Author: Farook

Almujam-Alkabir-9395

ஹதீஸின் தரம்: More Info

9395. இப்ராஹீம் (ரஹ்) கூறியதாவது

அல்கமாவும், அஸ்வதும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் சென்று அஸ்வதின் தாயார் நிற்கமுடியாதவராகிவிட்டார். அவர் ஸஜ்தா செய்து தொழுவதற்காக அஸ்வத் அவர்கள், பலகை போன்றதை ஏற்பாடு செய்ய விரும்புகிறார். இது பற்றி தங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அதை ஏற்படுத்துவதுவதின் மூலம் அவர் பூமியின் மீது ஸஜ்தா செய்வதை ஷைத்தான் குறிக்கிடுகிறான் என்றே கருதுகிறேன். உமது தாயார் நின்று தொழ முடிந்தால் சரி.  முடியாவிட்டால் சைகை செய்து தொழுதுக் கொள்ளட்டும் என்று கூறினார்கள்.


دَخَلَ عَلْقَمَةُ، وَالْأَسْوَدُ عَلَى عَبْدِ اللهِ، فَقَالَا: إِنَّ أُمَّ الْأَسْوَدِ أُقْعِدَتْ، وَإِنَّهُ يَرْكُزُ لَهَا عُودَ الْمِرْوَحَةِ تُصَلِّي عَلَيْهِ فَمَا تَرَى؟، قَالَ: «إِنِّي لَأَرَى الشَّيْطَانَ يَعْرِضُ بِالْعُودِ لِتَسْجُدْ عَلَى الْأَرْضِ إِنِ اسْتَطَاعَتْ، وَإِلَّا تُومِئْ إِيمَاءً»


Kubra-Bayhaqi-3673

ஹதீஸின் தரம்: More Info

3673. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுடன், நோயாளியாக இருந்த அவரின் சகோதரர் உத்பா (ரலி) அவர்களை நலம் விசாரிக்க சென்றேன். அப்போது அவர் ஒரு பலகை போன்றதின் மீது ஸஜ்தா செய்து தொழுதுக் கொண்டிருந்ததை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) பார்த்தார்கள்.

உடனே அவர்கள், அதை அவரிடமிருந்து எடுத்து விட்டு உன்னால் முடிந்தால் முகத்தை தரையில் வைத்து தொழு! அது முடியாவிட்டால் ருகூஉ ஸஜ்தாக்களை சைகை செய்து தொழுதுக் கொள்! ருகூஉல் குனிவதை விட ஸஜ்தாவில் சற்று கூடுதலாக குனிந்து நிறைவேற்று! என்று கூறினார்கள்.


دَخَلْتُ مَعَ عَبْدِ اللهِ عَلَى أَخِيهِ عُتْبَةَ نَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَرَأَى مَعَ أَخِيهِ مِرْوَحَةً يَسْجُدُ عَلَيْهَا، فَانْتَزَعَهَا مِنْهُ عَبْدُ اللهِ، وَقَالَ: اسْجُدْ عَلَى الْأَرْضِ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً وَاجْعَلِ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ


Musnad-Ahmad-22704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22704. அபூ அப்துல்லாஹ் அஸ்ஸுனாபிஹீ  (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமுஹம்மது என்பவர் வித்ருத் தொழுகை கடமையான தொழுகை என்று எண்ணிக் கொண்டிருந்தார். (இது பற்றி உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது)  அவர்கள், அபூமுஹம்மது பொய் கூறுகிறார்.

“ஐந்து நேரத் தொழுகைகளை, அல்லாஹ்  தனது அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். யார் அழகிய முறையில் உளூச் செய்து அவைகளை அதற்குரிய நேரத்தில் தொழ நின்று, இறையச்சத்துடன் ருகூஉ ஸஜ்தாக்களை முழுமையாக செய்து நிறைவேற்றுகின்றாரோ அவரை அல்லாஹ் மன்னிப்பான் என்ற வாக்குறுதி அல்லாஹ்விடத்தில் உண்டு.

யார் அவைகளை சரியாக நிறைவேற்றவில்லையோ அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் அந்த வாக்குறுதி இல்லை. அவன் நாடினால் மன்னிப்பான். நாடினால் தண்டிப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று சாட்சி கூறுகிறேன் என்று கூறினார்கள்.


زَعَمَ أَبُو مُحَمَّدٍ أَنَّ الْوَتْرَ وَاجِبٌ، فَقَالَ: عُبَادَةُ بْنُ الصَّامِت كَذَبَ أَبُو مُحَمَّدٍ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ عَلَى عِبَادِهِ مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ، فَأَتَمَّ رُكُوعَهُنَّ وَسُجُودَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ غَفَرَ لَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ»


Almujam-Alawsat-6807

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6807. “உனது சமுதாயத்தின் மீது ஐந்து நேர தொழுகைகளை நான் விதியாக்கியிருக்கின்றேன். யார் ஐந்து நேர தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் பேணி தொழுது வருகின்றாரோ அவரை நான் சுவனத்தில் நுழைப்பேன் என்று என்னிடத்தில் ஒரு வாக்குறுதி உண்டு.

யார் அந்த தொழுகைகளை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் கிடையாது” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா பின் ரிப்யீ (ரலி)


إِنِّي فَرَضْتُ عَلَيْكَ خَمْسَ صَلَوَاتٍ، وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا، أَنَّهُ مَنْ حَافَظَ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ»


Ibn-Majah-1403

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1403. “உனது சமுதாயத்தின் மீது ஐந்து நேர தொழுகைகளை நான் விதியாக்கியிருக்கின்றேன். யார் ஐந்து நேர தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் பேணி தொழுது வருகின்றாரோ அவரை நான் சுவனத்தில் நுழைப்பேன் என்று என்னிடத்தில் ஒரு வாக்குறுதி உண்டு.

யார் அந்த தொழுகைகளை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் கிடையாது” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா பின் ரிப்யீ (ரலி)


«افْتَرَضْتُ عَلَى أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ، وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ حَافَظَ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلَا عَهْدَ لَهُ عِنْدِي»


Almujam-Alkabir-3967

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3967. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்; அதுவும் முடியாதவர் சைகை செய்து தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ، وَمَنْ غُلِبَ فَلْيُومِئْ إِيمَاءً»


Almujam-Alkabir-3966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3966. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஏழு ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ أَوْتَرَ بِسَبْعٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Almujam-Alkabir-3965

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3965. “வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஏழு ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஅய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِسَبْعٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Almujam-Alkabir-3964

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3964. : “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ முடிந்தவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; ஐந்து ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)


«الْوِتْرُ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيُوتِرْ بِثَلَاثٍ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيُوتِرْ بِوَاحِدَةٍ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيُومِئْ إِيمَاءً»


Almujam-Alkabir-3963

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3963. : “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும். அது தொழ முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)

 

இதன் வாசக அமைப்பு, ஸயீத் பின் ஸுலைமான் என்பவரின் அறிவிப்பின்படி உள்ளதாகும்.


«الْوِتْرُ خَمْسٌ، أَوْ ثَلَاثٌ، أَوْ وَاحِدَةٌ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»

«وَاللَّفْظُ لِحَدِيثِ بْنِ سُلَيْمَانَ»


Next Page » « Previous Page