தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-880

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நிச்சயமாக மதிப்பும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒரு அடியான் அல்லாஹ்விடம் தனது இருகரமேந்தி கேட்கும் போது, அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பியனுப்ப வெட்கப்படுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ (ரலி)

(இப்னு ஹிப்பான்: 880)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَلْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«إِنَّ اللَّهَ جَلَّ وَعَلَا يَسْتَحْيِي مِنَ الْعَبْدِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-880.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-887.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஜமீல் பின் ஹஸன் அல்அதகிய்யீ  பற்றி அப்தான் அவர்கள், இவர் பொய்கூறும் பாவி என்று விமர்சித்துள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இதை மறுத்து இவர் நம்பகமானவர், ஆனால் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/202)

மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-23714 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.