23715. இதற்கு முன் உள்ள ஹதீஸ் எண்-23714 இல் வரும் செய்தியை அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஜஃபர் பின் மைமூன் அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்…
…
23715. இதற்கு முன் உள்ள ஹதீஸ் எண்-23714 இல் வரும் செய்தியை அபூஉஸ்மான் நஹ்தீ அவர்களிடமிருந்து ஜஃபர் பின் மைமூன் அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்…
…
2511. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அவன் வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)
«إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي أَنْ يَرْفَعَ الْعَبْدُ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صَفَرًا»
880. நிச்சயமாக மதிப்பும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
«إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَسْتَحْيِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
6130. மிகைத்தவனும் உயர்ந்தவனுமான அல்லாஹ், ஒரு அடியான் தனது இருகரமேந்தி அவனிடம் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸீ (ரலி)
«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيَسْتَحِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
6148. நிச்சயமாக மதிப்பும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் ஒன்றுமில்லாமல் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيَسْتَحْيِي إِذَا رَفَعَ الْعَبْدُ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا لَا شَيْءَ فِيهِمَا»
1962. நிச்சயமாக ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
«إِنَّ اللَّهَ لَيَسْتَحِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
3146. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். ஒரு மனிதர் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அவன் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)
إِنَّ اللهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ
34677. நிச்சயமாக ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி நலவைக் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கமடைகிறான் என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அபூஉஸ்மான் (ரஹ்)
«إِنَّ اللَّهَ يَسْتَحْيِ أَنْ يَبْسُطَ إِلَيْهِ عَبْدٌ يَدَيْهِ يَسْأَلُهُ بِهِمَا خَيْرًا فَيَرُدُّهُمَا خَائِبَتَيْنِ»
29555. நிச்சயமாக ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி நலவைக் கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கமடைகிறான் என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அபூஉஸ்மான் (ரஹ்)
«إِنَّ اللَّهَ يَسْتَحْيِي أَنْ يَبْسُطَ إِلَيْهِ عَبْدُهُ يَدَيْهِ يَسْأَلُهُ بِهِمَا خَيْرًا فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»
4591. நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ كَرِيمٌ، يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا صفْرًا لَيْسَ فِيهِمَا شَيْءٌ»
சமீப விமர்சனங்கள்