Author: Farook

Musnad-Ahmad-13034

ஹதீஸின் தரம்: Pending

13034. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் ஒருபோதும் என்னை திட்டியதில்லை. ஒருபோதும் “சீ” என்று கூறியதில்லை.

நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் என்னிடம் கூறியதில்லை.


خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَشْرَ سِنِينَ، لَا وَاللَّهِ مَا سَبَّنِي سَبَّةً قَطُّ، وَلَا قَالَ لِي: أُفٍّ قَطُّ، وَلَا قَالَ لِي لِشَيْءٍ فَعَلْتُهُ: لِمَ فَعَلْتَهُ، وَلَا لِشَيْءٍ لَمْ أَفْعَلْهُ: أَلَّا فَعَلْتَهُ


Musnad-Ahmad-12784

ஹதீஸின் தரம்: More Info

12784. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது நபி  (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். என்னுடைய தாயார் உம்மு ஸுலைம் (ரலி அவர்கள் நபி  (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இந்த என்னுடைய மகனை பணிவிடை செய்ய வைத்துக்கொள்ளுங்கள் என கூறி என்னை ஒப்படைத்தார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் என்னிடம் கூறியதில்லை.


قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَأَنَا ابْنُ تِسْعِ سِنِينَ، فَانْطَلَقَتْ بِي أُمِّي أُمُّ سُلَيْمٍ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا ابْنِي اسْتَخْدِمْهُ. ” فَخَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَ سِنِينَ، فَمَا قَالَ لِي لِشَيْءٍ فَعَلْتُهُ: لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا، وَمَا قَالَ لِي لِشَيْءٍ لَمْ أَفْعَلْهُ: أَلَا فَعَلْتَ كَذَا وَكَذَا


Musnad-Ahmad-12251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12251. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னுடைய தாயார் உம்மு ஸுலைம் (ரலி அவர்கள் நபி  (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த நேரத்தில் என்னை அழைத்துச் சென்று , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இந்த சிறுவன்  அனஸ் என்னுடைய மகன், எழுததெரிந்தவன் என்று கூறி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்ய) ஒப்படைத்தார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் அவர்கள் இதை நீ சரியாக செய்யவில்லை என குறை கூறியதில்லை.


أَخَذَتْ أُمُّ سُلَيْمٍ بِيَدِي مَقْدَمَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَأَتَتْ بِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا ابْنِي وَهُوَ غُلَامٌ كَاتِبٌ، قَالَ: ” فَخَدَمْتُهُ تِسْعَ سِنِينَ، فَمَا قَالَ لِي لِشَيْءٍ قَطُّ صَنَعْتُهُ: أَسَأْتَ، أَوْ: بِئْسَ مَا صَنَعْتَ


Musannaf-Abdur-Razzaq-17946

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17946. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் ஒருபோதும் என்னை திட்டியதில்லை. ஒருபோதும் “சீ” என்று கூறியதில்லை.

நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் என்னிடம் கூறியதில்லை.


خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، لَا وَاللَّهُ مَا سَبَّنِي سَبَّةً قَطُّ، وَلَا قَالَ لِي: أُفٍّ قَطُّ، وَلَا قَالَ لِي: لِشَيْءٍ فَعَلْتُهُ لِمَ فَعَلْتَهُ؟ وَلَا لِشَيْءٍ لَمْ أَفْعَلْهُ أَلَّا فَعَلْتَهُ


Almujam-Alawsat-5991

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5991. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

…அருமை சிறுவனே! தொழுகையில் திரும்பிப் பார்ப்பதை விட்டு உன்னை எச்சரிக்கின்றேன்.ஏனெனில் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது அழிவை ஏற்படுத்தும். அப்படி திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமென்றால் உபரியான தொழுகையில் திரும்பிப் பார்த்துக்கொள். கடமையான தொழுகையில் திரும்பிப் பார்க்காதே!…

என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள்.


قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَأَنَا يَوْمَئِذٍ ابْنُ ثَمَانِ سِنِينَ، فَذَهَبَتْ بِي أُمِّي إِلَيْهِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ رِجَالَ الْأَنْصَارِ، وَنِسَاءَهُمْ قَدْ أَتْحَفُوكَ غَيْرِي، وَإِنِّي لَمْ أَجِدْ مَا أُتْحِفُكَ بِهِ إِلَّا بُنَيَّ هَذَا، فَاقْبَلْهُ مِنِّي يَخْدِمُكَ مَا بَدَا لَكَ قَالَ: «فَخَدَمْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَشْرَ سِنِينَ، فَلَمْ يَضْرِبُنِي ضَرْبَةً، وَلَمْ يَسُبَّنِي، وَلَمْ يَعْبَسْ فِي وَجْهِي»  وَكَانَ أَوَّلُ مَا أَوْصَانِي أَنْ قَالَ: «يَا بُنَيَّ، اكْتُمْ سِرِّي تَكُنْ مُؤْمِنًا» فَمَا أَخْبَرْتُ بِسِرِّهِ أَحَدًا قَطُّ، وَإِنَّ أُمِّي وَأَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَأَلُونِي فَمَا أَخْبَرْتُهُنَّ بِسِرِّهِ، وَلَا أُخْبِرُ سِرَّهُ أَحَدًا أَبَدًا ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ، أَسْبِغِ الْوُضُوءَ يَزِدْ فِي عُمُرِكَ، وَيُحِبُّكَ حَافِظَاكَ» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ، إِنِ اسْتَطَعْتَ أَلَّا تَبِيتَ إِلَّا عَلَى وَضُوءٍ فَافْعَلْ، فَإِنَّهُ مَنْ أَتَاهُ الْمَوْتُ، وَهُوَ عَلَى وَضُوءٍ أُعْطِيَ الشَّهَادَةَ» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ، إِنِ اسْتَطَعْتَ أَلَا تَزَالَ تُصَلِّي فَافْعَلْ، فَإِنَّ الْمَلَائِكَةَ لَا تَزَالُ تُصَلِّي عَلَيْكَ مَا دُمْتَ تُصَلِّي» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ، إِيَّاكَ وَالِالْتِفَاتَ فِي الصَّلَاةِ، فَإِنَّ الِالْتِفَاتَ فِي الصَّلَاةِ هَلَكَةٌ، فَإِنْ كَانَ لَا بُدَّ فَفِي التَّطَوُّعِ لَا فِي الْفَرِيضَةِ» ثُمَّ قَالَ لِي: «يَا بُنَيَّ، إِذَا رَكَعْتَ فَضَعْ كَفَّيْكَ عَلَى رُكْبَتَيْكَ، وَفَرِّجْ بَيْنَ أَصَابِعَكَ، وَارْفَعْ يَدَيْكَ عَنْ جَنْبَيْكَ، فَإِذَا رَفَعْتَ رَأْسَكَ مِنَ الرُّكُوعِ فَمَكِّنْ لِكُلِّ عُضْوٍ مَوْضِعَهُ، فَإِنَّ اللَّهَ لَا يَنْظُرُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ لَا يُقِيمُ صُلْبَهُ» ثُمَّ قَالَ لِي: «يَا بُنَيَّ، إِذَا سَجَدْتَ فَلَا تَنْقُرْ كَمَا يَنْقُرُ الدِّيكَ، وَلَا تُقْعِ كَمَا يُقْعِي الْكَلْبُ، وَلَا تَفْرِشْ ذِرَاعَيْكَ الْأَرْضَ افْتِرَاشَ السَّبُعِ، وَافْرِشْ ظَهْرَ قَدَمَيْكَ بِالْأَرْضِ، وَضَعْ إِلْيَتَيْكَ عَلَى عَقِبَيْكَ، فَإِنَّ ذَلِكَ أَيْسَرُ عَلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ فِي حِسَابِكَ» ثُمَّ قَالَ لِي: «يَا بُنَيَّ، بَالِغْ فِي الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ، تَخْرُجْ مِنْ مُغْتَسَلِكَ لَيْسَ عَلَيْكَ ذَنْبٌ، وَلَا خَطِيئَةٌ» قُلْتُ: بِأَبِي، وَأُمِّي، مَا الْمُبَالَغَةُ فِي الْغُسْلِ؟ قَالَ: «تُبِلُّ أُصُولَ الشَّعَرِ، وَتُنَقِّي الْبَشَرَةَ» ثُمَّ قَالَ لِي: «يَا بُنَيَّ، إِنْ قَدِرْتَ أَنْ تَجْعَلَ مِنْ صَلَاتِكَ فِي بَيْتِكَ شَيْئًا فَافْعَلْ، فَإِنَّهُ يَكْثُرُ خَيْرُ بَيْتِكَ» ثُمَّ قَالَ لِي: «يَا بُنَيَّ، إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ فَسَلَّمَ، يَكُونُ بَرَكَةً عَلَيْكَ، وَعَلَى أَهْلِ بَيْتِكَ» ثُمَّ قَالَ لِي: «يَا بُنَيَّ، إِذَا خَرَجْتَ مِنْ أَهْلِكَ فَلَا  يَقَعَنَّ بَصَرَكَ عَلَى أَحَدٍ مِنْ أَهْلِ الْقِبْلَةِ إِلَّا سَلَّمْتَ عَلَيْهِ، تَرْجِعُ وَقَدْ زَيْدَ فِي حَسَنَاتِكَ» ثُمَّ قَالَ: «يَا بُنَيَّ، إِنْ قَدِرْتَ أَنْ تُمْسِيَ، وَتُصْبِحَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَافْعَلْ» ثُمَّ قَالَ لِي: «يَا أَنَسُ، إِذَا خَرَجْتَ مِنْ أَهْلِكَ فَلَا يَقَعَنَّ بَصَرُكَ عَلَى أَحَدٍ مِنْ أَهْلِ الْقِبْلَةِ إِلَّا ظَنَنْتَ أَنَّ


Shuabul-Iman-10475

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10475. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெரியோரை மதித்து நடந்துக் கொள். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து. அதனால் சொர்க்கத்தில் என்னோடு இருப்பாய்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

 


يَا أَنَسُ، وَقِّرِ الْكَبِيرَ وَارْحَمِ الصَّغِيرَ تُرَافِقُنِي فِي الْجَنَّةِ


Shuabul-Iman-8391

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8391. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும். லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன் சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


يَا أَنَسُ، إِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَصَلِّ صَلَاةَ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ مِنْ قَبْلِكَ


Shuabul-Iman-8390

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது மக்களை சந்தித்தால் ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும். நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது மார்க்கம் சீராகும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்  (ரலி)


يَا أَنَسُ، إِذَا خَرَجْتَ مِنْ بَيْتِكَ فَسَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، وَأَسْبِغِ الْوُضُوءَ يَصْلُحْ لَكَ دِينُكَ


Shuabul-Iman-8387

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8387. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அனஸே! நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாக்கப்படும். லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன் சென்ற நல்லோர்களின் தொழுகையாகும். மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும். (உன்னை விட வயதில் குறைந்த) சிறியோர் மீது அன்பு செலுத்து. அதனால் மறுமை நாளில் (சொர்க்கத்தில்) என்னோடு இருப்பாய்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்  (ரலி)

…..


يَا أَنَسُ، أَسْبِغِ الْوُضُوءَ يُزَدْ فِي عُمُرِكَ، وَصَلِّ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ قَبْلَكَ، وَسَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، وَارْحَمِ الصَّغِيرَ تُرَافِقْنِي يَوْمَ الْقِيَامَةِ

وَرَوَاهُ أَشْعَثُ بْنُ بَرَازٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَفْشِ السَّلَامَ تَكْثُرْ حَسَنَاتُكَ، وَسَلِّمْ عَلَى أَهْلِ بَيْتِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ


Shuabul-Iman-8385

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8385. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அனஸே!) உன்னுடைய வீட்டில் அதிகமாக (உபரியான தொழுகைகளை) தொழுதுக் கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும். மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்  (ரலி)


أَكْثِرِ الصَّلَاةَ فِي بَيْتِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَسِلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ


Next Page » « Previous Page