


Daraqutni-1641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1641. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِخَمْسٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِثَلَاثٍ , وَمَنْ شَاءَ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Daraqutni-1640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1640. “வித்ரு தொழுகை அவசியமானதாகும்; கட்டாயமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)

 

இமாம் தாரகுத்னீ கூறுகிறார்:

முஹம்மது பின் ஹஸ்ஸான் அறிவிக்கும் (வித்ரு வாஜிப்) வித்ரு தொழுகை கட்டாயம் என்பது சரியானதல்ல. ஸுஃப்யான் பின் உயைனாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் யாரும் இப்படி அறிவிக்கவில்லை.


«الْوِتْرُ حَقٌّ وَاجِبٌ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ , وَمَنْ شَاءَ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ»


Tayalisi-594

ஹதீஸின் தரம்: More Info

594. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஏழு ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்; அதுவும் முடியாதவர் சைகை செய்து தொழட்டும்” என்று அபூ அய்யூப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதாஉ பின் யஸீத் (ரஹ்)


«الْوِتْرُ حَقٌّ» أَوْ «وَاجِبٌ مَنْ شَاءَ أَوْتَرَ بِسَبْعٍ وَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ فَمَنْ غُلِبَ فَلْيُومِئْ إِيمَاءً»


Next Page » « Previous Page