Author: Farook

Nasaayi-4235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4235. மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيِّتَةٍ كَانَ أَعْطَاهَا مَوْلَاةً لِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»


Ibn-Majah-3610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3610. மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)


أَنَّ شَاةً لِمَوْلَاةِ مَيْمُونَةَ مَرَّ بِهَا – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَدْ أُعْطِيَتْهَا مِنَ الصَّدَقَةِ مَيْتَةً، فَقَالَ: «هَلَّا أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ، فَانْتَفَعُوا بِهِ؟» ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ، قَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»


Ibn-Majah-3609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3609. எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ»


Tirmidhi-1728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1728. எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ»


Abu-Dawood-4120

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4120. மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்கள் : மைமூனா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)


أُهْدِيَ لِمَوْلَاةٍ لَنَا شَاةٌ مِنَ الصَّدَقَةِ، فَمَاتَتْ، فَمَرَّ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَلَا دَبَغْتُمْ إِهَابَهَا وَاسْتَنْفَعْتُمْ بِهِ» قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ، قَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»


Abu-Dawood-4123

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4123. தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«إِذَا دُبِغَ الْإِهَابُ، فَقَدْ طَهُرَ»


Musnad-Ahmad-2369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2369. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, ‘இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக் கூடாதா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இது செத்த ஆடாயிற்றே!’ என்றனர். அதற்கு ‘அதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِشَاةٍ مَيْتَةٍ، فَقَالَ: «هَلا اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا؟» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»


Hakim-498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

498. நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوُضُوءِ مِنْ مَاءِ الْبَحْرِ، فَقَالَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»


Hakim-497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

497. நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَاءِ الْبَحْرِ: أَنَتَوَضَّأُ مِنْهُ؟ فَقَالَ: «الطَّهُورُ مَاؤُهُ، وَالْحِلُّ مَيْتَتُهُ»


Hakim-493

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

493. …நபி (ஸல்) அவர்களிடம் சிலர் வந்து, (அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ) நாங்கள் தூரமான கடல் பயணம் செல்லும் போது ஒன்றிரண்டு தோல்பையில் தான் தண்ணீர் எடுத்து செல்கிறோம்.‎ நாங்கள் அந்த தண்ணீரை உலூச் செய்ய பயன் படுத்தினால் தாகத்தால் கஷ்டப் ‎படுவோம். எனவே கடல் நீரால் உலூச் செய்யலாமா? என்று கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் நீர் சுத்தம் செய்ய ‎ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப் பட்டதாகும் ‎என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.‎..


كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَجَاءَهُ صَيَّادٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَنْطَلِقُ فِي الْبَحْرِ نُرِيدُ الصَّيْدَ فَيَحْمِلُ مَعَهُ أَحَدُنَا الْإِدَاوَةَ وَهُوَ يَرْجُو أَنْ يَأْخُذَ الصَّيْدَ قَرِيبًا، فَرُبَّمَا وَجَدَهُ كَذَلِكَ، وَرُبَّمَا لَمْ يَجِدِ الصَّيْدَ حَتَّى يَبْلُغَ مِنَ الْبَحْرِ مَكَانًا لَمْ يَظُنَّ أَنْ يَبْلُغَهُ، فَلَعَلَّهُ يَحْتَلِمُ أَوْ يَتَوَضَّأُ، فَإِنِ اغْتَسَلَ أَوْ تَوَضَّأَ بِهَذَا الْمَاءِ فَلَعَلَّ أَحَدُنَا يُهْلِكُهُ الْعَطَشُ فَهَلْ تَرَى فِي مَاءِ الْبَحْرِ أَنْ نَغْتَسِلَ به أَوْ نَتَوَضَّأَ بِهِ إِذَا خِفْنَا ذَلِكَ، فَزُعِمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اغْتَسِلُوا مِنْهُ وَتَوَضَّئُوا بِهِ فَإِنَّهُ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ»


Next Page » « Previous Page